சேலையைத் தூக்கிக் கட்டிக் கொண்டு.. மானசா குத்தும் குத்து இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆலியா மானசா உடம்பை குறைத்தது தான் குறைத்தாங்க அதற்குப் பிறகு அவங்க ஆட்டத்துக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு.

கோவில் குளம் ரோடு எதுவும் பார்ப்பது கிடையாது. எப்பவும் போனும் கையுமாக ஒரே ஆட்டம்தான் .அதுவும் குத்தாட்டம் போட்டுக் கலக்குகிறார்.

சாதாரணமாக இல்லாமல், வெறித்தனமா சேலை கட்டிக்கொண்டு ஆடி இருப்பதை பார்த்து அவருடைய ரசிகர்களே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

ராஜா ராணி சீரியல்

ராஜா ராணி சீரியல்

ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமான ஆலியா மானசா அந்த சீரியலின் பெரிய வெற்றியை தொடர்ந்து அந்த சீரியலில் கதாநாயகனை காதலித்து திருமணம் செய்திருந்தாலும் ஒரு குழந்தை பிறந்ததும் கொஞ்ச நாள் நடிப்புக்கு இடைவெளி விட்டு இருந்த இவர் தற்போது குழந்தைக்கு ஒரு வயது கூட இல்லாத நிலையில் மீண்டும் நடிப்பு களத்தில் குதித்து விட்டார் .

செம டானஸ்

செம டானஸ்

அதுவும் வேற லெவலில் திரும்பி வந்திருக்கும் இவரின் ஆட்டம் தற்போது வெறித்தனமாக இருக்கிறது. நடிப்பு துறையில் இருப்பவர்கள் எப்போதுமே தன்னை அழகாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருப்பார்கள் .ஒரு சிலர் தான் தங்களை கவனிக்காமல் விட்டு விட்டால் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி விடுகிறார்கள் .ஆனால் ஆலியா மானசா அந்த ரகம் இல்லை .

கலக்க முடியும்

கலக்க முடியும்

ஒரு குழந்தை பிறந்தாலும் என்னால் பழைய கதாநாயகியாக கலக்க முடியும் என்று தன்னுடைய உடம்பை குறைத்து மீண்டும் ராஜாராணி 2வில் கலக்கிக் கொண்டிருக்கிறார் .இந்த சீரியலில் அவரது கணவர் நடிக்கவில்லை என்றாலும் திருமணம் சீரியல் கதாநாயகன் இதில் இவருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் .இந்த சீரியல் பிறமொழி சீரியலின் தழுவலாக இருக்கிறது என்று பல்வேறு ரசிகர்கள் கூறி வந்தாலும்இந்த சீரியலை ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .

முன்னேற்றம்

முன்னேற்றம்

டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னோக்கி வந்து கொண்டுதான் இருக்கிறது. அது இந்த சீரியலுக்கு கிடைத்த வெற்றி யாக தான் இவர்கள் பார்த்து வருகிறார்கள். இந்த சீரியலில் தற்போது ஆலியா மானசா சந்தியா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆல்யாவுக்கும் அவரது கணவருக்கும் முதலிரவு சீனில் பெரும் சண்டை என புரோமா போட்டுக்கொண்டிருக்கிறது விஜய் டிவி.

இப்படி ஒரு குத்தாட்டமா

இப்படி ஒரு குத்தாட்டமா

ஆனால் கோவிலுக்குள் ஆலியா மானசா விஜே அர்ச்சனாவிடம் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார் .இவரது ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் சேலை விழுந்திட போகிறது என்று காத்திருந்து இருக்கின்றனர் .ஆனாலும் அவர் அதை அழகாக அள்ளி தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆடிய ஆட்டம் தான் பல ரசிகர்களையும் தூங்கவிடாமல் பண்ணிக்கொண்டு இருக்கிறதாம்.

அட்டகாசமான ஆட்டம்

அட்டகாசமான ஆட்டம்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் சேட்டைகளையும் தன்னுடைய ஐடி அப்லோட் பண்ணுவது தவறுவதில்லை .இவர் விட்டாலும் இவரது கணவர் என்னோட பப்புவின் சேட்டைகள் என்று பதிவிட்டு விடுகிறார் .அந்த மாதிரி தான் தற்போது இவரும் இவரது கணவரும் இவர் ஆடிய ஆட்டத்தை அப்லோட் பண்ணி இருக்கிறார்கள் . இதைப்பார்த்த ரசிகர்கள் கமெண்ட் மழைகளை பொழிந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+