அந்து போச்சு... நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட ஆலியா மானசா .. கூட ஆடுவது யாருப்பா!
சென்னை: புடவை கட்டிக்கொண்டு இந்த ஆட்டம் ஆடுகிறாரே? எப்படித்தான் இவரால் இப்படி இறங்கி குத்த முடிகிறதோ என்று பார்ப்பவர்கள் அசந்து போகும் வகையில் மிரட்டல் ஆட்டம் போட்டிருக்கிறார் ஆலியா மானசா.
விஜய் டிவியின் க்யூட் நடிகைகளில் ஒருவர்தான் ஆலியா மானசா.. நடித்த ஒரே சீரியல் மூலம் பிரபலமாகி, ஜோடியாக நடித்தவரையே கல்யாணமும் செய்து கொண்ட ஆலியா இப்போது 2வது சீரியலில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் ஆலியா மானசா.

ரசிகர்கள் மனதில் ராணி
இப்போது வரைக்கும் ரசிகர்களின் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆலியா மானசா இப்படி ஒரு வீடியோவை திருமணத்திற்கு பிறகு வெளியிடுவார் என எதிர்பார்க்காத ரசிகர்கள் ஸ்வீட் ஷாக்காகி இருக்கின்றனர் .திருமணம் முடிந்தும் குழந்தை பிறந்த பிறகும் நடிக்க வருவது ஒன்றும் புதிதல்ல ஆனால் நடுத்தெருவில் சீரியல் கொழுந்தனாக நடிப்பவருடன் இவர் போட்ட குத்தாட்டம் தான் ரசிகர்களை கலகலக்க வைத்துள்ளது.

கலாய்க்கிறார்கள்
ரசிகர்களே புலம்பி தவிக்கிறார்கள் என்றால் நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா ,இவருடைய இந்த வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளி வருகின்றனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஆலியா மீண்டும் ரசிகர்களின் மத்தியில் சந்தியாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .முதல் சீசனில் செம்பா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தற்போது சந்தியா வாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஜாலி ஆட்டம்
முதல் சீரியலில் கிடைத்த வரவேற்பு இந்த சீரியலிலும் கிடைத்திருந்தாலும் திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் எப்படி பழைய ஆலியாவாகவே கலக்க முடியும் என்றுதான் பலரும் யோசித்தனர். அந்த அளவிற்கு இவர் குழந்தை பிறந்ததும் புசுபுசுவென மாறிவிட்டார் .ஆனால் மீண்டும் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து ஸ்லிம்மாக மாரி பீல்டுக்கு வந்தவர் தன்னுடைய ஜாலியான ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்.

காதலித்து திருமணம்
இவருடன் முதல் சீரியலில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் ஆலியா. சீரியலில் நடிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதியதல்ல ஆனால் திருமணம் செய்து முடிந்த பிறகும் அதே பழைய காதலுடன் இருப்பது தான் பெரியது. இவர்கள் இருவரும் ஒரே துறையில் இருப்பதால் தங்களுக்கு இருக்கும் வேலையையும் புரிந்து கொள்ள முடியும். அதனால் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் வராது என்று தங்களுடைய காதலை அடிக்கடி நிரூபித்து வருகின்றனர்.

பாப்பாவின் சேட்டைகள்
இவர்கள் ஒன்றாக சேர்ந்து செய்யும் சேட்டைகளை அடிக்கடி வீடியோக்களாக வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் அவர்களுடைய செல்லமகள் அயிலாவின் போட்டோக்களையும் வீடியோக்களையும் அதிகமாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருபவர். ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்போது ஆலியா மானசா வெளியிட்ட வீடியோக்கள் தான் பெரும் வைரலாக பரவி வருகிறது.

இன்னும் நான் ஃபிட் நாயகிதான்
குழந்தை பிறந்தாலும் நான் இன்னும் கதாநாயகி தான் என நிரூபிக்கும் வகையிலேயே இவர் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார் .அதுவும் புடவையில் இவர் போட்ட ஆட்டம் தான் செம வைரல் எதிர்பார்க்காத வகையில் வலம் வருகிறது. அந்த சீரியலில் அவருடைய கொழுந்தனாக நடிக்கும் நடிகர் பிராதுடன் ,"கிளம்பு கிளம்பு விடிஞ்சு போச்சு கிளம்பு கிளம்பு "என ரஜினியின் பாட்டுக்கு இறங்கி குத்தி இருக்கிறார்.

வைரல் டான்ஸ்
இவருக்கும் இவருடைய கணவருக்கும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக இருப்பதால் அவர்கள் இவர்களின் பெயரில் அதிகமாக ஃபேன்ஸ் பேஜ்க்களை வைத்திருக்கின்றனர் .தற்போது இவருடைய இந்த வீடியோக்களும் அந்த பேஜ்க்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்ததும் நெட்டிசன்கள் தங்களுடைய பங்குகளுக்கு ட்ரோல் பண்ணி மீம்ஸ் போட்டு வருகின்றனர் .
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications