சீரியலுக்கு நடிக்க வறேன்.. சின்னத் திரை ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆல்யா மானசா
சென்னை: விரைவில் நடிக்க வருவேன் என்று கூறி சின்னத்திரை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் சீரியல் நடிகை ஆல்யா மானசா. அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர் சின்னத்திரை ரசிகர்கள்.
நடன நிகழ்ச்சியில் திறமை காட்டினாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக நடித்து சின்னக் கண்களில் க்யூட் எக்ஸ்பிரசன்களை காட்டி ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர் ஆல்யா மானசா.
ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஆல்யா மானசா குழந்தைகளுக்காக தற்போது நடிப்புக்கு தற்காலிகாகமாக முழுக்கு போட்டிருக்கிறார். சீரியல் நடிப்பில் இருந்து விலகிய பிறகு தற்போது முழு நேர இல்லத்தரசியாகவே மாறி விட்டார்.

சஞ்சீவ் ஆல்யா மானசா ஜோடி
அவரது கணவர் சஞ்சீவ் சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்தவர். ரீல் ஜோடிகளாக வலம் வந்த இருவரையும் இணைத்து வைத்தது ராஜா ராணி டிவி சீரியல். திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடிகளாகவும் ரசிகர்களிடம் வாழ்த்து பெற்றனர். டிவி சீரியல் நடிப்பு போக சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஆல்யா மானசா, சஞ்சீவ் இருவரும் தங்களின் வீட்டில் நடப்பதை இன்ஸ்டா பக்கத்திலும் யுடுயூப் சேனலிலும் பதிவிட்டு வருகின்றனர்.

ராஜா ராணி 2 சீரியல்
முதல் குழந்தை ஐலா பிறந்த உடன் நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க ஆல்யா சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜா ராணி 2 சீரியல் மூலம் ரீ என்ட்ரி ஆனார். சஞ்சீவ் விஜய் டிவி சீரியலில் வேறு சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் முடியவே, சன் டிவியில் கயல் சீரியல் மூலம் எழில் ஆக நடித்து வருகிறார்.

இரண்டாவது குழந்தை
ஆல்யா மீண்டும் கர்ப்பமானாலும் பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு வரை ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். கடந்த மாதம்தான் அவருக்கு பையன் பிறந்தது. அதையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஆல்யா மானாசா. பையனுக்கு அர்ஸ் என்று பெயர் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியுள்ளன.

விரைவில் பார்க்கலாம்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசிய அவர், இரண்டாவது முறையாக குழந்தை பிறந்துள்ளதால் உடல் எடை கூடியுள்ளேன். தற்போது சீரியலில் நடிக்க வேண்டுமென்றால் உடல் எடையை குறைக்க வேண்டும். சரியாக சாப்பிட முடியாது. அதனால் சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருவேன் என்று கூறினார். ஆல்யா மானசாவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications