Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகை ஆல்யா மானசா வீட்டை பார்த்துள்ளீர்களா.. "ஸ்டார் ஹோட்டல்" லெவல்.. வாவ் "ஹோம் டூர்" வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆல்யா மானசா - சஞ்சய் ஜோடியின் ஹோம் டூர் வீடியோதான் இன்று இணையத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வீட்டை பார்ப்பவர்கள், அப்படியே ஆச்சரியப்பட்டு திகைத்துப்போய் விடுகிறார்கள். அப்படியென்ன இருக்கிறது அந்த வீட்டில்?

சின்னத்திரை நடிகை, ஆல்யா மானசா தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர்... ஆரம்பத்தில் டான்ஸராக இருந்த ஆல்யா மானசா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாகத்தான் அதிகம் பிரபலமானார்.. அப்போது முதல் இன்றுவரை இவரது நடிப்பிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

alya manasa sanjeev

தன்னுடன் நடித்த சஞ்சய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இந்த ஜோடி, தங்களது தொழிலில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் ஜெயித்து வருகின்றனர்.. இன்றைக்கு டாப் 10 டிவி சீரியல்களை எடுத்துக் கொண்டால், ஆல்யா - சஞ்சய் ஜோடி தான் டாப்பில் இருந்து வருகிறார்கள்.. இவர்களுக்கு 2 குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

லாக்டவுன்: கொரோனா லாக்டவுன் நேரத்தில், இந்த ஜோடி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியது.. இந்த சேனலிலும் ஆல்யா தம்பதியினர் கலக்கி கொண்டிருக்கிறார்கள். பாப்பூ, பாப்புக்குட்டி என்று இவர்கள் ஒருவரையொருவர் கொஞ்சி பேசி பதிவிடும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. தங்களது வீட்டில் எந்த ஒரு சின்ன நிகழ்வு நடந்தாலும், அதை தங்களது சேனலில் பதிவிட்டு, லைக்ஸ்களை லட்சக்கணக்கில் அள்ளிவிடுவார்கள்.
இந்த தம்பதியினர் கடினமாக உழைத்து ஒரு வீடு கட்டி இருக்கிறார்கள்.. இந்த வீடு கட்டுவதற்கு முன்பும்சரி, கட்டும்போதும்சரி, கட்டி முடித்தபிறகும்சரி, தங்களது புதுவீட்டின் ஒவ்வொரு பரிமாணத்தையும், வீடியோக்களாக வெளியிட்டு வந்தனர்..

alya manasa sanjeev

சின்ன வீடு: அதேசமயம், தாங்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தோம் என்பது குறித்தும் இருவருமே பலமுறை பேட்டிகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.. "ஒரு சின்ன வீட்டில் நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம்.. அதனால் இப்போது எங்கள் ஆசைப்படி வீடு வாங்கி இருக்கிறோம்.. இந்த வீடு சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.. அதை முழுக்க முழுக்க லோனில் கட்டியிருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.

1.8 கோடி ரூபாயில் வீடு கட்டியிருப்பதைவிட, அதை வெளிப்படையாகவே ஆல்யா கூறியிருந்ததுதான், பலராலும் உற்றுநோக்கப்பட்டது.. அதுமட்டுமல்ல, ஒருமுறை ஆல்யாவின் சம்பளம் குறித்து கேட்கப்பட்டதற்கு, 2022ல், இனியா தொடரின் மூலம் ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை சம்பளமாக தரப்பட்டதாம்.. இப்போது, ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை சம்பளம் வாங்குவதாகவும் சொல்லியிருந்தார்.

வெளிப்படைத்தன்மை: பெரும்பாலும் வெளியில் சொல்லத்தயங்கும் விஷயங்களை அசால்ட்டாகவும், அநாயசமாகவும் கூறியிருந்தார் ஆல்யா. லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆல்யாவுக்கு இருந்து வருவதற்கு இதுபோன்ற வெளிப்படைத்தன்மையும் காரணமாக இருக்கலாம்..

alya manasa sanjeev

அத்துடன், 1.8 கோடி ரூபாய் புதுவீட்டின் மீதான எதிர்பார்ப்பு பலருக்கும் அதிகரிக்கவும் துவங்கிவிட்டது. இந்த வீட்டில், பிரம்மாண்டமான கிச்சன், மற்றும் லிப்ட் வசதி வைத்திருப்பதாகவும், மாடியில் ஒரு ஆடிட்டோரியம் என்று கலை நயத்தோடு பெரிய பங்களா போல வீட்டை கட்டி முடித்துள்ளதாகவும் ஏற்கனவே இந்த தம்பதியினர் கூறியிருந்தனர். வீட்டில் நிறைய கண்ணாடி வைத்து வேலைப்பாடுகளையும் செய்துள்ளார்களாம்.. ஒவ்வொரு ரூமுக்கும் பெரிய AC பொருத்தப்பட்டுள்ளதாம்.

ஹோம் டூர்: இதுநாள் வரை சென்னையில் லீசுக்கு வீடு எடுத்திருந்த நிலையில், தற்போது சொந்தமாக ஒரு நிலம் வாங்கி அதில் பிரம்மாண்ட வீடு கட்டி, கிரகப்பிரவேசமும் முடித்திருக்கிறார்.. இந்த புதிய வீட்டின் "முதல் ஹோம் டூர்" வீடியோவையும் பிரபல சேனல் ஒன்றிற்காக பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோவில், முதலில் புதிய வீட்டின் ஹால் பகுதி காட்டப்படுகிறது.. வீட்டிற்குள் நுழைந்ததுமே, வீடு முழுக்க ஏசி பொருத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது.. ப்ளூ & மஸ்டர்ட் கலர் என இருவகையான பெரிய பெரிய சோபாக்கள் ஹால் பகுதியை ஆக்கிரமித்துள்ளன.. அதற்கு நடுவில் பிரம்மாண்டமான டிவி, அதற்கு பக்கத்திலேயே மினி டிவி என கச்சிதமாக வைக்கப்பட்டுள்ளது. அழகான குப்பைத்தொட்டி, தலைமுடியை உலர்த்த டிரையர் என சகலமும், ஆங்காங்கே பொருத்தமான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

பூரிப்பு: உண்மையிலேயே அந்த ஹாலை பார்ப்பதற்கு, ஸ்டார் ஓட்டலுக்குள் இருப்பதை போலவே இருக்கிறது.. வீட்டிலுள்ள பொருட்களும் ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன.. அதேபோல, தம்பதி இருவரின் முகத்திலும் கடினமாக உழைத்து முன்னேறி, கனவு இல்லத்தை கட்டியதற்கான பூரிப்பையும் காண முடிகிறது.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+