Amaran Ott: “அமரன்” ஓடிடியில் ரிலீஸ்.. எப்போது, எதில் பார்க்கலாம்? வெளியான அப்டேட்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாக போகிறது என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் பார்க்கலாம்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து இருந்தனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மின்னலே பாடல் பலருடைய ரீல்ஸ்களில் இடம் பிடித்து கொண்டிருக்கிறது.
மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் முகுந்த் கேரக்டரிலும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருந்தனர்.

உலக அளவில் சுமார் 900க்கு மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. அதனாலயே திரையரங்குகளில் தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் நாளில் இந்த திரைப்படம் 42.3 கோடியை வசூலித்ததாகவும் தயாரிப்பு நிறுவன அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதல் நாளில் பெரிய வசூலை பெற்ற திரைப்படம் இதுதான். தொடர்ந்து ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உலக அளவில் 300 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இது திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகிய எட்டு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகலாம். ஆனால் அமரன் திரைப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஓடிடியில் வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர்.

அதனாலேயே இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாவது தள்ளி போயிருந்தது. இந்த நிலையில் இந்த படம் டிசம்பர் ஐந்தாம் தேதி அல்லது 11-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் உரிமையை netflix 60 கோடி கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுபோல தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உட்பட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு தேசிய உணர்வு ஊட்டும் வகையில் அமரன் திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தை காண ரெடியா இருக்கீங்களா மக்களே!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications