Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Amaran Ott: சர்ச்சைகளை தாண்டி இன்று ஓடிடியில் வெளியான “அமரன்”.. எந்த தளத்தில் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் இன்று netflix ஒடிடியில் வெளியாகி இருக்கிறது. கடந்த தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் எந்த அளவிற்கு பாராட்டுகளை பெற்றதே அதுபோல பல சர்ச்சைகளும் எழுந்து வந்தது. ஆனாலும் இன்று ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து இருந்தனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மின்னலே பாடல் பலருடைய ரீல்ஸ்களில் இடம் பிடித்து கொண்டிருக்கிறது.

ott amaran

மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் முகுந்த் கேரக்டரிலும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருந்தனர்.

உலக அளவில் சுமார் 900க்கு மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. அதனாலயே திரையரங்குகளில் தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் நாளில் இந்த திரைப்படம் 42.3 கோடியை வசூலித்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதல் நாளில் பெரிய வசூலை பெற்ற திரைப்படம் இதுதான். தொடர்ந்து ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உலக அளவில் 300 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இது திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் ஓடிடியில் வெளியிடக்கூடாது என்று சிலர் வழக்கு தொடர்ந்தும் இருந்தனர். அதிலும் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் சாய் பல்லவி ஒரு செல்போன் என்னை கசக்கி எறிந்து விட்டு போவார், அந்த செல்போன் நம்பரை ஒரு கல்லூரி மாணவர் பயன்படுத்தி வந்த நிலையில் அந்த மாணவருக்கு அதிகமானோர் போன் பண்ணி சிவகார்த்திகேயன் எங்கே என்றும் சாய் பல்லவி எங்கே என்றும் அடிக்கடி தொந்தரவு செய்வதாக அந்த மாணவர் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்து இருந்தார்.

ott amaran

அதோடு ஓடிடியில் இந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்றும் அவர் அந்த மனுவில் கூறியதாக கூறப்பட்டது. ஆனாலும் இந்த சர்ச்சைகளை எல்லாம் தாண்டி இன்று இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் உரிமையை netflix 60 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோல தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உட்பட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு தேசிய உணர்வு ஊட்டும் வகையில் அமரன் திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தை காண ரெடியா மக்களே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+