அமராவதி படத்தில் நடிக்க இருந்தது இந்த சீரியல் நடிகரா? அஜித்துக்கு வாய்ப்பு வந்தது இப்படியா? லீக்கான ரகசியம்
சென்னை: நடிகர் அஜித் இன்று புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருந்தாலும் அவருக்கு ஆரம்பத்தில் பெயர் வாங்கி கொடுத்தது அமராவதி திரைப்படம் தான். தமிழில் அஜித் அமராவதி திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகம் ஆகி இருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு முதலில் இன்னொரு சீரியல் நடிகருக்கு தான் போயிருக்கிறது.
அந்த குறிப்பிட்ட சீரியல் நடிகர் போனை எடுக்காத காரணத்தால் அமராவதி திரைப்பட வாய்ப்பு அஜித்துக்கு கிடைத்து அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்து இருக்கிறது. அதிலும் அஜித் உடைய பெயரை அமராவதி திரைப்படத்திற்கு ரெக்கமண்ட் செய்தது பாடகர் பாலசுப்ரமணியன் தானாம்.

அந்த வகையில் இப்போது அஜித்தா விஜய்யா என்று பல ரசிகர்கள் அடித்துக் கொண்டிருந்தாலும் நிஜத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் அஜித் ஆரம்பமான முதல் திரைப்படமான அமராவதி திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் ஒன்று. அதிலும் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு முன்பு நடிக்க இருந்தது ஒரு சீரியல் நடிகர் தான் என்றும் அந்த சீரியல் நடிகரின் வாய்ப்பைதான் அஜித் தட்டி தூக்கி இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அதாவது தலைவாசல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் செல்வா ரெடி பண்ணி வைத்திருந்த திரைப்படம் தான் அமராவதி. இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நடித்த நடிகர்களை நடிக்க வைக்காமல் புது முகங்களை நடிக்க வைக்கலாம் என்ற ஐடியாவில் செல்வா இருந்திருக்கிறார். அப்போது அந்த திரைப்படத்தை சோழா பொன்னுரங்கம் தயாரிக்க இருந்திருக்கிறார்.
முதலில் அமராவதி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க சீரியல் நடிகர் விஜய் அதிராஜுக்கு தான் வாய்ப்பு சென்றதாம். ஆனால் அவருடைய போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும் காரணம் விஜய் அதிராஜ் தனக்கு வந்த போனை எடுக்காமல் மிஸ் பண்ணி விட்டாராம். இதனால் செல்வா தன்னுடைய நண்பரான பாடகர் பாலசுப்பிரமணியத்திடம் புதுமுக நடிகரை நடிக்க வைக்கலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்

அதோடு அதற்கான சில குவாலிபிகேஷனும் சொல்லி இருக்கிறார். அதாவது இந்த திரைப்படத்தின் கதாநாயகன் கொஞ்சம் ஸ்மார்ட் மற்றும் யங்காக இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தாராம். அப்போது பாலசுப்ரமணியன் தெலுங்கில் இப்போது பிரேம புஸ்தகம் என்ற படம் வெளியாகி இருக்கிறது. அதில் நடித்திருக்கும் புதுமுக நடிகர் அஜித்தை கேட்டுப்பார்க்கலாம் என்று ஐடியா கொடுத்திருக்கிறார்.
ஆனால் அப்போ அஜித்துக்கு தமிழ் முழுசா தெரியாதாம். அதுபோல டான்ஸ் ஆட கூட தெரியாதாம். அவருடைய அழகுக்காக மட்டும்தான் அமராவதி திரைப்படத்தில் அவரை அழைத்து வந்திருக்கிறார்கள். ஆனால் இது தயாரிப்பாளருக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லையாம். அது போல அந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷனில் அஜித்துக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாம். அதனால் அவர் சில மாதங்கள் படுத்த படுக்கையாக தான் இருந்திருக்கிறார். அதனால் தான் அந்த திரைப்படத்திற்கு நடிகர் விக்ரம் தான் டப்பிங் பேசியிருந்தாராம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications