ஆளே அடையாளம் தெரியலயே நிஷாந்தி.. 30 வருடம் கழித்துவந்து.. சாந்திப்ரியா பூரித்து சொன்ன முதல் வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் ஏற்கனவே நடித்தவர்களுடன் மீண்டும் நடிக்க ஆசைப்படறேன். மறுபடியும் எல்லாரையும் செட்டில் போய் பார்க்கணும்னு நினைக்கிறேன்" என்று பிரபல நடிகை சாந்திப்ரியா தன்னுடைய விருப்பத்தை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அனுராக் காஷ்யப், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம், பேட் கேர்ள் என்ற படத்தை தயாரித்துள்ளனர். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வர்ஷா பாரத் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா 30 வருடங்கள் கழித்து நடித்துள்ளார்.

television

Filmibeat யூடியூப் சேனலுக்கு நிஷாந்தி எனப்படும் சாந்திப்ரியா தந்துள்ள பேட்டியில், "நான் மும்பையில் வசித்து வருகிறேன்.. மறுபடியும் படங்களில் நடிக்கணும்னு ஆசை இருந்தது.. 2 வாய்ப்புகளும் நடிக்க வந்தது.. ஆனால், சரியாக அதுசெட் ஆகல.. திடீர்னு ஒருநாள் எனக்கு போன் வந்தது.. படத்தின் டைரக்டர் வர்ஷா என்னிடம் பேசினார்.. வெற்றிமாறன் தயாரிப்பில் உங்களுக்கு நடிக்க விருப்பமா? என்று கேட்டார். கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொன்னேன்..

மேக்கப்: ஆனால், இந்த படம் முழுக்க உங்களுக்கு மேக்கப் இருக்காது, பரவாயில்லையா? என்று கேட்டார்கள்.. மேக்கப் இல்லைன்னாலும், சுத்தமா இல்லாமல் இருக்காது, கொஞ்சமாவது மேக்கப் இருக்கும்தானே? என்று கேட்டேன். ஏனென்றால், மேக்கப், லிப்ஸ்டிக் எதுவுமே இல்லாமல் நானும், என் அக்காவும் எங்கு வேண்டுமானாலும் போவோம். ஆனால், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் என்றால், சிறிதுகூட மேக்கப் இல்லாமல் பங்கேற்றது இல்லை..

ஆனால், வர்ஷா, இந்த படத்தில் சுத்தமாக மேக்கப் கிடையாது, "டிரஸ்ட் மீ" என்று ஒரு வார்த்தை சொன்னார்.. மேக்கப் இல்லாமல் ஒரு போட்டோ எடுத்து அனுப்புங்கள் என்றும் கேட்டார்.. நானும் மேக்கப் இல்லாமல் போட்டோ எடுத்து அனுப்பி வைத்தேன். அதை பார்த்ததுமே, நான் தேடிக்கொண்டிருந்த முகம் இதுதான் என்று என்று சொன்னார். அப்பறம்தான் அந்த படத்தில் நான் கமிட் ஆனேன்.

டிரஸ்ட் மீ: புருவம், உட்பட எதுவுமே மேக்கப் சம்பந்தமாக செய்யக்கூடாது என்றார்கள். நானும் அப்படியே செய்தேன்.. தலைமுடிக்குகூட ஹைலைட் இல்லாமல் கருப்பு கலர் அடித்தார்கள்.. நீண்ட நாட்கள் கழித்து இந்த படித்தில் நடித்தேன்.. முதல் காட்சியே என்னை வைத்துதான் எடுத்தார்கள்..

அப்போதுதான் முதல்முறையாக வெற்றிமாறனை சந்தித்தேன்.. என்னுடைய அக்கா, அண்ணனுக்கு வெற்றிமாறனுடன் நல்ல நட்பு உள்ளது என்றாலும், நான் அன்றுதான் அவரை சந்தித்து, நன்றி சொன்னேன். அவருடைய டைரக்‌ஷனிலும் நடிக்க விருப்பம் தெரிவித்தேன்.

செண்பகமே: பிரபு, அர்ஜூன், விஜயகாந்த்கூட எல்லாம் நான் நடிச்சிருக்கேன். ஆனாலும் இன்றுவரை என்னை எங்க ஊரு பாட்டுக்காரன் செண்பகமே, செண்பகமே என்றுதான் என்னை சொல்கிறார்கள்.. இதை மாற்றக்கூடிய அளவுக்கு இன்னொரு கேரக்டர் வருமா என்று காத்திருந்தேன்.. அது விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

television

ஆத்தா நான் பாஸாயிட்டேன் படத்தில் அர்ஜூனுடன் சேர்ந்து நடித்திருந்தேன். அவர் இப்போதும் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார்.. நான் அவருடன் நடித்தபோது என்னை நிறைய என்கரேஜ் செய்தார்.. நாங்கள் இருவரும் நிறைய கேரக்டர் பற்ற பேசிக்கிட்டே இருப்போம்.. அர்ஜூன் மாதிரியே அந்த காலகட்டத்தில் இருந்த நடிகர்கள் எல்லாருமே ஒருவருக்கொருவர் சகஜமாகவே பேசிக் கொள்வார்கள்.

லியோ படம்: இப்போ லியோ படம் பார்த்தபிறகுதான், என்னுடன் நடித்தவர்கள் எல்லாம் இன்னமும் நடித்து கொண்டிருக்கிறார்களே, நான் மட்டும் ஏன் முட்டாள் போல ஒதுங்கியிருக்கிறேன் என்று எனக்கு தோன்றியது. அதனால மறுபடியும் சினிமாவில் ரீஎன்ட்ரி தர நினைத்தேன்., நான் ஏற்கனவே நடித்தவர்களுடன் மீண்டும் நடிக்கவும் ஆசைப்படறேன். மறுபடியும் எல்லாரையும் செட்டில் போய் பார்க்கணும்னும் நினைக்கிறேன்" என்று தன்னுடைய விருப்பத்தை கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+