"பூ நடிகை"யால் தொலைந்த நடிகர்.. அதுவிடுங்க, மைக் மோகனின் சிறந்த குணம்.. இன்னமும் அதே கிரேஸ்: பிரபலம்
சென்னை: மணிவண்ணன், ரங்கராஜ், மனோபாலா போன்றோர்களை டைரக்டர்களாக மாற்றிய பெருமைக்குரியவர் மோகன். கோபுரங்கள் சாய்வதில்லை, என்று மணிவண்ணனுக்கு இவர்தான் வாய்ப்பு தந்தார். அதனால், டைரக்டர்களுக்கு எப்போதுமே மோகன் மீது தனி மரியாதை உண்டு என்று பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
Reflect LifeStyle என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் பேசியிருந்த சபிதா ஜோசப், "மைக் மோகன் என்பது அவரது பட்டம் கிடையாது. "வெள்ளி விழா நாயகன்" என்பதே அவரது பட்டம்.. அவரது சொந்த பெயர் மோகன் ராவ்.. பெங்களூரில் ஒரு பேங்க்கில் வேலை பார்த்துட்டு இருந்தார்.. சினிமா ஆசையால் நடிக்க வந்தவர்.. எம்ஜிஆர் மீது மிகப்பெரிய ஆசை, பற்று அவருக்கு இருந்தது. எம்ஜிஆரின் தமிழ் படங்கள் பெங்களூரில் ரிலீஸ் ஆனால், அதை முதலிலேயே சென்று பார்த்து விடுவார்.

நெஞ்சத்தை கிள்ளாதே
அந்த நேரத்தில் பாலுமகேந்திரா, கோகிலா என்ற ஒரு படத்தை எடுக்க முடிவு செய்திருந்தார்.. கமல் சார் ஹீரோவாக நடித்திருந்த அந்த படித்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து, பாலுமகேந்திராவின் மூடுபனி படத்திலும் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். டைரக்டர் மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுஹாசினி,.. கேமரா வுமனாகவும் சுகாசினி அதில் பணியாற்றினார்.
தமிழ் சினிமாவில் ஹிட் ஜோடி
கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை இந்த இரண்டு படங்களுமே அவருக்கு ஹிட்டாயின. பிறகு மோகனுக்கு வரிசையாக படங்கள் ஹிட்டாயின. அதில் மோகனுக்கு சில படங்களில் ஜோடியாக நடித்திருந்தார் பூ நடிகை.. இதனால் இவர்களை ராசியான ஜோடி என்று சினிமா உலகில் சொன்னார்கள். இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது.. இருவருமே லவ் பண்ணுவதாக, அன்னைக்கு கிசுகிசுக்களும் பெரிய அளவில் பேசப்பட்டன..
பாம்குரோவ் ஓட்டலில்தான் மோகன் தங்கியிருந்தார்.. தமிழ் சினிமாவின் பெரும்பாலான டிஸ்கஷனும் அங்கேதான் நடக்கும். ஒருநாள், பாம்குரோவ் ஓட்டல் வாசலில் மோகனின் கார் நிற்கிறது.. காரின் முன்பகுதியில், இருவருமே ஏறி உட்கார்ந்திருந்தனர்.. அப்போது பூ நடிகை, மோகனின் தோள் மீது கை போட்டுக்கொண்டு பேசிக் கொண்டிருந்தாராம்.. இதைப்பார்த்த பாக்யராஜ், "என்ன கலிகாலம்? இப்படியெல்லாம் ஹீரோயின்கள் பேசிட்டு இருந்தால் எப்படி?" என்று புலம்பிட்டே போனதாக, நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
பூ நடிகையின் கோபம்
மோகனை பூ நடிகை விரும்பினார், ஆனால் மோகன் அவரை விரும்பவில்லை.. இந்த கோபம் பூ நடிகைக்கு இருந்தது.. அந்த கோபத்தில்தான், ஏதோ ஒரு நோய் மோகனுக்கு இருப்பதாக பரப்பிவிடப்பட்டது.. "யானைக்கும் பெண்ணுக்கும் ஏமாற்றம் தாங்க முடியாது" என்பார்கள்.. அந்த வகையில், பூ நடிகையின் கோபத்துக்கு மோகன் பழிவாங்கப்பட்டார்.
ஆனால், இப்படியொரு குற்றச்சாட்டை அவர் நேரடியாக வைக்கவில்லை. அப்படி வைத்திருந்தார் மோகன் எதிர்வினையாற்றியிருப்பார். அப்படியே இருந்தாலும், இந்த புரளியை கிளப்பிவிட்டது பூ நடிகைதான் என்பதை உறுதிப்படுத்தவும் முடியாது. எனவே, அதை பெரிதாக எடுத்துக்கல.
அடுத்தடுத்து சறுக்கல்கள்
அதற்கு பிறகு மோகனுக்கு படங்கள் எல்லாம் குறைய துவங்கிவிட்டன. சின்ன சின்ன படங்கள் மட்டுமே நடித்தார்.. வாழ்க்கையில் பின்னுக்கு தள்ளப்பட்டார்..
அதேபோல, உருவம் என்ற படத்தில் கொடூரமான பேயாக நடித்திருந்தார்.. மோகன் மாதிரியே தங்களுக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று பெண்கள் எல்லாரும் விரும்பினார்கள்.. ஆனால் அவர் பேய் உருவத்தில் நடித்ததால்,அவரது இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டது. அவரது மார்க்கெட்டும் குறைந்து ஓரங்கட்டப்பட்டார். அந்த இமேஜ் அப்போதைக்கு டேமேஜ் ஆனாலும், இப்போதும் அவருக்கு நல்ல பெயர் இருந்து வருகிறது. இப்போதும் நடித்து வருகிறார். ஆனால், அவர் எடுத்த 2 படங்களும் சரியாக போகல.
எஸ்.என். சுரேந்தரும் நன்றியும்
மணிவண்ணன், ரங்கராஜ், மனோபாலா போன்றோர்களை டைரக்டர்களாக மாற்றியவர் மோகன். கோபுரங்கள் சாய்வதில்லை, என்று மணிவண்ணனுக்கு இவர்தான் வாய்ப்பு தந்தார். அதனால், டைரக்டர்களுக்கு எப்போதுமே மோகன் மீது தனி மரியாதை உண்டு..
மோகனுக்கு டப்பிங் பேசியவர் மோகனின் மாமா எஸ்.என்.சுரேந்தர்.. மோகனுக்கு டப்பங் பேசியே நிறைய சம்பாதித்தார். ஆனாலும் தனக்கு மோகன் நன்றி சொல்லல என்று சுரேந்தர் புலம்பிட்டே இருந்தார். மோகனும் பலமுறை சுரேந்தருக்கு நன்றி சொன்னாராம்.. அதுக்காக சுரேந்தர் வீட்டு கதவை தினமும் தட்டி, "நன்றி சார்" என்று சொல்லிட்டே இருக்க முடியுமா? என்று கேட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications