ராஜேஷூக்கு லாஸ்ட் நிமிடத்தில் இப்படியா? தெருவில் நடையாய் நடந்தும்கூட.. டாக்டர்கள் சொல்வது இதுதான்
சென்னை: மாரடைப்பு என்பது சிந்திப்பதற்குள் உயிர் போயிடும். ராஜேஷ் உடற்பயிற்சி, நடைபயிற்சிகள் செய்தது அவரது மரணத்தை எளிமையாக்கியிருக்கிறது. தொந்தரவு தராத எளிய மரணம் " என்று மூத்த அரசியல் விமர்சகர், டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார்.
ராஜேஷின் சகோதரர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "காலை 6 மணிக்கெல்லாம் அண்ணன் என்னை அழைத்திருந்தால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருப்பேன். 6 - 6..30 மணிக்கு வந்தவர், 8 மணி வரை சித்தா டாக்டர் பேசிக்கொண்டே இருந்துவிட்டார். காலை 8 மணிக்கு பிறகுதான் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

அசௌகரிய உணர்வு
காலை 6 மணிக்கு அண்ணன் அசெளகரியமாக உணர்ந்த பிறகு, தாமதம் செய்ததுதான் பெரிய பிரச்னையாகிவிட்டது. நெஞ்சு வலிப்பதாக அண்ணன் கூறவில்லை. இரவு முழுவதும் தூங்கவில்லை. மூச்சுவிடவில்லை என்றுதான் கூறினார். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்ததால் அடிக்கடி அண்ணன் மருத்துவமனைக்கு சென்று வருவார்" என்றார்.
இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "யோகா செய்வதால் சில பயன்கள் உள்ளன.. நான் சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்தபோது, இதய நோய் துறையிலுள்ள நோயாளிகளுக்கு யோகா பயிற்சி தர சம்மதம் தெரிவித்தோம். அதன்படியோ யோகா பயிற்சி அவர்களுக்கு செய்தும், எந்த மாறுதலும் தெரியவில்லை...
இதயநோய் தீவிரம்
ஆசனங்கள் செய்வதால், இதய நோய் தீவிரம் குறையவும் இல்லை என்பதால், அந்த முயற்சியை கைவிட்டுவிட்டோம். எந்த பயிற்சியாக இருந்தாலும் 50 வயதாகிவிட்டதால், நிறுத்திவிட வேண்டும். அதேபோல, யாராக இருந்தாலும், 40 வயதுக்கு மேல் ஜிம்முக்கு போவதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிலும் இரவு ஓய்வில் இருந்துவிட்டு, காலையில் வியர்க்க வியர்க்க வாக்கிங் செல்வதையும் குறைக்க வேண்டும்.
மாரடைப்பு என்பது சிந்திப்பதற்குள் உயிர் போயிடும். ராஜேஷ் உடற்பயிற்சி, நடைபயிற்சிகள் செய்தது அவரது மரணத்தை எளிமையாக்கியிருக்கிறது. தொந்தரவு தராத எளிய மரணம்..
சினிமா அறிவுஜீவி
திருவல்லிக்கேணியில் பள்ளி ஆசிரியர் காலத்திலிருந்தே எனக்கு ராஜேஷை தெரியும்.. சினிமாஅறிவு ஜீவிகளில் ஒருவர் ராஜேஷ்.. அநத காலத்திலிருந்தே என்னுடைய நெருங்கிய நண்பர்.. அவர் நடத்திய ஓட்டல்களில் நான் சாப்பிட்டிருக்கேன்.. விழுப்புரம் போற வழியில் 2 ஓட்டல்களை நடத்தினார்.. நிறைய வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டார்.. பொருளாதார ரீதியாக பல வகைகளில் பத்திரப்படுத்திக் கொண்டார்.. சினிமா ஒருநாள் விழுந்துவிடும் என்பதை அன்றே கணித்தார்..
79 வயதுக்கு பிறகுதான் தன்னுடைய மரணம் நடக்கும் என்று கணித்திருந்தார். ஆனால், யாராலும் மரணத்தை அப்படி கணிக்க முடியாது.. பைபாஸ் சர்ஜரி சமீபத்தில் செய்திருந்தார்.. ஆனால், எல்லாருக்குமே பைபாஸ் செய்துவிட முடியாது.. உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை பார்த்துதான் செய்ய வேண்டும்.
இதயத்தின் ஆயுள்
இதனிடையே பிரபல மருத்துவர் டாக்டர் சொக்கலிங்கம் ராஜேஷ் மரணம் குறித்து சொல்லும்போது, "இந்தியாவில், 25 வயதிலேயே ஆண், பெண் இரு பாலரும் மாரடைப்பால் இறக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 90 பேர் இறக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை.
சீரான எண்ணம், சீரான உணவு, சீரான உடற்பயிற்சி இந்த மூன்று மந்திரங்களைக் கடைப்பிடித்தால், இதயத்தின் ஆயுளை நீட்டிக்க முடியும். இதயம் 125 வருடங்கள் இயங்குவதற்காகப் படைக்கப்பட்டது. ஆனால் 100, 80, 70 வயதிலேயே மரணம் நேர்வதற்கு இந்த மூன்று மந்திரங்களைக் கடைப்பிடிக்காததே காரணம்.
கொலஸ்ட்ரால் படிவதற்கு 100% மகிழ்ச்சி இழப்பதே காரணம். கொலஸ்ட்ரால் படிவதற்கு 15-20 வருடங்கள் ஆகும். ராஜேஷுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். மன அழுத்தம் இருந்திருக்க வேண்டும். உலக அளவில் மாரடைப்பு காலை 5 மணி முதல் 8 மணி வரைதான் வரும். இரவில் சரியாக தூங்காதவர்கள், தாமதமாக சாப்பிடுபவர்கள், மன அழுத்தத்துடன் தூங்கச் செல்பவர்கள் ஆகியோருக்கு அட்ரீனல் ஹார்மோன் அதிகரிக்கும். இதுதான் மாரடைப்புக்கான காரணம்.
ரத்தத்தில் கொலஸ்ட்ரால்
ரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிந்து அடைப்பு ஏற்பட 20 வருடங்கள் ஆகும். ஆனால் திடீர் மன அழுத்தம் (acute stress) ஏற்படும்போது, இரத்தக்குழாயில் ஒரு சிறிய கீறல் விழுந்து, அந்த இடத்தில் இரத்தம் உறைந்துவிடும். இதனால் 100% அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு கரோனரி த்ரோம்போசிஸ் என்று பெயர். இரத்தம் உறைவது ஒரு முக்கிய காரணம். ராஜேஷுக்கும் இதுதான் நடந்திருக்க வேண்டும்.
20 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவரும் கட்டாயம் ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சிஜி, எக்ஸ்ரே. இவைகளை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை செய்து கொண்டே இருக்க வேண்டும்" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications