ரஜினி கிட்டயே அசிங்கமாக சிக்கி.. சுருளி ராஜன் நினைவிருக்கா? சென்சார் போர்டுக்கு கத்தரி தேவை: பிரபலம்
சென்னை: பெரிய டைரக்டர்கள் என்று சொல்லி கொள்வோருக்கு சமூக பொறுப்பும் அவசியமாகும்... போதை வஸ்துகளை சர்வ சாதாரணமாக படங்களில் காட்டுவதற்கு வெட்கமாக இல்லையா? சென்சார் போர்டு இதன் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஏற்கனவே பெரிய படம், சின்ன படம் என்ற பாகுபாடு பார்ப்பதாக விமர்சனங்கள் உள்ள நிலையில், இனி வரும் காலங்களிலாவது, தமிழ் சினிமாவில், போதை வஸ்துக்கள் குறித்த சீன்களுக்கு உச்சபட்ச கத்திரியை வைக்க வேண்டும்" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கேட்டுக் கொண்டுள்ளார்.
Ceheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "போதைக்கு அடிமையாகிவிட்டேன் என்று ஸ்ரீகாந்த் வாக்குமூலமே தந்துவிட்டார்.. தனக்கு இரைப்பையில் பிரச்சனை, இதய படபடப்பு இருப்பதால், போதையை உபயோகிக்கவில்லை என்று நடிகர் கிருஷ்ணா கூறிருக்கிறார். ஆனாலும், 20 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்துள்ளது.. அவரது செல்போன் மெசேஜ்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

உச்சக்கட்ட போதை
அதில், நேரடியாக கிருஷ்ணா போதையை பெறாமல், டிரைவர்கள் உட்பட ஆட்கள் மூலமாக பெற்றுள்ளார்.. இந்த அளவுக்கா உச்சக்கட்டத்தில் போதை கலாச்சாரம் உள்ளது? என்ற அதிர்ச்சிதான் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது..
இன்றைய காலகட்டத்தில் படம் எடுக்கக்கூடிய டைரக்டர்கள், குறிப்பாக, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் போன்றோர் எல்லாம் சர்வசாதாரணமாக போதை கடத்தலை வைத்து படம் எடுப்பது அதிகரித்துவிட்டது, அதிலும் பெரிய பெரிய நடிகர்களை வைத்துதான் இவர்கள் படங்களை எடுக்கிறார்கள்.
போதை எப்படி தயாரிக்கப்படுகிறது? எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? எப்படி பயன்படுத்துவது? என்றெல்லாம் சீனுக்கு சீன் வைக்கும்போது, அதில் இந்த உச்ச நடிகர்களை வைத்து படங்களை எடுக்கும்போது, கோடிக்கணக்கான இளைஞர்கள் அந்த படத்தை பார்க்க நேரிடுகிறதே என்ற எண்ணம்கூட இன்றைய இளைஞர்களுக்கு வருவதில்லை? என்றும் பலர் வேதனை தெரிவிக்கிறார்கள்.
போதை பொருட்கள்
போதைப்பொருட்களை சினிமாக்களில் ஏன் காட்ட வேண்டும்? இதில் ஏன் பெரிய நடிகர்கள் நடிக்க வேண்டும்? என்று தெரியவில்லை- 80களில் ரஜினிகாந்த் சினிமாவில் சிகரெட் பிடிப்பதுபோல, மது அருந்துவதுபோல காட்சிகளில் நடித்தபோது, மிகப்பெரிய எதிர்ப்பு அப்போது வந்தது.. ஆனால், அதிலிருந்து எமன் வாயிலிருந்து மீண்டு வந்து, யாரும் சிகரெட், மதுவை தொட வேண்டாம், என்னை போல தவறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறார்..
ஷூட்டிங்கில் கெட்ட வாடை
ஒரு படத்தின் ஷூட்டிங்கின்போது, ரஜினிகாந்த் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, ஒரு கெட்ட வாடை வந்துள்ளது.. உடனே தன்னுடைய உதவியாளரை அழைத்து, எங்கிருந்தோ வாடை வருகிறது, என்னன்னு பாருங்க என்று சொன்னார். அப்போதுதான், அந்த படத்தின் டைரக்டர் உட்பட ஒருசிலர் போதையை எடுத்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது..
உடனே அந்த டைரக்டரை அழைத்து, சத்தம் போட்டுள்ளார் ரஜினி..நான் ஷூட்டிங் இருக்கும்வரையில், போதையை தொடாதீர்கள் என்று திட்டியதுமே, டைரக்டர் உட்பட அந்த டீம் மொத்தமும் வெட்கி தலைகுனிந்து வெளியே சென்றுவிட்டார்கள். அந்த அளவுக்கு பட்டு அவதிப்பட்டு வந்ததால்தான், ரஜினி இவ்வாறு கண்டித்துள்ளார்..
சுருளிராஜன்
சுருளிராஜன் என்ற நடிகர் இருந்தார்.. மிக அற்புதமான, திறமையான நடிகர்.. தன்னுடைய போதை காரணமாகவே, குடித்து குடித்து 42 வயதிலேயே இறந்துவிட்டார்.. இன்று கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் போன்றோர் யாராக இருந்தாலும், இவர்களை யாருமே நியாயப்படுத்தவில்லை. அதேசமயம், விற்பனை செய்வது மட்டுமே தவறில்லை, உபயோகிப்பதும் தவறுதான் என்று அனைவருமே சொல்கிறார்கள்.
பெரிய டைரக்டர்கள் என்று சொல்லி கொள்வோருக்கு சமூக பொறுப்பும் உள்ளது.. இதுபோன்ற போதை வஸ்துகளை சர்வ சாதாரணமாக உங்களின் படங்களில் காட்டுவதற்கு வெட்கமாக இல்லையா?
சென்சார் போர்டு இதன் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஏற்கனவே பெரிய படம், சின்ன படம் என்ற பாகுபாடு பார்ப்பதாக விமர்சனங்கள் உள்ள நிலையில், இனி வரும் காலங்களில் தமிழ் சினிமாவில், போதை வஸ்துக்கள் குறித்த சீன்களுக்கு உச்சபட்ச கத்திரியை வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications