தங்கத்தை ரிசார்ட்டில் நடிகைக்கு.. அதைவிடுங்க, நடிகர்கள் விரும்பிய "2 ஹீரோயின்" இவங்கதான்: பிரபலம்
சென்னை: நடிகை சௌந்தர்யா அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர், அனைவருக்கும் மரியாதை தரக்கூடியவர். மனோரமா, சௌகார் ஜானகி போன்ற மூத்த நடிகைகள் எல்லாம் சௌந்தர்யாவை பழகுவதற்கு இனிமையானவர் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று புகழ்ந்து சொல்லியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.
Realone Media சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "நடிகை செளந்தர்யாவின் பூர்வீகம் கர்நாடகா.. சௌமியா என்ற தன்னுடைய பெயரை சினிமாவுக்காக சௌந்தர்யா என்று மாற்றினார்கள்..

கடைசியாக பேசிய வார்த்தை
சௌந்தர்யாவின் அப்பா சினிமா தயாரிப்பாளர்.. கன்னடத்தில் ஒருசில படங்கள் எடுத்தார்.. எனவே, கன்னடத்தில் ஒன்றிரண்டு படங்களில் நடிக்க துவங்கினார் சௌந்தர்யா. பிறகு தமிழில் பொன்னுமணி படத்தில் முதலில் நடித்தார்.. மிகப்பெரிய அளவில் அந்த படம் பேசப்பட்டது.. ஆர்.வி.உதயகுமார் தான் அந்த படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினார். எனவே கடைசிவரை ஆர்.வி. உதயகுமார் மீது சௌந்தர்யா மிகப்பெரிய மரியாதையை வைததிருந்தார்.. இறப்பதற்கு 10 நிமிடம் முன்புகூட, அவரிடம்தான் கடைசியாக பேசினார் சௌந்தர்யா.
"சார், நல்லா இருக்கீங்களா? என்று பேசிவிட்டு, எனக்கு வாழ்க்கையே பிடிக்கல சார்" என்று ஆர்.வி.உதயகுமாரிடம் சொல்லியிருக்கிறார். ஏனென்றால், அரசியலுக்கு சென்றாலே பல குடைச்சல்கள் இருக்கும்.
2 நடிகைகள் மீது கிரேஸ்
2 நடிகைகளுடன் சினிமாவில் அனைவருமே நடிக்க விரும்பினார்கள்.. ஒன்று சில்க் ஸ்மிதா இன்னொன்று, சௌந்தர்யாவுடன் நடிக்க விரும்பினார்கள்.. இவர்களுடன் நடித்தால், படம் சக்ஸஸ் என்பதுடன், சௌந்தர்யா மீது ஈர்ப்பும் அனைவருக்கும் இருந்தது.
பெரிய பெரிய நடிகர்கள் சௌந்தர்யாவுடன் விரும்பி நடித்தார்கள்.. பார்த்திபன்கூட அழகை ஆராதிக்கக்கூடியவர்.. இவன் படத்தில் சௌந்தர்யாவை வர்ணித்து, கவிதைகளாக எழுதி, அனைவரையும் ரசிக்க வைத்தார். ஆரம்பத்தில் டாக்டராக வேண்டும் என்று கனவில் இருந்தவர் சௌந்தர்யா.. ஆனால், சினிமாவில் நடிக்க வந்தபிறகு, அந்த பணத்தில் ஏழை குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் கட்டியிருக்கிறார்.. நிறைய குழந்தைகளை படிக்க வைத்திருக்கிறார்.. மனிதாபிமானம் உள்ள நடிகை சௌந்தர்யா.
தங்க நகைகள் தந்த தென்னிந்திய நடிகர்
தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகர் ஒருவருடன் மைசூருக்கு ஷூட்டிங் சென்றிருக்கிறார்.. அங்கே நடிகரின் நண்பரின் பண்ணை வீட்டில் 15 நாட்கள் தங்கி இருக்கிறார்கள்.. இதெல்லாம் கேள்விப்பட்ட விஷயம்தான்.. அப்போதுதான் அவருக்கு தங்க நகைகளை கிலோ கணக்கில் அன்பளிப்பாக தந்திருக்கிறார் என்றும் கேள்விப்பட்டோம்.
சௌந்தர்யாவுக்கு அரசியல் ஈடுபாடு கிடையாது.. உறவினர் ரகு என்பவரை திருமணம் செய்தார்.. கணவருக்கு அரசியல் ஆர்வம் அதிகம் என்தபால், கணவரின் வற்புறுத்தலால்தான் அரசியலுக்கு வந்ததாக சொல்வார்கள்.
ஒருசில மேடைகளிலும் பேசினார்.. அப்படித்தான், இன்னொரு மேடையில் பேசுவதற்காக பிளைட்டில் சென்றுள்ளார்.. கோலார் தங்கவயல்தான் சௌந்தர்யாவின் சொந்த ஊர்.. அங்கிருந்துதான் அரசியல் நிகழ்ச்சிக்கு கிளம்பியிருக்கிறார்..
வாழவே பிடிக்கல
அந்த நேரத்தில்தான், ஆர்.வி. உதயகுமார் டைரக்டருக்கு போன் செய்து, "வாழவே பிடிக்கல" என்று சொல்லியிருக்கிறார். அரசியலில் அவருக்கு நிறைய தொல்லைகள் இருந்திருக்கலாம். குடைச்சல் இருந்ததில்தான், அப்படியொரு வார்த்தையை சொல்லியிருக்கலாம். அதற்கு முன்பு அப்படியெல்லாம் வார்த்தை சொன்னதில்லை.
ஏனென்றால் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர், அனைவருக்கும் மரியாதை தரக்கூடியவர் சௌந்தர்யா. மனோரமா, சௌகார் ஜானகி போன்ற மூத்த நடிகைகள் எல்லாம் சௌந்தர்யாவை பழகுவதற்கு இனிமையானவர் என்று சொல்லி இருக்கிறார்கள்.. ஆனால், அரசியலுக்கு வந்துவிட்டாலே புலி வாலை பிடித்தது போலத்தான்" என்றெல்லாம் நெகிழ்ந்து கூறியிருக்கிறார்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications