புவனேஸ்வரியின் மறுபக்கம்! விபச்சார கேஸை உடைத்து.. இன்று பலருக்கு வாழ்வளிக்கிறார்! பிரபலம் நெகிழ்ச்சி
சென்னை: எனக்கு வரும் சம்பளத்தை தொடர்ந்து மக்களுக்காகவே செலவிட போகிறேன்" என்று நடிகை புவனேஸ்வரி சொல்வதாக, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
Behind Gold என்ற யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் புவனேஸ்வரி பற்றி பேசும்போது, "கவர்ச்சியின் பிம்பம் என்று சொல்லப்பட்டவர் புவனேஸ்வரி.. டாக் ஆப் தி டவுன்.. சிலர் இவரை பூனைக்கண் புவனேஸ்வரி என்றுகூட சொல்வார்கள்.. சினிமா, டிவியில் மிகப்பெரிய ரவுண்டு வந்தவர்.. இவர்மீது அன்று விபச்சார வழக்கு தொடுக்கப்பட்டது.. ஆனால், நான் விபச்சாரி இல்லை, விபச்சாரத்தில் ஈடுபடவில்லை என்று தைரியமாக சொல்லி, அந்த வழக்கை எதிர்கொண்டார்.

நிரபராதி: கடைசியில 3 வருடம் கழித்து, புவனேஸ்வரி நிரபராதி என்று தீர்ப்பு வந்தது. இதுக்கு முன்னாடி விபச்சாரி என்று அவமானப்படுத்தினாங்களே, அதையெல்லாம் எப்படி அழிப்பது? இதுதான் சட்டம். இறுதியில் தான் நிரபராதி என்று சட்டத்திலிருந்து வெளியேவந்தார்.
புவனேஸ்வரி விபச்சாரத்தில் கைதான செய்தியைவிட, விபச்சார வழக்கிலிருந்து விடுதலையான செய்தியை, பத்திரிகைகளில் சின்னதாக போட்டாங்க.. இதுதான் பத்திரிகை தர்மம். இதுல நானும் ஒருத்தன்தான்.
யாரிந்த புவனேஸ்வரி: சகோதரர் சேதுராமன் தலைமையில் இயங்கி கொண்டிருக்கிற தேவர் பேரவையில், மகளிர் அணி தலைவராக புவனேஸ்வரி இருப்பதாக 2 வருடம் முன்பு நான் சொல்லியிருந்தேன். இப்போது புவனேஸ்வரி என்ன செய்யறாங்க? யாரிந்த புவனேஸ்வரி? நெல்லை சங்கரன்கோவிலில் பிறந்தவர்.. வறுமையில் இருந்தவர்.. சாப்பாட்டுக்கே வழியில்லாமல், சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு, டிவி சீரியல்களில் நடித்தவர்.. பிறகு சினிமாவிலும் உயர்ந்து, நல்ல ரேஞ்சுக்கு வந்தவர்.
இன்னைக்கு இவருக்கு 3, 4 ஷூட்டிங் பங்களாக்கள் இருக்கு.. ஆனால், முற்றும் துறந்த சாமியாரினி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இல்லற வாழ்விலிருந்து விடுபட்டு, துறவி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்..
பண்டரிபாய்: பழம்பெரும் பண்டரிபாய், இப்படித்தான் துறவில் ஈடுபட்டார்.. அதேபோல நடிகை காஞ்சனாவும் துறவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார். புவனேஸ்வரி, இன்று வளசரவாகக்கம் சிவன் கோயிலில் தினமும் இலவச சாப்பாடு வழங்கி வருகிறார். கோயம்பேடு குருகலாம்பஸ்வரர் கோயிலிலும் அன்னதானம் வழங்கி வருகிறார். ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும், 10 ஆயிரம் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை தருகிறார்.
இதுகுறித்து கேட்டால், "அன்று சங்கரன்கோவிலில் சோத்துக்கே வழியில்லாத நிலைமை ஏற்பட்டது. இப்போது எனக்கு வசதி வரும்போது, என்னுடைய வருமானத்தில் ஒருபகுதியை சாப்பாடு போட நினைத்தேன்.. என்னுடைய சம்பளத்தை எனக்கு பின்னாடி யாரும் அனுபவிக்க போவதில்லை. எனக்கு வரும் சம்பளத்தை தொடர்ந்து மக்களுக்காகவே செலவிட போகிறேன்" என்று சொல்கிறார் புவனேஸ்வரி" என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications