சாவித்ரி எலும்பும் தோலுமாய்.. 15 வயதிலேயே தங்க மோதிரம் சர்ப்ரைஸ்.. மாறாத சாவித்திரியின் சிறந்த குணம்
சென்னை: மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரி, பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்.. ஆரம்பம் முதல் கடைசிவரை தன்னால் இயன்றதை செய்து கொண்டேயிருந்தார்.. அவரது முதல் உதவி எது தெரியுமா? அதுகுறித்த தகவல்கள்தான் இணையத்தில் பரவி வருகிறது.
தன்னுடைய 15 வயதில் "பாதாள பைரவி" என்ற படத்தில் ஒரு நடன காட்சியில் சாவித்ரி நடித்துக்கொண்டிருந்தார்.. அப்போது, அங்கு பணியிலிருந்த ஊழியர், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். இதை கண்டு பதறிய சாவித்ரி, புது இடம் என்றுகூட யோசிக்கலாமல், அங்கிருந்த நிர்வாகிகளிடம் பேசி, காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அந்த ஊழியரை பரிசோதித்த டாக்டர்கள், மூளையில் கட்டி இருக்கிறது என்றார்களாம். உடனே சாவித்ரி, சின்ன வயதில், தன்னுடைய அம்மா கையில் போட்டுவிட்ட மோதிரத்தை உடனே கழற்றி தந்து, இதை விற்று ஊழியரை காப்பாற்றுங்கள் என்றாராம்.. நடிக்க துவங்கியிருந்த அந்த நேரத்தில் சாவித்திரி யார் என்றுகூட மக்களுக்கு தெரியாது. இதுதான் சாவித்ரி சினிமாவில் செய்த முதல் உதவி.. ஆனால், இந்த குணம்தான் தன்னையும் சேர்த்து அழிக்க போகிறது என்று அந்த நேரங்களில் சாவித்திரி அறிந்திருக்கவில்லை.
தன் இறுதிகாலங்களிலும், தன் விலையுயர்ந்த பட்டுப்புடவையை அடகு வைத்து, ரிக்ஷாக்காரர் ஒருவரின் மகள் திருமணத்திற்கு பணம் தந்திருக்கிறார்.. சம்பளம் தர முடியாத நிலையில், கார் டிரைவர் விடைபெற வந்து நின்றபோது, பர்ஸிலிருந்து கார் சாவியையும் ஆர்.சி.புத்தகத்தையும் தந்து இதை வைத்து பிழைத்துக்கொள் என்றாராம்.. அந்த கார் டிரைவர், பல டாக்ஸிகளை வாங்கி, பெரிய பணக்காரராகி, சமீபத்தில் தான் இறந்துள்ளார். எனினும், சாவித்திரி செய்த கடைசி உதவி இதுதான்.
உருக்குலைந்த உருவம்
சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சாவித்ரி பற்று சொல்லும்போது, "பெங்களூரில், ரத்த அழுத்தம் அதிகமாகி, ஸ்ட்ரோக் ஏற்பட்டு, மயங்கி விழுந்து விட்டார். உடனே இந்த தகவல் முதலில் சரோஜாதேவிக்குதான் போகிறது. எப்படியாவது சாவித்திரியை காப்பாத்துங்க என்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர சொன்னார். ஆனால், பாதி உடல் நலம் மட்டுமே தேறி சென்னை வந்தார்.
சென்னை வந்தும்கூட, மருந்து, மாத்திரைகளைவிட மதுவையே அதிகம் நாடினார்.. இதனால், மீண்டும் மீண்டும் உடல்நிலை மோசமடைந்து, உருக்குலைந்து போய்விட்டார்.. எலும்பும் தோலுமாக சென்னை வீட்டில் படுத்து கிடந்தாங்க..
கொடை வள்ளல் சாவித்ரி
ஆனால் மிகச்சிறந்த கொடை வள்ளல் சாவித்திரி. குழந்தையை தூக்கிகொண்டுவந்து, எத்தனையோ பேர் வந்து உதவி கேட்பார்கள்.. யார் கேட்டாலும் பணம் தருவாங்க. பிரதமர் நிதி, பாகிஸ்தான் நிதிக்காக தன்னுடைய நகை, பணம் எல்லாவற்றையும் அள்ளி அள்ளி தந்தார். அதற்கெல்லாம் கணக்கு பார்க்கவில்லை. நடிகர், நடிகைகளுக்கு உண்மையான கொடை வள்ளல் என்றால் அது சாவித்திரிதான்" என்று புகழ்ந்து கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications