ரஜினி பாட்டை ஸ்டோரியாக வைத்து.. ராதாக்கு பதிலடி கொடுத்த அம்பிகா! உருக்கமான பதிவு
சென்னை: நடிகை ராதா சில நாட்களுக்கு முன்பு தனது அக்கா நடிகை அம்பிகா மீது ரூ.43.62 கோடி செக் மோசடி புகார் கொடுத்திருந்தார். இது பெரும் புயலை ஏற்படுத்திய நிலையில் இப்போது அம்பிகா வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரி கவனம் பெற்று வருகிறது. அதற்கு அவர் உருக்கமான கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அந்த ஸ்டோரியில் நடிகர் ரஜினிகாந்த் அம்பிகா இணைந்து நடித்த பாடலை தான் வைத்திருக்கிறார்.
அம்பிகா பேட்டி
ராதா புகார் கொடுத்ததுமே அம்பிகா ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், உண்மையில் ஏமாந்தது நான்தான் சின்ன வயதில் இருந்தே குடும்பத்திற்காக பல தியாகங்கள் செய்து இருக்கிறேன். நான்தான் அந்த குடும்பத்தின் முதல் படிக்கட்டாக இருந்தேன். என்னுடைய அப்பா எந்த பொருள் வாங்கிட்டு வந்தாலும் என்னுடைய சகோதரிகளுக்கு கொடுத்துவிட்டு அவர்கள் கழித்து வைப்பதை தான் நான் எடுத்து உடுத்தி வந்தேன். இது உடைகள் மட்டுமல்ல எல்லா விஷயத்திலும் நான் என்னுடைய சகோதரிகள், என்னுடைய தம்பிகள் என்று எப்போதுமே விட்டுக்கொடுத்தேன்.
ஆனால் இப்போ பணம் காசு விஷயத்தில் பிரிவு வந்துவிட்டது. என்னதான் ரத்த பந்தமாக இருந்தாலும் இப்போ எல்லோரும் தனி தனி குடும்பம் ஆகிட்டாங்க. பணம் எவ்வளவு வந்தாலும் இன்னும் போதாது போதாது என்ற மனநிலையும் வந்துவிட்டது. அதுதான் இந்த குடும்ப பிரச்சனைக்கு காரணம் என்று ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.

இன்ஸ்டா ஸ்டோரி
இது வைரலாகி வரும் நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் அம்பிகாவும் ரஜினிகாந்த்தும் இணைந்து நடித்த படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற "ஊரை தெரிஞ்சுகிட்டேன் உறவை புரிஞ்சுகிட்டேன் கண்மணி" என்ற பாடலில் வரும் "பணம் காச கண்டுபுட்டா புலி கூட புல்லை திங்கும் கலிகாலம்" என்ற வரிகளை வைத்து அதற்கு "மை லைஃப் ஸ்டோரி" என்று அம்பிகா கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
ராதா சொன்ன குற்றச்சாட்டு
இது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே ராதா அம்பிகா மீது சில குற்றச்சாட்டுகளை சொல்லி இருந்தார். என்னுடைய சொந்த வீட்டிற்குள் கூட ஒன்றரை வருடங்களாக போக முடியவில்லை. நான் போன் செய்தால் என்னுடைய அக்கா அம்பிகா போனை கூட எடுக்க மாட்டாங்க. அவர்களுடைய அக்கவுண்டுக்கு என்னுடைய அக்கவுண்டில் இருந்து தான் பணம் ட்ரான்ஸ்லேஷன்காக அனுப்பப்பட்டிருக்கிறது. நான் என்னுடைய வீட்டில் நம்பி வைத்திருந்த செக்கில் சிலதை திருடி அதில் பணத்தை ஃபில் பண்ணி பேங்கில் போட்டு இருக்கிறார்கள்.
உருக்கமான பதிவுகள்
பேங்கில் இருந்து எனக்கு மெசேஜ் வந்ததும் நான் அதை ட்ரான்ஸ்லேஷன் ஆகாமல் நிறுத்திவிட்டேன் என்றெல்லாம் பேசி இருந்தார். ஆனால் இப்போது அதற்கு அம்பிகா விளக்கம் கொடுக்காமல் தொடர்ந்து தனது வருத்தத்தை மட்டும் பகிர்ந்து வருகிறார். ஒரு காலத்தில் 80ஸ்களின் கனவு கன்னியாக இருந்த சகோதரிகள் இப்போ சொத்து பிரச்சனையால் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறார்கள்.




Click it and Unblock the Notifications
