ராதாவோடு பிரச்சனைக்கு காரணம் இதுதான்! குடும்பத்துக்குள் நடந்த சம்பவம்! அம்பிகா பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகை ராதா அவருடைய அக்காவும் நடிகையுமான அம்பிகா மீது சில நாட்களுக்கு முன்பு செக் மோசடி புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அந்த புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்திருந்தார். இந்த நிலையில் அம்பிகா இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அப்போது பேசிய அம்பிகா, என்னுடைய சகோதரி ராதா சில தினங்களுக்கு முன்பு என்மீது புகார் கொடுத்திருந்தார். ஆனால் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு ராதா கொடுத்த மூன்று காசோலைகள் பவுன்ஸ் ஆகிவிட்டன. சொத்து தகராறு தீர்க்க காசோலை தந்தது ராதா தான். அதை நிறுத்தியதும் அவர்தான். காசோலை மோசடி செய்ததற்காக ராதா மீது நான்தான் புகார் கொடுத்திருக்க வேண்டும். நான் சூட்டிங்கில் இருந்ததால் உடனே புகார் கொடுக்க முடியவில்லை.

நடிகை அம்பிகா செய்தியாளர்கள் சந்திப்பு

ஏற்கனவே குடும்பத்திற்குள் ஷேர் பிரச்சனைகள் இருந்தது. அதை பேசி தீர்க்க நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் அதற்கு ராதா ஒத்துக் வரவில்லை. என்னுடைய அம்மா இருப்பிற்கு நான் போன போது கூட அவரிடம் எனக்கு ஏ.ஆர்.எஸ் கார்டன் வேண்டும் என்று சொன்னேன். அந்த கார்டன் வாங்குவதற்கு முக்கியமாக இருந்தது நான் தான் அந்த கார்டனின் பெயரில் இருக்கும் ஏ என்னுடையது. அதற்கான ஷேர் எனக்கானது. சில மாதங்களுக்கு முன்பு அதில் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

Radha Ambika

ஏ ஆர் எஸ் கார்டன் பிரச்சனை

அந்த கார்டனை நான் என்னுடைய குழந்தை போல பார்த்தேன். ஆனால் திடீரென பெயர் மாற்றம் செய்திருந்தார்கள். அதற்குப் பிறகு நாங்கள் அது விற்பனைக்கு அல்ல என்று ஒரு போர்டு வைத்தோம். அந்த போர்டு காணாமல் போய்விட்டது. அது அவர்கள் சொல்லி தூக்கி போட்டார்களா? அல்லது திருடு போனதா? என்று தெரியாது. அம்மா இருந்த வரைக்கும் எனக்கு ஷேர் சரியாக வந்தது. என்னுடைய குடும்பத்தினரை நான் ரொம்பவே நம்பினேன்.

அம்மா எந்த இடத்தில் எல்லாம் கையெழுத்து போட சொல்றாங்களோ அந்த இடத்தில் எல்லாம் நான் போட்டு கொடுத்திருக்கிறேன். ஆனால் அவங்க இப்போ ஏஆர்எஸ் கார்டனில் ரெஸ்டாரண்டாக மாற்றப் போகிறார்களாம். அதற்காகத்தான் ஏற்பாடுகள் பண்ணுகிறார்கள். அதை வைத்து தான் பிரச்சனை வந்தது. ஏற்கனவே ராதாவுக்கு பல ரெஸ்டாரன்ட் இருக்கிறது. எல்லாமே 5 ஸ்டார், 7 ஸ்டார் ஹோட்டல் தான்.

Radha Ambika

தரவேண்டிய பணம்

அப்படி இருக்கும்போது இந்த இடத்தையும் அவங்க ரெஸ்டாரண்டாக மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்ததை வைத்து பிரச்சனை வந்தது. ஆனால் அவர்கள் எங்ககிட்ட பேசவே இல்லை. எதற்கெடுத்தாலும் மேனேஜரைத் தான் அனுப்புனாங்க. எனக்கு அவங்க 95 கோடி ரூபாய் தர வேண்டியது இருக்கு. என்னுடைய நகைகள் கூட ராதாவிடம் தான் இருக்கிறது. இப்போது காசோலையை லாக் பண்ணி வைத்திருப்பதும் எனக்கு தான் நஷ்டம்.

நான் 2 மாதத்திற்கு முன்பே அவர் மீது கமிஷனர் ஆபீசில் புகார் கொடுத்து இருக்கிறேன். ஆனால் அவர் இப்போது கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்த பிறகு செய்தியாளர்களிடம் சந்தித்தபோது ஏன் அதையெல்லாம் சொல்லவே இல்லை? அவர் மீது தப்பு இல்லை என்றால் அவர் சொல்லியிருக்க வேண்டியதுதானே? நான் குடும்ப விஷயங்கள் வெளியே தெரிய வேண்டாம் என்று நினைத்தேன்.

ஏற்கனவே புகார்

சில நேரங்களில் நாம் செய்யும் செயல்கள் அடுத்தவர்கள் ஏதாவது பேசும்போது நம்ம குடும்ப விஷயத்தை நமக்குள் பேசி முடித்திருக்கலாமோ என்று நினைக்க வைத்து விடும். அதனால் நானும் அவரிடம் பேசி முடிக்கலாம் என்று நினைத்தேன். அப்போது முடியவில்லை என்றதும் கமிஷனர் ஆபீசில் யாருக்கும் தெரியாமல் தான் புகார் கொடுத்து இருந்தேன். அதற்கான விசாரணைக்கு அவர் வரவே இல்லை. ஆனால் அவர் அனைவரையும் கூப்பிட்டு வைத்து இப்போது புகார் கொடுத்து இருக்கிறார் என்று அந்த பேட்டியில் அம்பிகா பேசி இரக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+