அம்பிகாவின் முகம் குண்டு பல்ப்பில்.. அதைவிடுங்க, சிவாஜியிடம் ராதா இப்படியா சொன்னார்? இதெலலாம் நிஜமா?
சென்னை: அம்பிகா, ராதா திரைத்துறைக்குள் நடிக்க வந்தது எப்படி என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.. அத்துடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது ஏன் என்பது குறித்தும் காரணம் தெரிவித்துள்ளார்.
Kingwoods News யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "திருவனந்தபுரம், கல்லாறு பகுதி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவியாக இருந்தவர்தான் சரசம்மா.. இவர் தலைவராக இருந்த காரணத்தினால், மலையாள சினிமாவில் தன்னுடைய மகள் அம்பிகாவின் போட்டோக்களை, முன்னணி நடிகர்களிடம் கொண்டுபோய் தருவார்.. ஒருநாள் இயக்குனர் ஒருவர், அம்பிகாவை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

அம்பிகாவுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து, இரவு நேரத்தில் அம்பிகாவின் வீட்டுக்கு வருகிறார்... ஆனால், வீட்டில் குண்டு பல்புதான் எரிந்து கொண்டிருக்கிறது.
மங்கலான குண்டு பல்பு வெளிச்சத்தில், மேக்கப் டெஸ்ட் எடுக்க முடியவில்லை.. அதனால், காஸ்ட்யூம் ஒன்றை தந்து அணிந்து வரச்சொன்னார்.. பிறகு, தன்னுடைய கார் வெளிச்சத்திலேயே மேக்கப் டெஸ்ட் எடுப்பதாகவும் சொன்னார்.
அம்பிகாவின் திரைத்துறை: கையோடு அழைத்து சென்ற மேக்கப் மேனை வைத்து, கார் வெளிச்சத்திலேயே மேக்கப்டெஸ்ட் எடுக்கிறார்.. அம்பிகாவின் குடும்பம் அந்த அளவுக்கு ஏழ்மையான குடும்பம். இப்படித்தான் அம்பிகா திரைத்துறைக்குள் வருகிறார்.. ஆனால், மலையாள சினிமாவைவிட, தமிழ் சினிமா அம்பிகாவை அரவணைத்து கொள்கிறது.
சரசம்மா, தேர்ந்த அரசியல்வாதி என்பதுடன், அனைத்து தரவுகளையும் அறிந்தவர்.. குறிப்பாக, யாரிடம் தன்னுடைய மகள், யாருடன் ஹீரோயினாக நடித்தால் உச்சத்துக்கு போவார் என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருந்தார் அதனால்தான், அம்பிகாவால் திரைப்பட துறையில் மிகப்பெரிய டாப் ஸ்டார்களுடன் நடிக்க முடிந்தது.
சரசம்மா வளர்ப்பு: தன்னுடைய 3 பெண்களிடமும், "பள்ளிப்படிப்பால் உங்களால் நிச்சயம் உயர முடியாது, அதனால் எந்த பலனும் கிடைக்காது.. திரைப்பட நடிப்புதான் உங்களை உயர்த்தும்" என்று சொல்லி சொல்லியே சரசம்மா வளர்த்தாராம். அதன்படியே, தன்னுடைய பெண்கள், திரைப்பட துறையில் புகழ் பெற்று விளங்க, உச்சபட்ச முயற்சி செய்கிறார்.
அந்த காலகட்டத்தில், ராஜீவ் காந்தி பிரதமராக உள்ளார்.. இந்திரா காந்திக்கு மிகவும் நெருக்கமானவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பிரதமர் ராஜீவ் காந்தியை சந்திக்க விரும்பி, நேரம் கேட்டிருந்தார்.. அதன்படியே நேரமும் ஒதுக்கப்பட்டிருந்தது.
சிவாஜி கணேசன்: சிவாஜி கணேசனும் நேரத்திலேயே சென்றுவிட்டார். ஆனால், ராஜீவ் காந்தியை சந்திக்க முடியாமல், வெளியே காத்திருந்தார். அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட, ஒன்றரை மணி நேரம் அதிகமாகவே சிவாஜி கணேசன் காத்திருக்க நேரிட்டது.
அதற்கு பிறகுதான், ஒன்றரை மணி நேரம் கழித்து, அம்பிகா, ராதா, சரசம்மா, மூப்பனார் எல்லாரும் பிரதமர் அறையிலிருந்து வெளியே வருகிறார்கள்.. இதைப்பார்த்த பிறகுதான், இனிமேல் காங்கிரஸ் கட்சிக்கே தலைமுழுகிவிடணும் என்று சிவாஜி முடிவு செய்தார்.. ஒன்றரை மணி நேரம் இந்த நடிகைகளுக்காக நேரம் ஒதுக்கியிருக்கிறாரே பிரதமர்? என்று நினைத்து அதோடு விலகி வந்துவிட்டார்..
நடிகை ராதா: சிவாஜி கணேசனுடன் நெருக்கமாக நடிக்கும்போது, ராதாவின் கை நடுங்கிக்கொண்டுதான் இருக்குமாம். ஆனால், பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்ததுமே, "அங்கிள் எப்படி இருக்கீங்க" என்று கேட்டு, சிவாஜியின் கையை தட்டிக்கொண்டே கேட்டாராம். இனிமேல இவர்களது அரசியல்தான் போலும் என்று நினைத்து அதோடு ஒதுங்கிவிட்டார் சிவாஜி கணேசன்" என்றெல்லாம் தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்
Kingwoods News யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், நடிகைகள் அம்பிகா, ராதா இருவருமே எப்படி திரைத்துறையில் அசுர வளர்ச்சி பெற்றார்கள்? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தமிழா தமிழா பாண்டியன் பதிலளிக்கும்போது, "திருவனந்தபுரம், கல்லாறு பகுதி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவியாக இருந்தவர்தான் சரசம்மா.. இவர் தலைவராக இருந்த காரணத்தினால், மலையாள சினிமாவில் தன்னுடைய மகள் அம்பிகாவின் போட்டோக்களை, முன்னணி நடிகர்களிடம் கொண்டுபோய் தருவார்.. ஒருநாள் இயக்குனர் ஒருவர், அம்பிகாவை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications