அம்மா கூட இருந்திருந்தால்..தன்னுடைய முடிவிற்கு..இதுதான் பதில்... அமீரின் உருக்கமான வார்த்தைகள்
சென்னை: அவர் தன்னுடைய அம்மாவை நினைத்து உருக்கமான வார்த்தைகளை பேசியுள்ளார்.
அம்மாவை பற்றி அவரிடம் கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு தன்னுடைய கருத்தை அமீர் வெளியிட்டுள்ளார்.

நான்காவது இடத்தில் வெற்றி
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 50 நாட்களுக்கு மேலாக உள்ளே நுழைந்து இருந்தாலும் நான்காவது இடத்தில் இந்த சீசனை வெற்றி பெற்றுள்ளார். ஒரு நடன மாஸ்டராக அதுவரைக்கும் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருந்த அமீர் இந்த நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இதற்கு முன்பு வரைக்கும் இவர் எத்தனையோ நிகழ்ச்சிகளில் டான்ஸ் மாஸ்டராக கலந்துகொண்டு இருந்தாலும் இவருடைய முகம் அந்த அளவிற்கு பரிச்சயமாகாமல் இருந்தது. ஆனால் தற்போது இவர் பலருக்கும் ஃபேவரைட் ஆக மாறி இருக்கிறார்.

கடந்த கால கஷ்டங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை கூறி ஓவர் நைட்டில் வேற லெவல் பிரபலம் அடைந்து விட்டார். அதுவரைக்கும் இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் தான் இருந்து வந்தார். ஒரு சில எபிசோடுகளில் இவருடைய திறமையை அதிகமாக வெளியே காட்டப்படாமல் இருந்த நிலையில் இந்த கதை சொல்லும் டாஸ்க் மூலமாக இவருடைய கண்ணீர் கதையை கேட்டு பலரும் ஃபீல் பண்ணி இவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டார்கள். இவருடைய திறமை ஒரு பக்கம் என்றால், கடந்த காலத்தில் இவர் பட்ட கஷ்டங்கள் இவருக்கு ஒரு பலமாக அமைந்துள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிரபுதேவாவின் தீவிரமான ரசிகர்
நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு நினைத்த கனவு தற்போது நிறைவேறி விட்டதாம். குழந்தையாக இருக்கும் போதே தன்னுடைய தாயின் ஆசைக்காக டான்ஸ் ஆடி இருக்கிறார். அதற்குப் பிறகு அவருடைய தாயின் எதிர்பாராத மரணம் இவருடைய வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருந்தாலும், அவருடைய அம்மாவின் ஆசைக்காக இவர் டான்ஸில் முழு கவனத்தையும் செலுத்தி இருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே இவருக்கு பிரபுதேவாவின் மீது பெரிய மரியாதை என்பதால் அவரை ரோல்மாடலாக நினைத்து இவர் தன்னுடைய டான்ஸ் ஸ்டைலை வைத்துள்ளார். வாழ்க்கையில் ஒரு முறையாவது அவரை சந்தித்து விட வேண்டும் என்று இவர் கனவு வைத்துள்ளதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கூறியிருக்கிறார்.

அம்மாவின் அன்பு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது பிரபுதேவா இவரிடம் நேரடியாக போன் செய்து பேசி உள்ளாராம். இவருடைய மெசேஜ் களுக்கு கூட அடிக்கடி ரிப்ளை செய்து கொண்டிருக்கிறாராம். இதை நினைத்துப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அது போல தன்னுடைய தாய் இருந்திருந்தால் அவர் பார்க்காத உலகத்தை நான் காட்டி இருப்பேன்...என்னுடைய வெற்றிகளில் அவருடைய சந்தோசத்தை பார்த்திருப்பேன் என்று உருக்கமாக கூறியிருக்கிறார். தான் சிறுவயதில் சிறியதாக வெற்றி பெற்றால் கூட அதை பெரியதாக கொண்டாடும் அவருடைய அம்மா தற்போது இவர் இவ்வளவு பிரபலம் அடைந்ததற்கு உலகத்தையே ஜெயித்த அளவில் சந்தோசத்தை கொண்டாடி இருப்பார் என்று கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications