Heart Beat Series: அமித் பார்கவ் திடீர் போஸ்ட்.. இனி சீரிஸ் அவ்ளோதானா? புதிய நிகழ்ச்சி இதுவா?
சென்னை: நடிகர் அமித் பார்கவ் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் "ஹார்ட் பீட் (heart beat )"என்ற வெப் சீரிஸில் மதன் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அமித் பார்கவ் ஏற்கனவே சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து நடிகர் அமித் பார்கவ் பிரபலமடைந்தார். இந்த சீரியலில் தான் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்த சீரியலில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்தது. பிறகு பாதியிலேயே பிரியா பவானி சங்கர் இந்த சீரியலை விட்டு விலகி இருந்தார். அது போல அமித் பார்கவ்க்கும் இந்த சீரியல் முடிவடைந்ததும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

அதிலும் அமித் பார்கவ், என்னை அறிந்தால், மிருதன், அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹாட் பிட் என்ற வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியஸில் மதன் என்ற நெகட்டிவ் கேரக்டரில் அமித் நடித்து வருகிறார். அதுபோல அமித் உடைய மனைவி ஸ்ரீ ரஞ்சினியும் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து இருக்கிறார்.
இப்போது கூட ஸ்ரீ ரஞ்சனி மற்றும் அமித் பார்கவ் இருவரும் விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் "மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை" நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் அமித் பார்கவ் நடித்துக் கொண்டிருக்கும் ஹாட் பிட் வெப் சீரிஸின் இறுதி அத்தியாயம் வந்திருக்கிறது. இந்த வெப் சீரிஸ் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு பாகமாக வெளியாகி வந்த நிலையில் தற்போது இந்த வாரத்தோடு இந்த வெப் சீரிஸ் முடிவடைய இருக்கிறது.

அதன் இரண்டாவது பாகம் வருமா இல்லையா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அமித் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக ஸ்டோரி ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் "கடைசி நாள் சூட்.. குட்பை மதன்" என்கிற கேப்ஷன் வைத்திருக்கிறார். அதோடு "சிக்கலான அதேசமயம் சுவாரசியமான கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு நன்றி" என்று இயக்குனர் தீபக் சுந்தர்ராஜனை டேக் செய்து நன்றி தெரிவித்து இருக்கிறார். இவருடைய நடிப்பை பலரும் பாராட்டி அவருக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஹார்ட் பீட் வெப் சீரிஸ் முடிவடைந்ததும் அடுத்த வாரத்தில் இருந்து கனா காணும் காலங்கள் சீரியல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் கனா காணும் காலங்கள் சீரியலின் அடுத்த பாகத்திற்கான சூட்டிங் தொடங்கி விட்டது. புது கூட்டணியில் இந்த சீரிஸ் தொடங்கி இருக்கும் நிலையில் அடுத்த வாரத்தில் இனி அது ஒளிபரப்பாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications