நடிகர் யஷ் நிகழ்ச்சியில் விபத்து.. ஓடாமல் நின்று வெளிப்படையாக கொடுக்க அட்வைஸ்.. இது பலருக்கு பாடம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழகத்தில் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர் யஷ்ஷை பார்க்க ஏராளமான மாணவர்களும், ரசிகர்களும் திரண்டு இருந்த நிலையில் அங்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் 2 மாணவர்களும் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தாலும் அதற்கு முன்பு யஷ் பேசிய ஒரு விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

டாக்ஸிக் பட ப்ரமோஷனில் யஷ் பேசும்போது, சினிமாவில் நடிப்பவர்கள் ஒன்று பெரிய சாதனையாளர்கள் கிடையாது. தங்களுக்கு கொடுக்கப்படும் பணத்திற்காக நடிப்பது தான் தங்களுடைய வேலை. ஆனால் வாழ்க்கையில் ஒருவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை கவனமாக தேர்வு செய்து கடினமாக உழைத்தால் மரியாதையும் வெற்றியும் நிச்சயம் கிடைக்கும். ஏதாவது ஒன்றில் தோல்வி அடந்தால் அதற்காக உலகத்தை குறை சொல்லாதீர்கள். அந்த தோல்விக்கு நான் மட்டுமே பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று யஷ் அறிவுரை கூறியிருந்தார்.

Yash

எதிர்பாராத விபத்து

அவர் இப்படி பேசிக் கொண்டிருக்கும் நிமிடத்தில் தான் அந்த நிகழ்ச்சியில் ஒளி, ஒலி அமைப்பதற்காக கட்டப்பட்டு இருந்த பரன் சரிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். அந்த நேரத்தில் மேடையில் இருந்த யஷ் அதை கவனித்து உடனே அந்த அங்கு இருந்தவர்களுக்கு உதவி செய்யுமாறு தன்னுடைய பாதுகாவலர்களிடம் சொல்லி இருந்தார். மேலும் கூட்டத்தினர் அங்கே இங்கு ஓடாமல் ஒரே இடத்தில் இருக்க சொல்லி இருந்தார்.

யஷ் செய்த செயல்

அதுபோல விபத்து நடந்ததும் அவர் ஓடி ஓடி ஒளியாமல் பொறுமையாக நின்று அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு பிரச்சனை வந்ததும் சில பிரபலங்கள் அங்கிருந்து கிளம்பி ஓடி விடுவார்கள். ஆனால் ரஷ் அப்படி இல்லை என்று அவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது. பொதுவாக ஒரு நடிகரை பார்க்க வேண்டும் அல்லது நடிகையை பார்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருக்கிறது. ஆனால் அது தற்போது அளவுக்கு அதிகமாக ரசிகர்களிடம் ஏற்படுகிறது.

சினிமா மோகம்

காரணம் அவர்களுடன் போட்டோ எடுத்து அதை ஸ்டேட்டஸ் வைப்பதை பெருமையாகவே சிலர் கருதுகின்றனர். அதற்காகவே இதுபோல பிரபலங்கள் கூடும் இடத்தில் கூட்டமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தனிமனிதனின் ஒழுக்கம் மிக மிக முக்கியம் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். முன்பெல்லாம் பிரபலங்கள் வந்தால் இதுபோல கூடுவார்கள், அப்போது கூட இந்த அளவிற்கு விபத்துக்கள் ஏற்பட்டதா என்றால் கேள்வி குறிதான்.

புரியாத புதிர்

ஆனால் இப்போது பிரபலங்களை சோசியல் மீடியாவில் தினமும் பார்க்கிறோம். அவர்களுடைய பேட்டிகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அப்படி இருந்தும் இதுபோல பிரபலங்கள் வருகிறார்கள் என்றதும் தங்களுடைய வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு குடும்பத்தை மறந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய உயிரையே விட்டு விடுகிறார்கள். சிலருக்கு இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. அப்படியே ஏற்பட்டால் அந்த பிரபலங்கள் இவர்களுக்காக என்ன செய்யப் போகிறார்கள் என்று கேட்டால் அது கேள்விக்குறி தான். ஆனாலும் இந்த பிரபலங்களின் மோகம் எப்போதுதான் தீருமோ..? என்று சமூக ஆர்வலர்கள் நொந்து கொள்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+