ஆனந்த விகடன் சின்னதிரை விருது 2023 வாக்கெடுப்பு தொடங்கியாச்சு.. யாருக்கெல்லாம் விருது?
சென்னை: ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 - நம் இல்லம் தேடி வரும் கலைஞர்களுக்கான கிரீடம். தமிழில் அனைத்து பொழுதுபோக்கு சேனல்களிலும் ஒளிபரப்பாகிற நிகழ்ச்சிகளையும், நேரடியாகத் தமிழில் தயாரிக்கப்படுகிற தொடர்களையும், அவற்றில் பணிபுரிகிற கலைஞர்களையும் பாராட்டி மகுடம் சூட்டுவதற்காக தமிழகத்தில் நடத்தப்படுகிற முதல் விருது நிகழ்ச்சி. கூடவே, செய்தி சேனல்களில் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வழங்குகிற நெறியாளர்களையும் மரியாதை செய்யும் விழா.
ஜூலை 14-ம் தேதி சென்னையில் ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்த் திரையுலக ஆளுமைகள், தொலைக்காட்சி உலகின் முக்கிய நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் என்று பலரும் இதில் பங்கேற்கிறார்கள்.

மொத்தம் 28 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் ஒன்பது பிரிவுகளில் விருதுக்குரிய கலைஞர்களை வாசகர்கள் மற்றும் சின்னத்திரை ரசிகர்களே தேர்வு செய்தார்கள். இதற்காக விகடன் நடத்திய ஆன்லைன் வாக்கெடுப்பில் பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று, தங்களின் விருப்பமான கலைஞர்களைத் தேர்வு செய்தனர்.

மற்ற பிரிவுகளுக்கு தமிழகம் முழுக்க தொடர்ச்சியாக சின்னத்திரையை கவனிக்கிற ரசிகர்களில் பொருத்தமானவர்களைத் தேர்வு செய்து, தமிழ்த் தொலைக்காட்சி உலகில் இருக்கும் மதிப்புக்குரியவர்களின் ஆலோசனைகளையும் பெற்று, நடுவர் குழுவை உருவாக்கி விருதாளர்கள் தேர்வு நடைபெற்றது.

தினம் தினம் புதிய திருப்பங்கள், குடும்பத்தில் ஒருவரை நினைவுபடுத்துகிற நட்சத்திரங்கள், கண்ணியமிக்க கதையோட்டம், நேர்த்தியான தயாரிப்பு என மக்களைத் தொடர்ச்சியாக மகிழ்விக்கிற இந்தத் திறமையாளர்களை அங்கீகரித்துப் பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறது ஆனந்த விகடன்.
உங்கள் மனம் கவர்ந்த ஃபேவரைட் நடிகர், ஃபேவரைட் நடிகை, ஃபேவரைட் அப்பா-அம்மா, ஃபேவரைட் மாமியார்-மருமகள், ஃபேவரைட் குடும்பம், ஃபேவரைட் ரியாலிட்டி ஷோ, சிறந்த தொலைக்காட்சித் தொடர், சிறந்த ஆங்கர், சிறந்த செய்தி வாசிப்பாளர், சிறந்த நியூஸ் ஆங்கர் என்று பல பிரிவுகளில் ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 பெறப் போவது யார்? இந்த ஞாயிறு வரை காத்திருங்கள்....
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications