பிளாட்பாரத்தில் இருந்தோம், விஜயகாந்த் அந்த வார்த்தை சொன்னாரு.. மறக்க முடியுமா? நெகிழ்ந்த ஆனந்தராஜ்
சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றி அவருடன் நெருங்கி பழகிய பலரும் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் ஆனந்தராஜ் விஜயகாந்த் பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயகாந்த் சொன்ன வார்த்தைகள் தன்னுடைய மனம் மாறியது குறித்து ஆனந்தராஜ் பேசி இருக்கிறார்.
பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் பலரை பார்த்திருப்போம், அவர்கள் உயிரோடு இருக்கும்போது பல நல்ல விஷயங்கள் செய்திருப்பார்கள். ஆனால் அவர்களை அப்போது யாரும் பெரிதாக பேச மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிட்டாலோ, அல்லது அவர் மறைந்து விட்டாலோ, அந்த மனுஷனை மாதிரி யாராவது உண்டா? என்று ஆகா ஓகோ, என்ன பேசுவார்கள்.

மறைந்தாலும் குறையாத புகழ்
ஆனால் உயிரோடு இருக்கும்போது நல்ல விஷயங்கள் செய்தாலும் அவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. அதுபோல தான் விஜயகாந்த் உயிரோடு இருந்த வரைக்கும் அவரைப்பற்றி பெரிதாக பேசாதவர்கள் கூட அவருடைய மறைவுக்கு பிறகு விஜயகாந்த் பற்றி பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். இப்போது ஒரு சின்ன விஷயம் என்றாலும் அதைப்பற்றி விவாதங்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக இருக்கிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இது போன்று சோசியல் மீடியா பயன்பாடு கிடையாது என்பதால் கூட விஜயகாந்த் பற்றி பலரும் பேசாமல் இருந்திருக்கலாம்.
பிரபலங்கள் கருத்து
ஆனாலும் இப்போது விஜயகாந்த் பற்றி அனைவருமே நல்ல விதமாகத்தான் பேசி வருகிறார்கள். விஜயகாந்த் பலருக்கும் உதவிகள் செய்து இரக்கிறார். சூட்டிங் போகும் இடமெல்லாம் கூட அங்கு இருப்பவர்களுக்கு சாப்பாடு கொடுத்திருக்கிறார் என்று பலரும் கூறியிருக்கிறார்கள். அதுபோல சினிமா துறையிலும் சின்ன சின்ன வேலைகள் பார்ப்பவர்களில் இருந்து பிரபல நடிகர் நடிகைகள் வரை அனைவருக்குமே உதவிகள் செய்திருக்கிறார்.

விஜயகாந்த் - ஆனந்தராஜ் நடித்த படங்கள்
அந்த வகையில் விஜயகாந்த் உடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஆனந்தராஜ் விஜயகாந்த் பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதிலும் ஆரம்பத்தில் எல்லாம் விஜயகாந்துடன் ஆனந்தராஜ் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் ஆனஸ்ட் ராஜ், புலன் விசாரணை, மாநகர காவல், நரசிம்மா, திருமூர்த்தி, செந்தூரப்பூவே, வானத்தைப்போல உட்பட பல படங்கள் ஹிட் ஆகி இருக்கிறது.
நடிகர் ஆனந்தராஜ் பேட்டி
இந்த நிலையில் ஆனந்தராஜ் பேசும்போது நானும் விஜயகாந்த் சாரும் ஒரு நாள் சூட்டிங் முடித்துவிட்டு பிளாட்பாரத்தில் உட்கார்ந்து இருந்தோம். காரணம் இப்போ இருக்கிற மாதிரி கேரவன் வசதி எல்லாம் அப்போ கிடையாது. நாங்கள் அங்கு உட்கார்ந்து இருக்கும் போது பெரிய கூட்டம் அங்கு வந்து விட்டது. அவருடைய ரசிகர்கள் எல்லோரும் அவரிடம் பேச வேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் மட்டும் பைக்ல எல்லாரையும் தள்ளுங்க தள்ளுங்கன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருந்தாரு.
கடவுள் கொடுத்த பிச்சை
ரோட்டை மறைத்து சூட்டிங் பண்றாங்களே.. என்ன பண்றது? என்று அவர் சொல்லிட்டு போயிட்டாரு. அப்போ விஜயகாந்த் சார் என்னிடம் "சினிமா பிடிக்காதவர்களுக்கு நாம ரொம்ப சாதாரண மனுஷங்க. நாம ஒன்னும் ஆகாயத்தில் இருந்து வரல. நம்மளும் சாதாரண மனுஷங்க தான். நமக்கு கடவுள் கொடுத்த ஒரு பிச்சை இதுதான்னு சொன்னாரு" அவர் சொன்ன அந்த வார்த்தையை தான் என்னுடைய கண்ணை திறந்தது என்று ஆனந்தராஜ் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications