சாந்தமான முகம்.. சந்தோஷமான நடிப்பு.. மனசை அள்ளும் கவிதா
சென்னை: இணையதளத்திலேயே தன்னுடைய சாந்தமான முகத்தால் கலக்கி கொண்டிருக்கும் கவிதா தாங்க இப்போ டிரண்டிங்கில் இருக்கார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆளாளுக்கு போட்டி போட்டு கவர்ச்சி காட்டி பிரபலமாகிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய குடும்ப பாங்கான குடும்ப குத்துவிளக்காக ஜொலித்துக் கொண்டிருக்கும் கவிதா சீரியல்களிலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
இவர் குழந்தையாக இருக்கும்போதே திரைப்படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தன்னுடைய ஐந்து அல்லது ஆறாவது வயதிலேயே அஞ்சலி படத்தில் இவரும் ஒரு குட்டிப் பாப்பாவாக நடித்திருக்கிறாராம்.

அஞ்சலியில் அசத்தல்
முதல்படமே மணிரத்தினம் இயக்கிய படத்தில் நடித்தது இப்ப இவருக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அந்த படத்தில் நடிக்கும்போது இவருக்கும் இவர் கூட நடித்த குழந்தைகளுக்கும் அப்பப்ப ஐஸ்கிரீம் ,சாக்லேட் வாங்கி கொடுத்து அழகாக நடிக்க வைத்திருக்கிறார்கள். அந்த படத்தில் நடிப்பது இவருக்கு ஜாலியாக இருந்தது. அதை விட ஸ்கூல் கட் அடித்துவிட்டு சூட்டிங் போறது ரொம்பவே கொண்டாட்டமாக என்ஜாய் பண்ணி இருக்கிறார்.

அம்மா ஆசைப்படி
இவருடைய அம்மாவின் ஆசைகள் தான் இவர் நடிக்க வர முக்கியக் காரணமே. இவங்க வீட்டின் எதிர் பக்கம் இருந்த போட்டோகிராபர் உதவியோடு இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை தொடர்ந்து முகவரி உள்ளிட்ட பல படங்களிலும் சின்ன சின்ன ரோல்களில் எடுத்துக்கொண்டிருந்தார். சினிமாவை தொடர்ந்து சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்ததும் இவருக்கு மறக்கமுடியாத தருணம்.

மேகாவாக சக்தி
முதன்முதலில் சக்தி தொடரில் மேகா வாக அறிமுகமாகி கலக்கியிருக்கிறார் .இந்த சீரியலுக்கு பிறகு இவரை அனைவருமே மேகா என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தார்கள். இவரது கவிதா என்னும் பெயர் மறந்து போகிற அளவுக்கு எல்லோரும் மேகாவாகவே இவரைப் பார்க்கிறார்கள். அதன்பிறகு ஆனந்தம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் முதல் நாள் நடித்ததும் இந்த சீரியலில் நடிக்க மாட்டேன் என்று அழவே ஆரம்பித்து விட்டாராம்.

ஆனந்தம் சீரியல் பிரேக்
இந்த சீரியலில் இவரது கேரக்டர் இரண்டாவது மனைவியாக இருப்பது இவருக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லையாம். அதன் பிறகு சீரியல் குழுவினர் இவரிடம் பேசி கதையை பற்றி நன்கு புரியவைத்து நடிக்க சொல்லி இருக்கிறார்கள் .ஆனாலும் இவருக்கு விருப்பம் இல்லாமல் தான் நடித்தாராம் .ஆனால் அது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று அவர் அப்போது நினைக்கவே இல்லையாம் .அந்த சீரியலில் நல்லவேளையாக அந்த கேரக்டரில் தான் நடித்ததாக இப்போ கூறுகிறார்.

வள்ளி சீரியல்
அதன் பிறகு கோலங்கள் சீரியலிலும் வள்ளி சீரியலிலும் கலக்கி இருக்கிறார் .வள்ளி சீரியல் கதாநாயகனின் அக்காவாக நடித்திருப்பார். உண்மையிலேயே இருவரும் அக்கா தம்பி போல தான் பழகினார்கள். இப்ப வரைக்கும் போன் பண்ணும்போது சொல்லு விக்கி என்றுதான் கூறுவாராம். இந்த அளவிற்கு அந்த சீரியலில் அனைவரும் ஒன்றாக ஒரு குடும்பமாக வாழ்ந்து இருக்கிறார்கள். திடீரென்று அந்த சீரியலை முடித்ததும் இவரால் தாங்கவே முடியவில்லை.

சோக கீதம்
எல்லோரும் உட்கார்ந்து ரொம்ப பீல் பண்ணி அழுதிருக்கிறார்கள். நம்ம எல்லாரையும் எப்போது பார்ப்போம் என்று இந்த சீரியலின் கதாநாயகி கேரளாவை சேர்ந்தவர் என்பதால் இவங்க எல்லாரும் ரொம்பவே பீல் பண்ணினாராம். இவர் சன் டிவியில் ஹீரோயினாக ஆரம்பித்து பிரண்டாக, அக்காவாக நடித்து இப்போ நிலா சீரியலில் அம்மாவாக நடித்து கொண்டிருக்கிறார்.

கண்மணியில் வில்லத்தனம்
சன் டிவியில் கொஞ்ச காலத்துக்கு முன்னாடி ஒளிபரப்பான கண்மணி சீரியலில் இவர் முதல்முறையாக வில்லியாக கெட்டப் சேஞ்ச் பண்ணி நடித்திருக்கிறார். இந்த ஒரு சீரியலில் மட்டும்தான் இவர் வில்லியாக நடித்து இருக்கிறாராம் .அதனை தொடர்ந்து வந்து வாய்ப்புகள் எல்லாமே இவருக்கு பாசிட்டிவ் கேரக்டர் மட்டும்தானாம்.அது தான் இவருக்கு முழுமையாக செட் ஆகிறது என்று ரசிகர்களும் இயக்குனர்களும் நினைக்கிறார்களாம்.

படிப்ஸ் பார்ட்டி
சின்ன வயசில் படிக்கிறது நான் ரொம்ப பிடிக்குமாம். எப்போதும் படித்துக்கொண்டே இருப்பார் அதுவும் கதைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும் .ஆனால் இப்ப எல்லாம் படிக்கிறதுக்கு டைமே கிடைக்கலையாம். போனை பார்க்கிறதுக்கே டைம் பத்தலை என அங்கலாய்க்கிறார். முன்பு விஜயின் தங்கச்சியாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் விஜய் இவருடன் நடிக்கும் போது ஜாலியாக கலகலப்பாக நடித்துக் கொண்டிருப்பார். ஆனால் ஷாட் முடிந்து கடு என்று சொன்னதும் தனியாக உட்கார்ந்து படித்துக் கொண்டு இருப்பாராம்.

விஜய்யுடன் நடிப்பு
இவருக்கு அந்த வயதில் அவருடன் பேசவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் பேச பயந்து ஒரு வார்த்தை பேச மாட்டாரா என்று அவரைப் பார்த்துக் கொண்டிருப்பாராம். இவருக்கு விஜய்யின் டான்ஸ் என்றால் கொள்ளை பிரியமாம். இவர் விஜய் கூட மட்டுமல்ல அஜித் உடனும் முகவரி படத்தில் நடித்திருக்கிறார் .அந்த தருணத்தையும் தன்னால் மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார் .அஜித் ஒரு எளிமையான ஸ்டார் என்று புகழாரம் சூட்டுகிறார்.

அஜீத்தும் பிடிக்குமாம்
தானொரு ஹீரோ என்கிற மனநிலை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது . ஷூட்டிங் டைம்ல எங்குபார்த்தாலும் குட் மார்னிங் சொல்லுவாராம். அதுமட்டுமல்ல பார்க்கும்போது சாப்பிட்டாச்சா நல்லா சாப்பிட்டீங்களா அப்படீனு பாசமாகவும் எல்லோரிடமும் கூறுவார் என்று அவருடன் நடித்த காலங்களையும் மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இந்த அளவுக்கு ஹோம்லியா ரசிகர்கள் மனதில் பதிந்த இவர் இணையதளத்திலும் குடும்ப குத்துவிளக்காக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

உருகும் ரசிகர்கள்
இவரைப் பற்றி ரசிகர்கள் உருகி உருகி நல்லவிதமாக கமெண்டுகளை வீசியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல இவருடைய அழகை புகழ்ந்து தள்ளுகிறார்கள். என்றும் பதினாறு போல ஜொலிக்கிறார் என்று பொறாமைர்படுகிறார்கள். இவருடைய நீளமான முடி இவருக்கு பிளஸ் பாயிண்ட். என்ன இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி காட்டிய பிரபலமாகும் நடிகர்கள் மத்தியில் ஹோம்லியாகவும் ஜொலிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நம்ம கவிதா.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications