Anbe Diana: ஓடிடியில் வந்த அன்பே டயானா.. எதில் பார்க்கலாம்? கொஞ்சம் கலவரமான காதல் கதை தான்
சென்னை: தியேட்டரில் கடந்த ஜூலை மாதம் வெளியான அன்பே டயானா திரைப்படம் தற்போது ஓடிடி ரசிகர்களின் கவனத்தை திருப்பி இருக்கிறது. பாரி இளவழகன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 29 முதல் சோனி லைவ்வில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.
சென்னை பெரம்பூரை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் பாரி இளவழகன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதுவும் தெலுங்கு குடும்பத்தை சேர்ந்த சீதா கிருஷ்ணா என்ற இளைஞராக நடித்திருக்கிறார். சிறுவர்களுக்கு தடகள பயிற்சி கொடுக்கும் அவருக்கு ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சேர்ந்த மாடர்ன் சிந்தனை கொண்ட டயானா மீது காதல் வருகிறது. அந்த டயானா கேரக்டரில் ரம்யா ரங்கநாதன் நடித்திருக்கிறார்.
காதல் வந்துவிட்டதே என்று எல்லாம் சுலபமாக முடிந்து விடவில்லை. ஒரு பக்கம் காதல், இன்னொரு பக்கம் குடும்பத்தின் எதிர்ப்பு அதற்கு மேலாக இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்களின் பின்னணி என கதை நகர்கிறது.

ரோஜாவின் நடிப்பு
குறிப்பாக கிருஷ்ணாவின் அம்மா சரளா கேரக்டரில் வரும் நடிகை ரோஜா நம்ம ஊர்.. நம்ம ஆளு என்ற மனநிலையுடன் மகனின் திருமணத்தை பற்றி பல கனவுகளை வைத்திருக்கிறார். அதனால் தன்னுடைய சொந்தக்காரங்கள் கூட அடுத்த ஜாதியில் திருமணம் செய்தால் அசிங்கப்படுத்துகிறார். இதனால் இந்த காதலை வீட்டில் சொல்ல முடியாமல் ஹீரோபடும் அவஸ்தையும் இரண்டு குடும்பங்களுக்குள் உருவாகும் பிரச்சனைகள் தான் படத்தின் முக்கிய பகுதி.
படத்தின் பிளஸ் பாயிண்ட்
படத்தின் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கேரக்டர்கள் பேசும் மொழியும் அவர்களுடைய வாழ்க்கை முறையும் தான். தமிழ் படங்களில் வழக்கமான பார்க்கும் ஒரே மாதிரியான காதல் கதை இல்லாமல் ஆங்கிலோ இந்திய குடும்பத்தின் கலாச்சாரத்தை கொஞ்சம் வித்தியாசமாக காட்ட முயற்சி செய்து இருக்கிறது. படத்தில் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, செல் முருகன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோஜா இந்த படத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்பே டயானா ஓடிடி
தியேட்டரில் படம் பார்த்தவர்களிடம் கலவையான கருத்துக்கள் இருந்தாலும் காதல் + காமெடி + குடும்ப செண்டிமெண்ட் கலந்த லைட் ஹார்ட்டட் படம் பார்க்க நினைப்பவர்களுக்கு அன்பே டயானா ஓடிடியில் ஒரு ஆப்ஷனாக இருக்கிறது. படத்தின் கதை பெரிய அளவில் சிக்கலானது இல்லை. இரண்டு கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் காதலித்தால் காதலை விட அவர்களுடைய குடும்பத்தையும் வாழ்க்கை முறையும் சமாளிப்பது தான் பெரிய பிரச்சனையா? என்பதுதான் படத்தில் மையம்.
அதனால் தியேட்டரில் இந்த படத்தை பார்க்காமல் தவறவிட்டவர்கள் இப்போது வீட்டில் இருந்தபடியே சோனி லைவில் அன்பே டயானாவை பார்க்கலாம். படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
