சன் டிவியில் முடிவுக்கு வரும் பிரைம் டைம் சீரியல்.. ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இதற்கான இறுதி நாள் சூட்டிங் முடிவடைந்து இருக்கிறது. அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அன்பே வா சீரியல் கடந்த 2020 நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டு இப்ப வரைக்கும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை டெல்னா டேவிஸ் நடித்திருந்தார். இவர் சீரியலின் கதைப்படி இறந்து போவது போன்று காட்டி விட்டனர். அதற்குப் பிறகு சீரியலின் கதையை மாற்றி இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியல் நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இப்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது. இதற்கான இறுதி கட்ட படபிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் முடிவு சில ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். காரணம் இந்த சீரியலில் கதாநாயகி டெல்னாவில் ரசிகர்கள் அவர் சீரியலில் இறந்து போவது போன்று காட்டிவிட்டதால் அதிருப்தியில் இருந்தனர்.
பொதுவாக சீரியலில் கதாநாயகி தான் அதிகமாக ஹீரோயிசம் காட்டிக் கொண்டிருப்பார். அது டெலினா டேவிஸுக்கும் பொருந்தும். இவர் அதிகமாக கதாநாயகனுக்காக கோர்ட்டில் வாதாடி பரபரப்பை ஏற்படுத்தி அதிகமாக இணையத்தில் கலாய்ப்பும் வாங்கிக் கொண்டிருந்தார். நடிகை டெல்னா அன்பே வா சீரியலில் பூமிகா கேரக்டரில் நடித்திருந்தார்.

அதுபோல சீரியல் நடிகை மகாலட்சுமி இந்த சீரியலில் கதாநாயகனின் அக்காவாக வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். ஆனாலும் டெல்னா தன்னுடைய கணவருக்காக பலமுறை தானே வழக்கறிஞர் படிக்காமலேயே கோர்ட்டில் வாதாடி இருக்கிறார். ஆனால் திடீரென்று அவர் அந்த சீரியலில் இறந்து போவது போன்று கதையை மாற்றி விட்டதால் இது சீரியல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகை டெல்னாவையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.
அதற்குப் பிறகு டெல்னா எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த நிலையில் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் அவர் நடிக்கும் தகவல் உறுதியாகி இருக்கிறது. இப்படியான நிலையில் அன்பே வா சீரியல் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் சீரியல் முடிவடைந்த ஒரு சில நாட்களிலேயே இந்த சீரியல் கதாநாயகன் விராட்க்கு திருமணம் நடைபெற இருக்கிறது.
நடிகர் விராட்க்கு சமீபத்தில் தான் எங்கேஜ்மென்ட் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் விராட் திருமணம் முடிந்ததும் அடுத்து புதிய சீரியலில் நடிக்க இருக்கிறாரா? அல்லது சில மாதங்கள் கழித்து சீரியலில் நடிக்க இருக்கிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications