சன் டிவி அன்பே வா சீரியல் நடிகருக்கு மகாபலிபுரத்தில் திருமணம்.. மணப்பெண் யாரு தெரியுமா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் விராட்டிற்கு இன்று மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருக்கின்றனர். தற்போது விராட்டின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் சன் டிவியில் "அன்பே வா" சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் விராட் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக எங்களுக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கின்றனர். இந்த நிலையில் விராட்க்கும் நவீனா என்பவருக்கும் இன்று மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

விராட் திருமணம் செய்திருக்கும் மணப்பெண்ணான நவீனா மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருந்து வருகிறார். இவர் செலிப்ரிட்டி மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக பலருக்கும் பிரபலமாக இருக்கிறார். அன்பே வா சீரியலில் வருண் கேரக்டரின் மூலம் அதிகமான ரசிகர்களை ஈர்த்த விராட்டின் என்கேஜ்மென்ட் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அந்த நேரத்திலேயே இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதும் வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. இந்த நிலையில் இப்போது இவருடைய திருமணம் பீச் ரெசார்ட்டில் பெரியவர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
அதேபோல விராட் நடித்துக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது. அதற்கான கடைசி நாள் ஷூட்டிங் கூட முடிவடைந்து விட்டது. இது குறித்து பல புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அன்பே வா சீரியலில் நடிகை டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்து வந்தபோது அவர் திடீரென்று இறந்து போவது போன்று காட்சிகளை வைத்து ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சி அடைய வைத்திருந்தனர்.

அதற்குப் பிறகு இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சுவாரசியம் குறைந்து வந்திருந்த நிலையில் இப்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த சீரியலில் வில்லியாக நடிகை மகாலட்சுமி நடித்து வந்தார். அவரும் இப்போது பொதிகை டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாயம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் விராட் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இவருக்கு திருமணம் முடிவடைந்து இருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு இவர் சீரியலில் நடிக்க இருக்கிறாரா? இல்லை தொடர்ச்சியாக புது சீரியலில் நடிக்க இருக்கிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications