ஸ்டீராய்டால் வந்த வினை.. உருவ கேலி.. 20 கிலோ வெயிட் லாஸ்.. “அன்பே வா” விராட்- நவீனா எமோஷனல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக வருண் கேரக்டரில் பிரபலம் அடைந்த விராட் கடந்த வாரத்தில் நவீனா என்ற மேக்கப் ஆர்டிஸ்ட்டை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இவர்கள் அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள்.
நவீனாவுக்கு ஏற்கனவே 15 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் விராட் அவரை திருமணம் செய்து கொண்டது அதிகமாக இணையத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு விராட் மற்றும் நவீனா தம்பதி பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கின்றனர்.

அதில் நவீனா பேசுகையில் நான் பதினெட்டு வயதில் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு கவிநயா என்ற பெண் குழந்தையும் இருக்கிறது. ஆனால் என்னுடைய முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் விவாகரத்து பெற்று தனியாக என்னுடைய குழந்தையை வளர்த்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அப்போதுதான் விராட்டிற்கும் நவீனாவிற்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார்கள். அது பற்றி விராட் பேசுகையில், விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் என்ன தப்பு இருக்கு? அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம லைஃப் நல்லா இருக்குமானு எனக்கு தோணுச்சுன்னா போதும் வேறு எதையும் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து பேசிய நவீனா, நான் ஒருத்தரை அவ்வளவு ஈஸியா நம்ப மாட்டேன். விராட் அவருடைய அம்மா கிட்ட எங்க காதலை சொல்ற வரைக்குமே நான் அவர் மேல முழு நம்பிக்கை வைக்கல. அதற்கு காரணம் கடந்த காலம் தான். என்னுடைய கடந்த காலத்தில் நான் ஏமாற்றங்களை பார்த்து பழகியதால் யாரையும் சட்டுனு நம்ப மனசு வரமாட்டேன் என்கிறது.
இவரை திருமணம் செய்ய போறேன்னு சொன்னதுமே பலவிதமான கமெண்ட்ஸ் வந்துடுச்சு. ஆன்டியை கல்யாணம் பண்ணிக்க போறியா? உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா? எல்லாம் நிறைய பேரு சொன்னாங்க. எனக்கு எங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும். கொரோனாவில் எங்க அப்பா தவறிட்டாங்க. எல்லா பொண்ணுங்களுக்கும் அவங்க அப்பாவ தானே ரொம்ப பிடிக்கும்.
எனக்கும் எங்க அப்பாவுடைய இழப்பை ஏத்துக்க முடியல. ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆனேன். அதுக்காக ஸ்டீராய்டு எடுத்துக்கிட்டேன். அது ஒத்துக்காம உடல் எடை அதிகமாகிவிட்டது. என்ன பாக்குற சிலர் நான் நல்லா சாப்பிட்டு குண்டாகிட்டதாக சொல்லுறாங்க. நான் சாப்பிட்டதால் குண்டாகல. நான் சாப்பாடு விஷயத்தில் ரொம்ப கவனமா இருப்பேன். ஹெல்தியா தான் சாப்பிடுவேன். நான் ரொம்ப குண்டாகிட்டதால் கல்யாணப் பேச்சு எழுந்தபோது வெயிட் லாஸ் பண்ண முயற்சி செய்தேன்.
அப்ப கூட இவர் நீ இப்படி இருக்கிறது தான் எனக்கு புடிச்சிருக்கு. எனக்காக நீ உடல் எடை குறைக்கணும்னு எந்த அவசியமும் இல்லை என்று சொன்னார். ஆனால் எனக்கு செல்ப் காண்பிடன்ட் வேணும்ல. ஏற்கனவே நம்மை விமர்சனம் பண்றாங்க. அவங்களுக்கு எக்ஸ்ட்ரா நாம பாயிண்ட் எடுத்துக் கொடுக்கணுமா? என்று தீவிரமா உடல் எடையை குறைத்தேன். எங்க கல்யாணத்துக்காக நான் 20 கிலோ வெயிட் லாஸ் பண்ணினேன். என்று அந்த பேட்டியில் நவீனா பேசியிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications