விஜய் சேதுபதி செய்ததை மறக்க முடியாது.. சிவகார்த்திகேயனின் இன்னொரு முகம்! ஆவுடையப்பன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில மனிதர்கள் பணமும், பெயரும், புகழும் கிடைத்ததும் தங்களுடைய கேரக்டரை மொத்தமாக மாற்றி விடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் எந்த நிலைமைக்கு போனாலும் எப்பவும் இப்படித்தான் என்று நிரூபித்து வருகிறார்கள். அதேபோல ஒருவர்தான் விஜய் சேதுபதி என்று தொகுப்பாளர் ஆவுடையப்பன் சொல்லி இருக்கிறார். தன்னுடைய கல்யாணத்தின்போது விஜய் சேதுபதி செய்த செயலை தன்னால் மறக்கவே முடியாது என்று அவர் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

தொகுப்பாளர் ஆவுடையப்பன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதற்கு முன்பே பல youtube சேனல்களில் பேட்டிகள் நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருக்கிறார். இப்படியான நிலையில் விஜய் சேதுபதியுடன் ஆரம்பத்திலேயே நல்ல நட்பு இருந்திருக்கிறது. அதனாலேயே தனது கல்யாணத்திற்கு விஜய் சேதுபதியும் வரவேண்டும் என்று அவருக்கு நேரிலேயே சென்று லெட்டர் கொடுத்தாராம்.

Avudaiyappan

அதுவும் ஒரு டப்பிங் ஆபீசில் விஜய் சேதுபதி இருக்கிறார் என்று தெரிந்ததும் அங்கு சென்று தான் லெட்டர் கொடுத்திருக்கிறார். அப்போது தேதி என்ன என்று விஜய் சேதுபதி கேட்டிருக்கிறார். இவரும் தேதியை சொன்னதும் சரி வரேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி எப்படி நம்ம கல்யாணத்துக்கு வருவார்? அவருக்கு இப்போ அடுத்தடுத்த படங்கள் இருக்கிறது அதற்காக பிசியாக இருக்கிறார் என்று இவரும் நினைத்திருக்கிறார்.

விஜய் சேதுபதியிடம் இருந்து வந்த போன்

பிறகு கல்யாணமும் வந்திருக்கிறது. கல்யாணத்தில் ரிசப்ஷன் போது திடீர்னு விஜய் சேதுபதி போன் செய்து லொகேஷன் அனுப்பு என்று சொல்லி இருக்கிறார். இவருக்கு கொஞ்சம் ஷாக்காகத்தான் இருந்திருக்கிறது. ஏனென்றால் அவர் வருகிறார் என்று ஒரு பேனரும் வைக்கவில்லை. எந்த ஏற்பாடுகளும் பண்ணவில்லை. அவர் வரமாட்டார் என்று நினைத்தோம், ஆனால் உடனே வருகிறேன் என்று சொன்னதும் டென்ஷன் ஆகி இருக்கிறார் ஆனாலும் லொகேஷன் அனுப்பி இருக்கிறார்.

எதிர்பார்க்காத சம்பவம்

சொன்னபடியே கொஞ்ச நேரத்தில் மண்டபத்திற்கு விஜய் சேதுபதி வந்துவிட்டாராம். ஆனால் அங்கு மணப்பெண் அப்போது ரெடியாகவே இல்லையாம். அவர் விஜய் சேதுபதியை வரவேற்று பேசிக் கொண்டிருந்திருக்கிறார். பிறகு மணப்பெண் ஸ்டேஜ் க்கு வந்து விஜய் சேதுபதியுடன் போட்டோ எடுத்திருக்கிறார். அங்கு அவருக்காக எந்த ஸ்பெஷல் ஏற்பாடுகளும் செய்யவில்லை ஆனாலும் அவர் நேரில் வந்து தனக்கு வாழ்த்து சொல்லிவிட்டு போனது ரொம்ப ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது என்று ஆவுடையப்பன் சொல்லி இருக்கிறார்.

கல்யாணத்தில் விஜய் சேதுபதி

அதேபோன்று அவருடைய கல்யாணத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் நடந்திருக்கிறது. அதாவது ஆவுடையப்பனும் அவரது மனைவியையும் காதலித்து கொண்டிருந்ததால் திருமண பத்திரிக்கை கொடுக்க இரண்டு பேருமே போயிருக்கிறார்கள். அதுவும் சிவகார்த்திகேயனை ஆவுடையப்பன் மனைவிக்கு ரொம்பவும் பிடிக்குமாம் அவருக்கு இன்விடேஷன் கொடுப்பதற்கும் இரண்டு பேரும் போயிருந்தார்களாம்.

சிவகார்த்திகேயன் செய்த செயல்

அப்போது சிவகார்த்திகேயனை நேரில் பார்த்ததும் அவருடைய பெண் மனைவிக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லையாம். சார் உங்களோட படங்கள் எல்லாம் பார்ப்பேன் என்று சொல்லி இருக்கிறார். அவரும் இவருக்கு இருக்கிற பதட்டத்தை புரிந்து கொண்டு அப்படியா சந்தோஷம் என்று பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். பிறகு கொஞ்ச நேரம் கழித்து இவர்கள் கிளம்பும்போது கூட இவர்கள் பைக் பக்கத்தில் வந்து நின்று வழி அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் அந்த இடத்தை விட்டு கிளம்பிய பிறகு தான் சிவகார்த்திகேயன் கூட ஒரு போட்டோ கூட எடுக்கவில்லையே என்று அவருடைய மனைவி கேட்டு இருக்கிறார். அவரை முதல் முறையாக நேரில் பார்த்ததும் எனக்கு பதட்டமாக இருந்தது அதனால் ஃபோட்டோ எடுக்க தயக்கமாக இருந்தது என்று மனைவி சொல்லிக் கொண்டே இருப்பாராம். ஆனால் சிவகார்த்திகேயன் ரொம்பவும் எளிமையாகவும், ஆரம்பத்தில் எப்படி என்கிட்ட பேசிக்கொண்டு இருந்தாரோ அதேபோலத்தான் இப்ப கூட பேசிக்கொண்டு இருப்பார் என்று ஆவுடையப்பன் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+