டிடியின் பிறந்த நாளுக்கு அக்கா பிரியதர்ஷினி சொன்ன “ஸ்பெஷல்” வாழ்த்து.. வெட்கத்தில் தங்கையின் பதிவு
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக பலருக்கும் பரீட்சையமான டிடி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினியின் பிறந்த நாளில் அவருடைய அக்கா பிரியதர்ஷினி எதிர்பார்க்காத வாழ்த்து ஒன்று தெரிவித்து இருக்கிறார்.
தன்னுடைய அக்கா தெரிவித்த வாழ்த்துக்கு டிடி அதற்கு கியூட்டாக பதில் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் பிரியதர்ஷினி வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

தொகுப்பாளர்கள் என்று சொன்னதும் டக்கென்று நினைவிற்கு வருபவர்களில் முதன்மையானவர்தான் டிடி நீலகண்டன். இவர் ஆரம்பத்தில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அதற்கு பிறகு பெரிய அளவில் பிரபலமானது தொகுப்பாளினியாகத்தான். இயக்குனர் மௌலி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்த நள தமயந்தி என்ற திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாக இருந்தாலும் சின்னத்திரையில் நடிகை ராதிகா சரத்குமாரின் செல்வி, அரசி போன்ற சீரியல்களில் நடித்து வந்த டிடி 2007 ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக சேர்ந்து இருந்தார்.
அதற்கு பிறகு விஜய் டிவியின் அடையாளமாகவே மாறி இருந்தார். அதிலும் குறிப்பாக காபி வித் டிடி, அன்புடன் டிடி போன்ற நிகழ்ச்சிகள் டிடிக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருந்தது. அதே நேரத்தில் டிடி தஞ்சாவூரு மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் பள்ளி படிப்பை முடித்து சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பார்ட் டைம் ஆக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கி இருக்கிறார்.
அதற்கு முன்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியில் குழந்தை தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் அதற்குப் பிறகு பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார். அதுபோல ராஜ் டிவியில் ஒளிபரப்பான ரெக்ககட்டி பரந்த மனசு என்ற சீரியலில் இவர் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து சினிமா, சீரியல் என்று நடித்துக் கொண்டிருக்கும் டிடிக்கு சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனை.
அதிலும் டிடி அவருடைய நண்பரையே காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் திருமணம் ஆன ஒரு சில மாதங்களுக்குள் விவாகரத்து ஆகி அதற்கு பிறகு ஏற்பட்ட சர்ச்சைகள் அதைத் தொடர்ந்து உடல்நல பிரச்சனைகள் என்று பல்வேறு பிரச்சனைகள் வந்திருந்தாலும் அதை கண்டு தயங்கி போய் இருக்காமல் அடுத்தடுத்து மேலே வந்து கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று அவருடைய பிறந்தநாள் அதற்காக டிடியின் அக்காவான பிரியதர்ஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் மகிழ்ச்சி நிறைந்த நாளாகவும், மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாகவும் அமைய வாழ்த்துக்கள் என்று வாழ்த்துக் கூறி.. "ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி பிறந்தாலே" என்ற பாடலுக்கு டிடியின் புகைப்படங்களை எடிட் செய்து அதில் போஸ்ட் போட்டு இருக்கிறார். இதற்கு டிடி வெட்கத்தோடு தேங்க்ஸ் அலோடட் என்று தெரிவித்திருக்க இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications