ஆசை கனவால் வந்த வினை! மீண்டும் மருத்துவமனையில்.. 4வது அறுவை சிகிச்சை.. உருக்கமாக டிடி போட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுப்பாளினி டிடி தான் மருத்துவமனையில் இருக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தனக்கு பத்து வருடத்தில் நான்காவது முறையாக மீண்டும் கால் முட்டியில் ஆப்ரேஷன் நடந்திருப்பது பற்றி உருக்கமாக டிடி அதில் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் அவர் மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் வரவேண்டும் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.

அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கையை தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழுற வரைக்கும் எல்லோரிடமும் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போய்விட வேண்டும் என்பதுதான் நிசப்தமான உண்மையாக இருக்கிறது. 25 வருடங்களாக சின்னத்திரையில் டிடி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் அவருடைய நிகழ்ச்சியை பார்த்தாலே பலருக்கும் புத்துணர்ச்சி வந்துவிடும். அந்த அளவிற்கு சுறுசுறுப்பாகவும், ஜாலியாகவும் இவருடைய நிகழ்ச்சிகள் இருக்கும்.

divyadarshini dd

அதற்காகவே டிடி நிகழ்ச்சியை பலர் விரும்பி பார்த்து இருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் டிடி எந்த டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது கிடையாது. பெரிய படங்களுக்கு மட்டும் பிரமோஷன் நேரங்களில் பேசி இருக்கிறார். அதிலும் இப்போது சில வருடங்களாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது கிடையாது. ஆனால் பெரிய தொகுப்பாளினியாக வரவேண்டும் என்ற ஆசை கனவோடு இருந்த டிடிக்கு அவருடைய உடல்நிலை பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

விஜய் டிவியில் டிடி தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை டிடி தொகுத்து வழங்கியிருந்தார். ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும்தான் அவர் தலைகாட்டாமல் இருந்தார். ஆனால் அதிலும் அவர் சிறப்பு விருந்தினராக சில நேரங்களில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இப்படி விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த டிடிக்கு சில வருடங்களுக்கு முன்பு காலில் மூட்டு வலி வந்திருக்கிறது.

divyadarshini dd

அதிகமான நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பதால் டிடிக்கு இந்த பிரச்சனை தொடங்கியிருக்கிறது. அப்போது செய்த ஆபரேஷனில் சின்ன கவனக்குறைவு ஏற்பட அது அவருடைய காலில் மேலும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆப்ரேஷன் என்று இதுவரைக்கும் மூன்று ஆப்ரேஷன்களை டிடி காலில் செய்திருக்கிறார்கள். இப்போது நான்காவது ஆப்ரேஷன் செய்திருக்கிறார்கள்.

அப்போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை டிடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் இந்த பதிவு லாங் போஸ்டாக இருக்கிறது, கடந்த மூன்று மாதங்கள் எனக்கு சோதனையான நேரங்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய முழங்காலுக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்தோம். இந்த முறை மொத்தமாக முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.

divyadarshini dd

இது என்னுடைய நான்காவது அறுவை சிகிச்சை. என்னுடைய வலது முழங்காலில் 10 வருடங்களாக வலி இருந்து கொண்டே இருக்கிறது. எனது வலது முழங்காலுக்கு இதுவே இறுதி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கிறேன். இதுவரை நான் அனுபவித்த வேதனையில் இருந்து என்னை மீட்கும் என்று நம்புகிறேன். ஆனால் ஆப்ரேஷனுக்கு பிறகு என் உடல்நிலை முன்னேற்றத்துடன் உள்ளது.

நான் வலுவடைந்து வருகிறேன் விரைவில் உங்களை சந்திப்பேன் என்று டிடி பதிவு வெளியிட்டிருக்கும் நிலையில் அவரோடு தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தீபக், கிகி என்ற கீர்த்தி, குரேஷி, வாணி போஜன், நடிகர் ஜீவா, சுரேஷ் சக்கரவர்த்தி, நடிகை திரிஷா உட்பட பல பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இத்தனை ஆண்டுகளாக எனக்காக ஜெபித்தவர்களும், வேலையில் எனக்கு ஆதரவளித்தவர்களுக்கும் என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து ஒரு பெரிய நன்றியை சொல்ல விரும்புகிறேன். அது என்னை என் இருண்ட நாட்களில் இருந்து வெளியே கூட்டி வருகிறது. இந்த வலி என்னை ஒரு கசப்பான நபராக மாற்ற வேண்டாம் என்று நான் எப்போதும் எனக்குள்ளே சொல்லிக் கொண்டிருந்தேன்.

நான் நினைத்தது நடப்பதற்கு உங்களுடைய அன்பு தான் எனக்கு உதவியது. என்னுடைய மனதில் இப்போது வெளிச்சம் உருவாகி இருக்கிறது. மீண்டும் வலுவாக வருவேன் என்று உறுதி அளிக்கிறேன். அதுபோல என்னை இந்த அளவிற்கு மீண்டு வர செய்த அறுவை சிகிச்சை டாக்டர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்கு இருந்த செவிலியர்களும் என்னை தங்களுடைய சொந்தம் போல கவனித்துக் கொண்டார்கள் அவர்களுக்கும் நன்றி. என் பக்கத்தில் இருந்த என்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றி. கடைசியாக நான் எங்கும் கடந்து செல்வதை நீங்கள் கண்டால் இந்த கடினமான 10 ஆண்டுகளில் என்னை நன்றாக இருக்கும்படி வாழ்த்தியவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் தயவு செய்து என்னிடம் வந்து பேசுங்கள்.

நான் வலுவடைந்து வருகிறேன் விரைவில் உங்களை சந்திப்பேன் என்று டிடி பதிவு வெளியிட்டிருக்கும் நிலையில் அவரோடு தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தீபக், கிகி என்ற கீர்த்தி, குரோஷி, வாணி போஜன், நடிகர் ஜீவா, சுரேஷ் சக்கரவர்த்தி, நடிகை திரிஷா உட்பட பல பிரபலங்கள் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

டிடி பழைய நிலைக்கு மீண்டும் வந்து சிரித்த முகமாக அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும் என்று நாமும் நம்முடைய வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறோம். டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் உங்களுக்கு எந்த நிகழ்ச்சி ரொம்ப பிடித்தது என்பதை கமெண்டில் தட்டி விடுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+