என்னை குறை சொன்னவங்க வாழ்க்கையை, இப்போ பார்க்கும்போது.. எல்லாம் மாறிப்போச்சு! டிடி நெகிழ்ச்சி
சென்னை: தொகுப்பாளினியாக பலருக்கும் பரிச்சயமான டிடி பல வருடங்களாக சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது தன்னை குறை சொல்லியவர்களை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
பொதுவாக ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்றாலே அவர் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் பரப்ப தொடங்கி விடுவார்கள். பிரபலங்கள் உடைய குடும்பத்தினர்களும் நண்பர்களும் அக்கறை என்கிற பெயர்களில் அப்படி இரு.. இப்படி இரு.. என்று அட்வைஸ் பண்ணுவார்கள். அதே நேரத்தில் ஒரு சிலர் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி வந்து விட்டால் இவங்க இப்படி சாதிப்பாங்க என்று எங்களுக்கு அப்பவே தெரியுமே என்று ஜகா வாங்கி விடுவார்கள்.

இதுதான் உலக வழக்கம்
அதுபோல ஒருவர் கஷ்டப்படுகிறார் என்றால் எங்களுக்கு தான் தெரியுமே நாங்க அப்பவே அப்படி சொன்னோம் இவங்க தான் கேட்கவில்லை என்று வசை பாடுபவர்களையும் பார்த்திருப்போம். இது நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர்களும் உறவினர்களும் மட்டும் இப்படி செய்யல எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் சரி அவர்களுடைய வாழ்க்கையிலும் இந்த மாதிரி சூழ்நிலைகளை தாண்டித்தான் வந்திருப்பார்கள்.
படிக்கும்போதே வேலை
அதுபோலத்தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் தொகுப்பாளினி டிடி வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் அவர் பேசும்போது நான் ஸ்கூல் காலேஜ் படிக்கும்போதே வேலைக்கு வந்துவிட்டேன். ஸ்கூல் படிக்கும்போது வேலை பார்த்துக் கொண்டிருப்பதால் சரியாக என்னால் ஸ்கூல் லைஃபை என்ஜாய் பண்ண முடியவில்லை. அதற்கு பிறகு கல்லூரியில் என்னுடைய நண்பர்களின் உதவியால் படிப்பை சரியாக முடித்தேன்.

அட்வைஸுக்கு பஞ்சமில்லை
அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பலர் பலவிதமாக அட்வைஸ் கொடுத்தார்கள். அதை நான் என்னுடைய முயற்சியின் படி அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும் போது இது செய்தா சரியா வராது, அது செய்தா சரியா வராது என்று நம்மை முடக்கத்தான் பார்த்தார்கள். நான் கூட ஒரு கட்டத்தில் அவர்கள் சொல்வது சரிதானா? அவர்களை எப்படி திருப்தி படுத்தலாம் என்று கூட யோசிக்க வைத்து விட்டார்கள்.
குறை சொன்னவர்கள் நிலை
நம்முடைய செல்ப் கான்ஃபிடன்ட் உடைக்கும் வகையாக தான் அட்வைஸ் என்கிற பெயரில் சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த செல் மோட்டிவ் எல்லாம் ரெண்டு வருஷம் தான் இருக்கும் அதுக்கு பிறகு காணாமல் போய்விடும். அதுக்கு பிறகு உன் நிலைமை என்ன என்ற ஒரு எதிர்காலம் குறித்த பயத்தை எல்லாரும் ஏற்படுத்துவார்கள். ஆனால் இப்போ நம்மை கூறியவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று எட்டிப் பார்த்தால் அதை சொல்லவே முடியாது அந்த அளவிற்கு இருக்கிறது.

விஜய் டிவி தொகுப்பாளினி
அதனால் யார் என்ன வேணாலும் சொல்லிட்டு போகட்டும் நம்முடைய மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அப்படி நம்முடைய பயணத்தை வழிநடத்த வேண்டும் அவ்வளவுதாங்க என்று டிடி அழகாக அட்வைஸ் கொடுத்திருக்கிறார். டிடி என்ற திவ்யதர்ஷினி விஜய் டிவியில் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தார்.
லேட்டஸ்ட் போட்டோஸ்கள்
ஆனால் சமீபத்தில் அவர் எந்த நிகழ்ச்சியிலும் காணவில்லை ஆனாலும் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார். இது நம்ம டிடியா என்று பலரும் வியக்கும் வகையில் இவருடைய புகைப்படங்கள் இருப்பதாக கமெண்ட்டுகள் குவிகிறது.

டிடி கொடுத்த விளக்கம்
அதுபோல டிடிக்கு மட்டும் எத்தனை வயதானாலும் இன்னும் அப்போ இருந்தது போல இப்பவும் இளமையாக இருக்கிறாரே என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அப்படி எல்லாம் இல்லைங்க எனக்கும் வயது ஆகிக்கொண்டிருக்கிறது அதனால் மாற்றம் தெரிகிறது. எல்லோரும் இதை சும்மா சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய தலைமுடியை பாருங்கள் அதிலேயே மாற்றம் தெரியும் என்று குழந்தைத்தனமாக சிரித்தபடியே டிடி கூறி இருக்கிறார்.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications