அஜித்துடன் நடிக்க மறுத்த டிடி.. அதுவும் அந்த திரைப்படத்தில்தான்! அவரே சொன்ன காரணம்
சென்னை: தொகுப்பாளினியான டிடி சமீபத்தில் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது நடிகர் அஜித் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது தான் அதில் நடிக்க மறுத்துவிட்டேன், அதற்கான காரணம் இது தான் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார்.
தொகுப்பாளினி என்று சொன்னதுமே ஒரு சிலருடைய முகம் டக்கென்று நினைவிற்கு வரும். அதில் டிடியும் கண்டிப்பாக இடம் பிடித்திருப்பார். டிடி விஜய் டிவியில் ஆரம்பத்தில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். 10 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த டிடி ரேடன்ஸ் மீடியா தயாரித்த ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

டிடி நடித்த சீரியல்
கோலங்கள் உட்பட பல சீரியலில் நடித்து இருந்தாலும் செல்வி சீரியலில் நடிகை ராதிகாவுடன் அடிக்கடி சண்டை போடும் கேரக்டரில் டிடி நடித்திருந்தார். சீரியலில் இருந்து டிடிக்கு தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய தனி ஸ்டைலால் டிடி அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். அதற்குப் பிறகு காபி வித் காதல் உட்பட ஒரு சில திரைப்படங்களிலும் வெப் சீரிஸிலும் டிடி நடித்திருந்தார்.
வாய்ப்பை தவறவிட்ட டிடி
விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்த டிடி சமீபத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் சின்னத்திரையில் தொகுத்து வழங்கவில்லை. அது குறித்து அவர் போட்டியில் பேசும்போது கூட தன்னுடைய கால் முட்டியில் ஆபரேஷன் செய்திருந்ததால் தன்னால் அதிக நேரம் நின்று கொண்டிருக்க முடியவில்லை. டிவி சேனல் தரப்பினரிடம் தனக்கு தொகுத்து வழங்கும் போது ஒரு சேர் வசதி செய்து தரும்படி கேட்டு இருந்தேன் ஆனால் அதற்கு முடியாது என்று மறுத்துவிட்டார்கள் என்று கூறியிருந்தார்.
அஜித்துடன் நடிக்க வாய்ப்பு
இப்படியான நிலையில் இப்போது ஒரு சில திரைப்படங்கள் ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசும்போது தனக்கு நடிகர் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த நேரத்தில் எனக்கு கால் முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது இதனால் நம்மால் நடிக்க முடியாது என்று நான் நினைத்தேன், அதனால் நான் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன்.

நடிக்காத காரணம்
எனக்கு உடல்நிலை சரியானதும் வேதாளம் திரைப்படத்தில் தான் அஜித்துக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்தது என்று தெரிந்தது. அப்போ நான் ரொம்ப வருத்தப்பட்டேன். உடல்நிலை பிரச்சனையால் தான் நான் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதற்கு பிறகு அந்த குழுவினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இனி நான் எந்த சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டேன்.
சோசியல் மீடியாவில் பிரபலம்
திரைப்படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். எனக்கு சரியான கேரக்டர் வரும்போது அந்த திரைப்படத்தில் கமிட்டாகலாம் என்று காத்திருக்கிறேன் என்று டிடி கூறி இருக்கிறார். டிடி சின்னத்திரையில் இப்போது இல்லை என்றாலும் சோசியல் மீடியா பக்கங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார். அதுபோல ரீல்ஸ் வீடியோக்களையும் குவித்து கொண்டிருக்கிறார்.
-
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
Ajith: அஜித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த தாயின் கதை! மேற்கு வங்காளத்தில் பிறந்த மோகினி மணி யார்? வெளியான தகவல் -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
முகம் முழுக்க சோகம்.. தாயார் மறைவால் துபாயில் இருந்து சென்னை வந்த அஜித்குமார் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications