Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொகுப்பாளர் டிடி கணவரை விவாகரத்து செய்ய காரணம் இதுதானா? பிரபலம் சொன்ன அதிர்ச்சி காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுப்பாளராக பலருக்கும் தெரிந்த டிடி என்ற திவ்யதர்ஷினி பலருக்கும் முன் மாதிரியாக இருந்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நண்பரையே காதலித்து திருமணம் செய்திருந்தார். சில மாதங்களுக்குள் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்து விட்டது.

Anchor Divyadarshini what is the reason divorced her husband

இந்த நிலையில் டிடி எதனால் திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்று பிரபல நடிகர் ஒருவர் சில தகவல்களை கூறி இருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.

விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு பல வருடங்களாகவே விஜய் டிவியில் தொடர்ச்சியாக தொகுப்பாளராக பணியாற்றி வரும் டிடி பலமுறை சிறந்த தொகுப்பாளர்களுக்கான விருதினையும் பெற்றிருக்கிறார். அதனாலேயே இவருடைய திவ்யதர்ஷினி என்ற பெயரில் மறந்து பலர் இவரை டிடி என்று கூப்பிட்டு வருகின்றனர்.

திவ்யதர்ஷினி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சில சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடுத்திருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி என்று பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு பல பிரபலங்களையும் சரளமாக பேட்டி எடுக்கும் இவருடைய திறமையை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அதுபோல பல இசை வெளியீட்டு விழாக்களையும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளையும் சகஜமாக தொகுத்து வழங்கும் டிடி எப்போதும் சிரித்த முகமாகவே இருந்து வருகிறார். அதனாலயே இணையத்தில் அதிகமான ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் இவ்வளவு பிரபலமாக இருந்தாலும் நடிகை டிடியின் சொந்த வாழ்க்கை சோகமானதாக தான் இருந்து வருகிறது.

Anchor Divyadarshini what is the reason divorced her husband

அதாவது திவ்யதர்ஷினி 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்தர் என்ற தன்னுடைய நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை கொடுத்திருந்தனர். சந்தோஷமாகவே இவர்களுடைய திருமணம் அதைத் தொடர்ந்து reception என அனைத்தும் நடந்திருந்தது. ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில மாதங்களுக்குள் பிரிந்து விட்டனர்.

ஆனால் தன்னுடைய சோகமான வாழ்க்கையை வெளியே காட்டிக் கொள்ளாத டிடி இப்போதும் தைரியமாக பலருக்கும் மோட்டிவேஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் பலரும் அவரை பாராட்டிக் கொண்டிருந்தாலும் சமீபத்தில் பிரபல சினிமா விமர்சகரும் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் டிடியின் விவாகரத்துக்கான காரணம் பற்றி பேசி இருக்கிறார்.

அந்த வகையில் அவர் கூறுகையில் டிடி சில மாதங்களில் ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்திருந்தார். அதற்கு காரணம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும் தெரிந்து கொள்ளாமலும் பாடி டிமாண்ட் காரணமாக திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்து கொண்டதுதான் என்று அதில் பேசியிருக்கிறார். ஏற்கனவே பயில்வான் பல நடிகைகளை பற்றி தொடர்ச்சியாக கருத்து கூறி வந்திருக்கும் நிலையில் இப்போது டிடியை பற்றியும் பேசி இருப்பது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+