Barathi Kannamma Serial: சபாஷ் மணிமேகலை.. பாரதி கண்ணம்மாவில் கலக்கல் கேரக்டர்!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் விஜய் டிவியில் புகழ் பெற்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை நடிச்சு இருக்கார். இந்த சீரியலில் சபாஷ் சொல்லும்படியாக மணிமேகலையின் கதாபாத்திரம் இருக்கிறது. சபாஷ் நல்ல ஆரம்பம்தான்.
கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்காது என்று சதிகாரி வெண்பா கொடுத்த பொய்யான சான்றிதழ் இந்த வேலை எல்லாம் செய்யுது. பாரதிக்கும் குழந்தை பிறக்காது என்று சான்றிதழ் கொடுத்து நம்ப வச்சுடறா. இதை நம்பிக்கையை வச்சே கதை எப்படி எப்படியோ வட்டமடிக்குது.
ஆனால், உண்மையில் பாரதி கண்ணம்மா இருவருக்குமே குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியம் இருக்கு. இதை தெரிஞ்சுக்காம ரெண்டு அப்பாவிங்களும் முழிக்கறாங்க. பாரதி வெண்பாகிட்டே மாட்டிகிட்டு முழிக்கறான், கண்ணம்மா மாமியார்கிட்டே மாட்டிகிட்டு முழிக்கிறாள்.

கதை வெண்பாதான்
கதை வெண்பாவால்தான் உருவான மாதிரி இருக்கு. அவ பொய் சொல்லலேன்னா இந்த கதையை இவ்வளவு ஜவ்வு மாதிரி இழுக்கவும் முடியாது. இழுக்க ஒரு பாயிண்டும் கூட கிடையாது. முதலில் கருப்பு என்கிற நிறத்தை வச்சு கதையை ஓட்டிடலாம்னு களம் இறங்கி அதுவும் தொய்வடைந்து விட, வெண்பாவின் சதி மட்டும்தான் இப்போதைக்கு அடுத்தடுத்த எபிசோடுகளாக ஒளிபரப்பாகிட்டு வருது.

குழந்தை பிறக்காது
கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்காது என்று வெண்பா வலிய கண்ணம்மாவை அழைத்து டெஸ்ட் எடுக்கிறேன் பேர்வழின்னு பொய் சான்றிதழ் கொடுத்ததை மாமியார் பார்த்துடறாங்க. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகாத கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்காது. இனி அவள் இந்த வீட்டில் இருக்கக் கூடாதுன்னு வசை பாடறாங்க. கண்ணம்மாவை திட்டித் தீர்க்கறாங்க. ஆனால், இவள் கூடவே கல்யாணம் ஆன அஞ்சலியிடம் உனக்கு குழந்தை ஏன் உண்டாகலைன்னு குழந்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்றாங்க.

பிள்ளையைத் தத்து எடுக்க
பிள்ளையைத் தத்து எடுக்க கண்ணம்மாவும், பாரதியும் போனால், அங்கும் வெண்பா சதி நல்லா வேலை செயுது. சவுந்தர்யா அம்மாகிட்டே சொல்லி, அவங்க அந்த குழந்தையை வேறு ஒருத்தர்கிட்டே தத்து குடுக்க ஏற்பாடு செய்துடறாங்க. இவ்வளவும் வெண்பா ஏன் செய்யறான்னா, பாரதி மேல இவளுக்கு காதல். ஆனால், பாரதிக்கு இவள் மேல படிக்கும் போதில் இருந்தே காதல் இல்லை நட்பு மட்டும்தான்.

பாரதிக்கு மணிமேகலை
பாரதிக்கு மணிமேகலையை ரெண்டாம் தாரமாக கட்டி வைக்க ஆசைப்பட்டு அதை வெண்பாகிட்டேயும் சொல்றாங்க சவுந்தர்யா அம்மா. இதை ஒரு சாக்கா எடுத்துக்கிட்டு மணிமேகலையை ஆஸ்பத்திரிக்கு வர சொல்றா வெண்பா. பார்க்க வந்த மணிமேகலைகிட்டே சின்னதா ஒரு டெஸ்ட்டு எடுக்கலாம் வாங்கன்னு வெண்பா கூப்பிடறா. என்ன டெஸ்ட்டுன்னு கேட்க, உங்களுக்கு கருப்பை ஸ்ட்ராங்கா இருக்கா... ஒரு குழந்தையை பெற்றுத் தரும் அளவுக்கு நீங்க ஆரோக்கியமா இருக்கீங்களான்னு சின்ன டெஸ்ட் என்று வெண்பா சொல்ல பொளேரென்று மணிமேகலை வெண்பாவின் கன்னத்தில் அடி விடுகிறார்.

யார் கொடுத்த உரிமை?
நேரே சவுந்தர்யா அம்மா வீட்டுக்கு வந்து எனக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதான்னு டெஸ்ட் பண்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? பணம் இருந்தா எந்த கேவலமான காரியத்தையும் செய்வீங்களா? முதல் பொண்டாட்டிக்கு குழந்தை பிறக்கலேன்னு என்னை கல்யாணம் பண்ணி வைக்கறீங்க. எனக்கும் குழந்தை பிறக்கலேன்னா இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து வப்பீங்களா? உங்க பிள்ளைக்கிட்டே குறை இருக்கான்னு டெஸ்ட் பண்ண மாட்டீங்களா என்று பட்டு பட்டுன்னு பேசறார் மணிமேகலை. இன்னும் இவருக்கான காட்சிகள் இருக்கு. இன்றைக்கு பாருங்க.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications