விஜய் டிவிக்கு டாடா போட்ட பிரியங்கா..? இனி நிரந்தர தொகுப்பாளினி இவர்தானா? வெளியான வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக சீரியல் நடிகை லட்சுமி பிரியா கலந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே பிரியங்கா கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுபோலத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்தார். ஆனால் அடுத்த வாரமே அவர் வந்துவிட்டார். இப்போது மீண்டும் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி இருக்கிறார்.
விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்காவிற்கு அறிமுகமே தேவையில்லை. சின்னத்திரையை பாலோ செய்யும் பலருக்கும் பிரியங்காவை தெரிந்திருக்கும். அதுவும் விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சி இருந்தாலும் அதில் நானும் இருக்கிறேன் என்று எல்லாவற்றிலும் தலையை காண்பித்துக் கொண்டிருக்கும் பிரியங்காவிற்கு சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் முடிந்தது.

சர்ச்சைகளுக்கு நோ கமெண்ட்
திருமணத்திற்கு பிறகு சோசியல் மீடியா பக்கம் எல்லாம் பிரியங்காவின் செய்திகள் தான் வலம் வருகிறது. பிரியங்கா அவருடைய கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பிரியங்காவை பற்றி எவ்வளவோ சர்ச்சைகள் பரவினாலும் எதற்கும் அவர் பதில் கொடுக்காமலேயே கடந்து போய்க் கொண்டிருக்கிறார். இது அவருடைய ரசிகர்களை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் பிரியங்கா இரண்டாவது திருமணம் சமூக வலைதளத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அது பற்றியும் கூட பிரியங்கா எந்த இடத்திலும் இன்னும் வாய் திறக்கவில்லை.
பிரியங்காவின் திடீர் திருமணம்
பிரியங்காவிற்கு விஜய் டிவி பிரபலம் பிரவீன் என்பவர் தான் ஏற்கனவே திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு சில வருடங்களிலே கருத்து வேறுபாடால் பிரியங்கா அவரை பிரிந்து விட்டார். ஆனாலும் பிரியங்கா முதல் திருமணம் செய்த பிரவீன் இன்னும் விஜய் டிவியில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். அதேபோல பிரியங்காவும் விஜய் டிவியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் சில வருடங்களாக காதலித்து வந்த வசி என்பவரை பிரியங்கா கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
புது தொகுப்பாளினி
திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் பிரியங்கா தொடர மாட்டார் என்று சர்ச்சைகள் பரவி வந்தது. அதேபோல முதல் வாரத்திலேயே பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வரவில்லை இதனால் பிரியங்கா விஜய் டிவிக்கு வரவே மாட்டார் என்று கூறி வந்தனர். ஆனால் அடுத்த வாரமே அவர் மீண்டும் வந்து விட்டார். இப்போது மீண்டும் பிரியங்கா காணாமல் போய் இருக்கிறார். அவருக்கு பதிலாக சீரியல் லட்சுமி பிரியா தான் மீண்டும் இந்த வாரமும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்திருக்கிறார். அது குறித்த ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது.
டிக்கெட் டு ஃபினாலே ரவுண்டு
அதே நேரத்தில் பிரியங்கா தன்னுடைய கணவரோடு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியா பக்கங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் செமி பைனலுக்கு நேரடியாக செல்லும் போட்டியாளர்களுக்கு டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பிரியங்கா இப்போது நிகழ்ச்சியில் இருந்து காணாமல் போயிருக்கிறார். இதனால் இவர் மீண்டும் வருவாரா? அல்லது அவர் இந்த நிகழ்ச்சியில் தொடர மாட்டாரா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications