சிம்ரனின் இடுப்பு ரகசியம் இதுதானா? வெளிப்படையாக அவரே சொன்னது.. ஆனால் இதை தினமும் செய்ய முடியுமா?
சென்னை: நடிகை சிம்ரன் பல வருடங்களாக தன்னுடைய இடுப்பை ஒரே அளவில் மெயின்டெயின் பண்ணி வரும் டிப்ஸ் பற்றி சமீபத்தில் பேசி இருக்கிறார். இப்ப வரைக்கும் நடிகை சிம்ரனுக்கு அவருடைய டான்ஸில் இடுப்பு மூவ்மெண்ட் ஸ்பெஷல் அடையாளமாக இருந்து வருகிறது. அவருடைய ஸ்பெஷலான மூவ்மென்ட் காரணம் பற்றி அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் 90s காலகட்டத்தில் கனவு கன்னியாக வலம் வந்தவர்களில் நடிகை சிம்ரனும் ஒருவர். இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் தான் பிறந்திருக்கிறார். பிறகு ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணிபுரிந்து அதற்குப் பிறகு மாடலிங், சின்னத்திரை என்று தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் சிம்ரனுக்கே தான் பெரிய அளவில் உலக சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருவோம் என்று தெரிந்திருக்காது.

1995ஆம் ஆண்டு முதன் முதலில் "சனம் ஹார்ஜாய்" என்ற ஹிந்தி படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் கதாநாயகியாக சிம்ரன் அறிமுகமாகி இருக்கிறார். ஆனால் அவருடைய முதல் படம் அவருக்கு தோல்வி படமாக தான் அமைந்திருக்கிறது. ஒரு சிலருக்கு மட்டும்தான் முதல் படம் வெற்றியடைந்து விடுகிறது. ஆனால் அப்படி வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்து சினிமாவில் ஜெயித்தார்களா என்று தேடிப்பார்த்தால் அதில் பலர் காணாமல் தான் போய் விடுகிறார்கள்.
ஆனால் முதல் படம் தோல்வியாக அமைந்த சிம்ரன் அதற்குப் பிறகு மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று பல திரைப்படங்களில் படிப்படியாக நடிக்க தொடங்கி தமிழில் முதல்முறையாக ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருக்கிறார். அதற்கு பிறகு விஜய் உடன் பல படங்களில் நடித்து பெயர் வாங்கிய சிம்ரனுக்கு முதல் படம் தமிழில் பிரபலத்தை கொடுத்து விட்டது.
அதற்கு பிறகு சிம்ரனை தமிழ் ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் 2000 ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய முதல் நடிகையாகவும் சிம்ரன் தான் இருந்திருக்கிறார். அதோடு சிம்ரன் நடித்த திரைப்படங்கள் இப்ப வரைக்கும் பலருடைய ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும். அதிலும் துள்ளாத மனமும் துள்ளும், கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற படங்கள் சிம்ரனுக்கு பல விருதுகளையும் வாங்கி கொடுத்தது.
இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ்.. வந்ததே தெரியல பாருங்களேன்.. ஆனால் கமல் வெளியிட்ட ப்ரோமோ தான் ஹைலைட்
இப்ப வரைக்கும் கதாநாயகியாகவும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் சிம்ரன் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படத்திலும் வில்லியாக நடித்து மிரட்டி இருக்கிறார். அதோடு சிம்ரனுக்கு ஸ்பெஷல் அவருடைய டான்ஸ் தான். அதிலும் அவருடைய இடுப்பை வளைத்து ஆடும் டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம். இவருடைய டான்ஸுக்காகவே இவருடைய பல பாடல்கள் ஹிட் ஆனது என்று சொல்லலாம்.
இந்த நிலையில் சமீபத்தில் சிம்ரன் பேட்டி ஒன்றில் கலந்து கொள்ளும்போது அவரிடம் நீங்கள் உங்களுடைய இடுப்பை இப்படி கட்டுக்கோப்பாக வைத்திருப்பது எப்படி என்று கேட்கப்பட்ட போது அதற்கு சிம்ரன் அதற்கான ரகசியத்தை கூறி இருக்கிறார். அதாவது தினமும் இடுப்பை 150 முறை டிவிஸ்ட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுவும் 150 முறை செய்வதை மூன்று செட்டாக செய்ய வேண்டும். இப்படி செய்தால் இடுப்பு என் இடுப்பு போல மாறிவிடும் கலகலப்பாக அந்த பேட்டியில் சிம்ரன் பேசியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications