அடுத்தடுத்து தவறி போன வாய்ப்பு.. கடைசியில் நிலைமை இப்படி ஆனது..! அங்காடி தெரு நடிகரின் பரிதாப நிலை
சென்னை: அங்காடி தெரு திரைப்படத்திலபிரபலமான நடிகர் மகேஷ் தன்னுடைய தற்போதைய நிலை குறித்து வருத்தமாக பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது.
பல வாய்ப்புகள் தான் தவறவிட்ட நிலையில் தற்போது தன்னுடைய நிலைமை மோசமாக இருக்கிறது என்று அதில் தெரிவித்திருக்கிறார்.
சரியாக திரைப்படங்களை தேர்ந்தெடுக்க தெரியாததால் தான் தோற்று போய் நிற்பதாகவும் கூறி இருக்கிறார்.

சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்கு மட்டும் தான் முதல் அறிமுகமே சூப்பர் டூப்பராக வெற்றி அடைந்து விடும். ஆனால் அப்படி முதல் திரைப்படங்களில் வெற்றி பெற்று அதைத் தொடர்ந்து பிறகு ஜொலிக்காமல் காணாமல் போனவர்களும் உண்டு. அந்த மாதிரி தான் அங்காடி தெரு திரைப்பட நடிகர் மகேஷின் வாழ்க்கையில் நடைபெற்றிருக்கிறது.
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போல அதுவும் திருநெல்வேலி சுற்று வட்டார மக்களின் எதார்த்தத்தை தன்னுடைய நடிப்பால் கண்முன்னே கொண்டு வந்து அனைவருடைய அனுதாபத்தையும் முதல் திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பெற்றுவிட்டார். இவர் நடித்திருக்கிறாரா? இல்லது வாழ்ந்து இருக்கிறாரா? என்று சொல்லும்படி முதல் திரைப்படம் இவருக்கு பெரும் அளவில் ஹிட் கொடுத்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் மகேஷுக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்திருந்தார். அவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு என பிசியான முன்னணி நடிகையாக மாறிவிட்டார். ஆனால் கதாநாயகன் மகேஷ் என்ன ஆனார் என்பது குறித்து யாருக்கும் தகவல் தெரியவில்லை.

இந்த நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதில் தேடி வந்த பல நல்ல கதைகளை நான் மிஸ் பண்ணி விட்டேன். அதுவும் நடிகர் அதர்வா நடித்த ஈட்டி திரைப்படத்தில் நடிக்க என்னைத்தான் முதலில் கேட்டாங்க, அதுபோல சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேரக்டரும் எனக்கு தான் வந்தது, அதுமட்டுமல்லாமல் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. அதையெல்லாம் நான் தவற விட்டு விட்டேன்.
இது போன்ற நல்ல வெற்றி பெற்ற பல திரைப்படங்களை நான் மிஸ் செய்து விட்டேன். நான் தேர்வு செய்து நடிக்க எந்த படமும் சரியாக வெற்றிப் பெறவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். அதுபோல அங்காடித்தெரு படத்திற்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும் எப்படி கதைகளை எடுக்க வேண்டும் என்று எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை அதனாலேயே என்னுடைய கேரியர் வீணாகப் போய்விட்டது என்று அந்த வீடியோவில் பீல் பண்ணி இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications