அங்காடித்தெரு கருங்காலியை ஞாபகம் இருக்கிறதா? சன் டிவியில் சீரியலில் வில்லனாக மிரட்ட போகிறார்
சென்னை: திரைப்படங்களில் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வரும் வெங்கடேஷ் முதல்முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்னும் சீரியலில் வில்லனாக அறிமுகம் ஆகிறார்.
அங்காடி தெரு திரைப்படத்தில் வெங்கடேஷ் கருங்காலி எனும் கேரக்டரில் நடித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் பல ஹிட் திரைப்படங்களிலும் இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

தற்போது சூழ்நிலையில் வெள்ளி திரைக்கு தகுந்த மாதிரி சின்ன திரையும் வளர்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளித்திரையில் கொடிக்கட்டி பறந்தவர்களாக இருந்தாலும் சரி அங்கே மார்க்கெட் சரிய தொடங்கியவர்களாக இருந்தாலும் சரி உடனே சின்ன திரையில் காலடி எடுத்து வைத்து விடுகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது நடிகராகவும், இயக்குனராகவும் இருக்கும் வெங்கடேஷ் முடிவு எடுத்திருக்கிறார்.
நடிகர் வெங்கடேஸ் நடிப்பில் வெளியான அங்காடித்தெரு திரைப்படத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. அந்த திரைப்படத்தில் ஒரு கொடூரமான வில்ல கேரக்டரில் நடிகர் வெங்கடேஷ் நடித்திருப்பார். அங்காடித்தெரு திரைப்படத்தில் கடையில் தன்னைப் போல வேலை செய்பவர்களையும் மனசாட்சியே இல்லாமல் வேலையில் போட்டு பிழிந்து எடுக்கும் நபராக இவர் பலபேருடைய திட்டல்களை வாங்கி இருந்தார்.
அது மட்டுமல்லாமல் இவர் பல திரைப்படங்களை டைரக்ட் செய்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக நடிகர் சிம்பு நடித்த குத்து திரைப்படத்தை இவர்தான் டைரக்டர் செய்திருந்தாராம். அது போல மாஞ்சா வேலு, மஜ்னு போன்ற பல திரைப்படங்களிலும் இவர் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

நடிகை ஷபானா செம்பருத்தி சீரியலுக்கு பிறகு சன் டிவியில் நடிக்கும் சீரியல் தான் மிஸ்டர் மனைவி. இந்த சீரியல் கதை ஆரம்பத்தில் ஜாலியாக ஆரம்பித்து இப்போது பெரிய அளவில் எந்த ஒரு மூமெண்டும் இல்லாமல் அப்படியே போய்க் கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் பீல் பண்ணிக் கொண்டிருந்த நிலையில் தற்போது விறுவிறுப்பு ஏற்படுத்துவதற்காக வில்லன் கேரக்டரில் நடிகர் வெங்கடேஷ் அறிமுகமாகி இருக்கிறார்.
இனி போக போக தான் தெரியும் இந்த சீரியலின் டிஆர்பி எகிற போகிறதா அல்லது கீழே போகப் போகிறதா என்று, ஆனாலும் முதல்முறையாக சின்ன திரையில் அடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் வெங்கடேஷுக்கு நம்முடைய வாழ்த்துக்களும் உண்டு.












Click it and Unblock the Notifications