அப்புறம் என்ன.. இதைதானே எதிர்பார்த்தீங்க? இந்த வாரத்துக்கு இது போதாதா உங்களுக்கு?!?
சண்டைக்காட்சிகள் நிறைந்த ப்ரோமா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: இப்போது என்ன ஆகிவிட்டது பிக்பாஸ்? உங்கள் வீட்டுக்குள் நினைச்ச மாதிரியே சண்டை வந்துவிட்டது.
அப்புறம் என்ன? இதைதானே எதிர்பார்த்தீங்க? இந்த வாரத்துக்கு இது போதாதா உங்களுக்கு? விதவித ப்ரோமாக்களில் அதை போட்டு போட்டு காண்பித்து, டிஆர்பி ரேட்டுடன், மக்களையும் பிரஷரையும் உச்சிக்கு ஏற்றி.... இப்படியே ஒரு 3 நாளுக்கு இழுத்துட்டு போயிட மாட்டீங்க? இதெல்லாம் உங்களுக்கு சொல்லியா தரணும்? எல்லாமே கை வந்த கலைதானே?

கோபத்தில் தெறிக்கும் வார்த்தைகள்
மும்தாஜ்ஜை அவருக்கே மிக மிக பிடித்தமான ஷாரிக் எதிர்த்து பேசி சண்டை போட்டு கொள்கிறார்கள். அதில் "நீங்க கத்தி பேசுறத நிறுத்தணும்" , நீங்க என் டீச்சர் இல்லை, நான் பேசுறது உங்களுக்கு டிஸ்டர்ப் ஆகுதுன்னா காதை மூடிக்கோங்க, எங்க தொடு பார்ப்போம்...." இப்படியெல்லாம் அந்த ப்ரோமோவில் காட்டப்படுகிறது. அதாவது கோபத்தில் வந்த வார்த்தைகளை எல்லாம் தொகுத்து தரப்படுகிறது.

தவறிகூட மறப்பதில்லை
பாவம், அந்த ப்ரோமோ பண்ணின எடிட்டர் நிலைமை. வீட்டிற்குள் திட்டியவர்களையும், திட்டும் வார்த்தைகளையும், அதற்கு எதிர்தரப்பினரின் முகபாவங்களையும், பதிலடிகளையும், ஏன் கோபமாக முறைத்ததைகூட எங்கேயும் தவறிக்கூட விட்டுவிடாமல், தன்னையும் அறிந்து மறந்துவிடாமல், கவனமாக மொத்தமாக ப்ரோமோவில் தொகுத்து தர தினமும் மெனக்கெட்டு வருகிறார்.

நாடி பிடித்து பார்க்கிறீர்களா?
சரி இவ்வளவையும் தொகுத்து காட்டி நிகழ்ச்சிக்கு ப்ரோமோ போடுவது ஏன்? அப்போவாவது பிக்பாஸ் பார்ட்-1 பிக்பாஸ் மாதிரி களை கட்டுகிறதா என நாடிப் பிடித்து பார்க்கவா? மக்களின் மனநிலையை ஆழம் பார்க்கவா? கூடவே குடும்பம் நடத்திவரும் எத்தனையோ திருமணமான கணவன், மனைவி இடையே ஒரே வீட்டில் நாள்தோறும் சண்டை வரும்போது, ஒட்டு உறவில்லாத, ரத்த பந்தம் இல்லாத, வெவ்வேறு மொழி, கலாச்சாரத்தில் பின்னப்பட்ட கும்பல் ஒரே வீட்டுக்குள் இருந்தால் சண்டை வராதா என்ன? இதுக்கு ஒரு விளம்பரமா?

பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?
டாஸ்க் என்ற பெயரில் நடத்தப்படுவது எல்லாமே சண்டையும், கருத்துமோதலும், பரபரப்பும் வர செய்யப்படும் உங்கள் யுக்திதானே? இதுக்கூடவா தெரிந்து கொள்ளாமல் நாங்கள் நிகழ்ச்சியை 2 வருடமாக பார்த்து வருகிறோம். நன்றாக இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளுக்கு இதுபோன்ற ப்ரோமோக்கள் தேவையில்லையே. இன்னும் எளிமையாக சொன்னால், "பூக்கடைக்கு விளம்பரங்கள் தேவை இல்லை" பிக்பாஸ். ஈரை பேனாக்கி - பேனை பெருமாளாக்கும் பழக்கத்தை எப்போதுதான் மிஸ்டர் பிஸ்பாஸ் கைவிடுவாரோ தெரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications