வெளியே சொல்ல முடியாத அளவிற்கு திட்டிட்டாங்க.. ஏர்போர்ட்டில் கூட இப்படி! சிறகடிக்க ஆசை விஜயா பேட்டி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டரில் நடிகை அனிலா ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். இவர் தான் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதால் தன்னை பலர் அசிங்கமான வார்த்தைகளில் திட்டுகிறார்கள் என்று பேட்டி ஒன்றில் வருத்தமாக பேசி இருக்கிறார்.
சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அதில் நடிப்பவர்களின் கேரக்டரை அப்படியே நம்பி விடுவது மனிதர்களின் இயல்பாக இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் போது அதில் வில்லனாக நடித்த நடிகரை அந்த திரைப்படத்தை பார்த்த பெண் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோல பல சீரியல்களிலும் வில்லியாக வில்லனாக நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களை வெளியே பார்க்கும் இடங்களில் பல திட்டி வருவதாக அந்த நடிகர்கள் கூறி இருக்கிறார்கள். அந்த வரிசையில் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவாக நடித்துக் கொண்டிருக்கும் அனிலா ஸ்ரீகுமார் தான் பெற்ற வேதனைகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் நான் இந்த சீரியலில் நெகட்டிவாக நடிக்கிறேன், மீனாவை கொடுமைப்படுத்துகிறேன் என்று என்னை பார்க்கும் இடங்களில் எல்லாம் பலர் திட்டுகிறார்கள். இன்ஸ்டாகிராமாக இருந்தாலும் சரி youtube ஆக இருந்தாலும் சரி எந்த வீடியோ நான் வெளியிட்டாலும் கூட அதில் அதிகமான கமெண்ட்கள் திட்டி வருகிறது.

அதிலும் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு சில திட்டுகிறார்கள். நான் பல கமெண்ட்களை டெலிட் செய்து விடுவேன். ஒரு கமாண்ட் எனக்கு புரியவில்லை என்று இன்னொருவரிடம் அது என்ன அர்த்தம் என்று கேட்டேன் அதற்கு அவர் ரொம்ப மோசமாக பேசியிருக்கிறார்கள் என்று சொன்னார். அதை எல்லாம் நான் டெலிட் செய்து விட்டேன்.
ஏர்போர்ட்டில் கூட நான் போகும்போது நீங்க சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கிறவங்களே என்று தான் கேட்கிறார்கள். நான் மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்திருக்கிறேன். ஆனாலும் அதையெல்லாம் விட எனக்கு தமிழில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாகத்தான் பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. எங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் மலையாள பெண்கள் கூட சிறகடிக்க ஆசை சீரியல் பார்ப்பதாக தான் என்னிடம் சொல்கிறார்கள்.

சிலர் என்னுடைய கேரக்டரை நான் சரியாக செய்கிறேன் என்று பாராட்டுகிறார்கள். ஆனால் அதிகமானோர் என்னை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது நடிப்பு என்பது அவர்களுக்கு தெரியவில்லை. நான் நடிப்பதை அவர்கள் கேரக்டராக பார்க்கிறார்கள் எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்று அனிலா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
இன்றைய எபிசோடில் கூட விஜயா மீனா வீட்டிற்கு சென்று சத்யாவை அடித்து அவமானப்படுத்தி இருக்கிறார். சத்யாவை மட்டுமல்லாமல் மீனாவின் குடும்பத்தையும் அவமானப்படுத்துகிறார். இனி மீனா என் வீட்டுக்கே வரக்கூடாது என்று வேற சொல்லி இருக்கிறார். இதற்கு கூட இன்று வெளியான ப்ரோமோக்களில் விஜயாவைத்தான் எல்லோரும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications