லீக்கான அனிருத் - காவியா மாறன் கல்யாண வீடியோ.. உண்மை தெரியாமல் ஏமாந்த ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிருத் காவ்யா மாறன் கல்யாணம் குறித்த எதிர்பார்ப்பு ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்க, இன்னொரு பக்கம் அவர்களுடைய திருமண வீடியோவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை திருமண நிகழ்வின் உண்மையான புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியாகாத நிலையில், சிலர் அனிருத் காவியா இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்வது போன்ற ஒரு வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். அதை பார்த்ததும் ரசிகர்கள் இவ்வளவு பிரம்மாண்டமாகவா அனிருத் கல்யாணம் நடக்கிறது என்று சொல்லி அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்து வருகிறார்கள்.

Anirudh Kavya Maran AI Video Greece Wedding

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்

அனிருத் காவியா மாறன் கல்யாணம் பற்றிய செய்திகள் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. கிரீஸ் நாட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் வெளிநாடு சென்றிருக்கிறார்கள். திருமணம் இன்று கிரீஸில் நடப்பதாகவும், நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

Anirudh Kavya Maran AI Video Greece Wedding

ஆனால் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திருமணத்தின் உண்மையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகவில்லை. அனிருத் மற்றும் காவியா இருவருமே தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் வெளியே பகிர விரும்பாதவர்கள் என்பதால் திருமண நிகழ்வையும் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கிறார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் ஒரு வீடியோ நேற்றிலிருந்து வைரல் ஆகி வருகிறது. அதில் கிரீஸில் பிரம்மாண்டம் மற்றும் கடற்கரை ஓரத்தில் ஒரு அழகான இடத்தில் காவியா மாறன் மற்றும் அனிருத் இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் காட்சிகளும் இருக்கிறது.

Anirudh Kavya Maran AI Video Greece Wedding

ஏஐ வீடியோவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

அதை பார்த்த அனைவருமே இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் உண்மையில் பார்த்தால் அது ஏஐ வீடியோ. இந்த வீடியோவை உருவாக்கிய நெட்டிசன்கள் நிஜத்தில் கிரீஸில் எங்கேஜ்மென்ட் நடப்பது போலவே அதன் இயற்கை சூழல் வைத்து இந்த வீடியோவை எடிட் செய்து இருக்கிறார்கள். அதை உண்மை என்று நம்பி பல ரசிகர்கள் அனிருத்துக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

Anirudh Kavya Maran AI Video Greece Wedding

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பொதுவாகவே பிரபலங்களின் திருமணம் என்றால் அவர்களுடைய உடை, திருமண மேடை, மணமக்கள் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள், அவர்களுடைய திருமணத்தில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அனிருத் காவியா திருமணத்தில் இதுவரை அப்படியான காட்சிகள் வெளியாகததால் இணையத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வீடியோவும் உண்மையா? என்று தேடி பார்க்க வேண்டிய சூழல் உருவாக்கி உள்ளது.

Anirudh Kavya Maran AI Video Greece Wedding
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+