அனிருத் செய்யும் இந்த விஷயம் சுத்தமாக பிடிக்காது! ஆதங்கப்பட்ட அப்பா ரவி ராகவேந்திரா
சென்னை: அனிருத் காவியா மாறன் கல்யாண போட்டோக்கள் தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. யார் யார் கல்யாணத்தில் கலந்து கொண்டார்கள்? ரஜினிகாந்த் என்ன செய்தார்? காவியா அணிந்திருந்த உடை என்ன? திருமணம் எந்த முறையில் நடந்தது? என்று ஒவ்வொரு விஷயத்தையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர். இந்த பரபரப்புக்கு நடுவே அனிருத்தை பற்றி அவருடைய அப்பா ரவி ராகவன் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிருத் அப்பா பேட்டி
அந்த பேட்டியில் அவர் சொன்ன விஷயம் பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதாவது அனிருத் இரவு நேரத்தில் தான் அதிகமாக வேலை செய்வார். உலகமே தூக்கிக் கொண்டிருக்கும் போது அவர் முழிச்சுகிட்டு வேலை செஞ்சுட்டு இருப்பாரு. உடம்பை கெடுத்துட்டு எதுக்கு சம்பாதிக்கணும்? அதை பார்க்க எனக்கு ரொம்ப எரிச்சலா இருக்கும். ஆனா அதுதான அவன் ஸ்டைல்னு ஒரு கட்டத்தில் புரிஞ்சுகிட்டேன். அவருக்கு அட்வைஸ் பண்ணனும்னு எனக்கு என்ன அவசியமா? ஆனால் கஷ்டப்பட்டு உழைச்சு படத்துக்கு வெற்றிகரமான இசையை தரும் போது நான் எப்படி கேள்வி கேட்க முடியும்? என்று ரவி ராகவேந்திரா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
அனிருத் தந்தையின் கவலை
அவர் பேசியதை கேட்கும் போது நமக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதுவும் ஒரு அப்பாவாக மகன் இப்படி தலைகீழான நேரத்தில் வேலை செய்வதை பார்த்தால் கவலை வரதான செய்யும். ஆனால் இதே போல ஐடி கம்பெனியிலிருந்து பல இடங்களில் பலர் இரவு கண்விழித்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இதெல்லாம் ஒரு பிரச்சனையா? என்று சிலர் கமெண்ட் கொண்டு கொடுக்கின்றனர். இன்னும் ஒரு சிலரோ அனிருத் அப்படி கஷ்டப்பட்டு மியூசிக் போடுவதால் தான் எங்களுடைய சோகங்கள் எல்லாம் மறந்து போகும் அளவிற்கு அவருடைய பாடல் துள்ளலாக இருக்கிறது என்று கமெண்ட் கொடுக்கின்றனர்.
இரவு அமைதி கொடுக்கும் இசை
இன்னும் ஒரு சிலர், இரவு நேரத்தில் இவரால் மட்டும் எப்படி இப்படி ஒரு அதிரடியான மியூசிக் எல்லாம் கொடுக்க முடிகிறது? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இப்படியாக அனிருத் அப்பா பேசிய ஒரு பேட்டியை வைத்து இப்போ கமெண்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது. அதுபோல அனிருத் மட்டுமல்ல ஏஆர் ரகுமானும் கூட இப்படித்தான் இரவு நேரத்தில் வேலை செய்வார் என்று அந்த பேட்டியில் ரவி ராகவன் சொல்லி இருக்கிறார். அதை பார்க்கும்போதே இரவு நேரத்தில் வேலை செய்வது அனிருத்துக்கு மட்டும் இருக்கும் பழக்கம் என்று சொல்ல முடியாது. சில இசையமைப்பாளர்களுக்கு அந்த நேரத்தில் அமைதி அவர்களுடைய சிந்தனைக்கும் இசைக்கும் உதவியாக இருக்கிறது என்பது தெரிகிறது.
அனிருத்தின் ஆரம்ப காலம்
அனிருத் என்ற பெயர் இன்றைக்கு தமிழ் சினிமாவை தாண்டியும் பிரபலமாக இருக்கிறது. தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் அவர் இசை அமைத்த ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. அந்த ஒரு பாடலுக்குப் பிறகு அனிருத்தின் இசை பயணம் வேகம் எடுக்க தொடங்கியது. அதற்கு பிறகு வேலையில்லா பட்டதாரி, கத்தி, மாஸ்டர், விக்ரம், ஜெயிலர், லியோ என பல படங்களில் தனது இசையால் தனி அடையாளத்தை உருவாக்கினார். சமீபத்தில் கூட ஜெயிலர் 2 படத்திலும் மாஸ் காட்டி இருக்கிறார். இப்படி இவருடைய வேலை ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தாலும் சமீபத்தில் அவருக்கு கல்யாணம் முடிந்து இருப்பதால் பழைய விஷயங்கள் எல்லாம் மீண்டும் பேசப்படுகிறது.



Click it and Unblock the Notifications
