கல்யாணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு வந்த அனிருத்.. விமான நிலையத்தில் நடந்த சம்பவம்
சென்னை: அனிருத் காவ்யா மாறன் தம்பதிக்கு கடந்த நவம்பர் 11ம் தேதி கிரீஸில் கல்யாணம் முடிந்தது. கல்யாணத்திற்கு பிறகு சென்னைக்கு அனிருத் மற்றும் காவியா மாறன் இருவரும் திரும்பி வந்திருக்கின்றனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கின்றனர். கருப்பு உடையில் அனிருத் மற்றும் காவியா இருவரும் விமான நிலையத்தில் நடந்து வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

காதல் திருமணம்
கடந்த சில வருடங்களாகவே அனிருத்-காவியா மாறன் காதலிக்கிறார்கள் என்ற செய்தி இணையத்தில் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது பற்றி இரண்டு தரப்பினருமே அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. போன வருடத்தில் கூட அனிருத் நான் சிங்கிள்ஸ் பா என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார். கல்யாணம் எல்லாம் வேண்டாம் என்பதுபோல அவர் போஸ்ட் போட்டதும் அப்போ இந்த தகவல்கள் எல்லாம் பொய்யா கோபால் என்று பலரும் சொல்லி வந்தனர்.
ஆனால் ஒரு வருடத்திற்குள் அதே சிங்கிள்ஸ் நாளில் அனிருத் கல்யாணம் செய்து இருக்கிறார். இது கூட இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதுவும் தமிழ்நாட்டில் அல்லாமல் கிரீஸில் நெருங்கிய உறவினர்களுடன் திருமணத்தை செய்திருக்கிறார்கள். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் சில நாட்களாகவே ட்ரெண்டாகி கொண்டு வந்தது. அதுவும் நவம்பர் 11ஆம் தேதி இவர்களுக்கு கல்யாணம் என்றதும் காலையிலிருந்து புகைப்படத்தை பலரும் எதிர்பார்த்தனர்.
சென்னைக்கு வந்த அனிருத் தம்பதி
திருமணம் என்ன முறையில் நடைபெறும்? என்ன உடை அணிவார்கள்? என்று பலரும் தேடி வந்த நிலையில், கடைசியில் மாலை பொழுதில் தான் இவர்களுடைய திருமண புகைப்படமே இணையத்தில் வெளியானது. அதற்கு பிறகு 3 நாட்கள் கழித்து இப்போது அனிருத் தம்பதி சென்னைக்கு திரும்பி இருக்கின்றனர். திருமணத்தின் போது இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்ட செயின் உடன் கருப்பு உடையில் எளிமையாக விமான நிலையத்திற்கு வந்ததும் இவர்களை பார்த்து அங்கிருந்து ரசிகர்கள் அனைவரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.
குவியும் வாழ்த்து
அப்போது அனிருத் மட்டும் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, கைகாட்டி விட்டு நடந்தார். காவியாமாறன் எதற்கும் ரியாக் பண்ணாமல் சிரித்தபடியே தலையை குனிந்த படி வேகமாக அங்கிருந்து நடந்து வந்தார். இவர்களுடைய ரிசப்ஷன் வரும் நவம்பர் 20ஆம் தேதி நடப்பதாக கூறப்படுகிறது. புது மாப்பிள்ளை பொண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு இருந்தாலும் ஜோராக இவர்கள் சென்னைக்கு திரும்பிய வீடியோ கூட இப்ப வைரல் ஆகுது.


Click it and Unblock the Notifications
