ஹய்யோ கூசுதே.. கையை தூக்கிய அனிதா.. ஓடி வந்து கலாய்த்த ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அடிக்கிற வெயிலில் மொட்டை மாடியில் மத்தியான நேரத்துல இப்படியா வந்து நிப்பீங்க என்று அனிதா சம்பத் போட்டோவைப் பார்த்து சிடுசிடுக்கிறார்கள் ரசிகர்கள்.

இவருக்கு சூரியனைப் பார்த்து கண்ணு கூசுதா இல்லை சல்யூட் அடிக்கிறாரா என்றும் சிலர் கவுண்ட மணி ரேஞ்சுக்கு கலாய்க்கவும் செய்கிறார்கள்.

மொட்டை மாடி போட்டோனு சொன்னதும் ஓடோடி வந்தவங்களை இப்படி ஏமாற்றி விட்டீர்களேனு செல்லமாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தியவர்களும் உள்ளனர்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு தான்

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு தான்

ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட அனிதாவை போட்டோவை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று சொல்லும் அளவிற்கு அவருடைய போட்டோஸ்கள் கண்ணு கூசுது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்ததெல்லாம் நமக்கு செட்டாகாது என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் அனிதா சம்பத்.

பிக்பாஸில் பிரபலம்

பிக்பாஸில் பிரபலம்

ஒரு செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து கொண்டிருக்கும் அனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார். இவருடைய துணிச்சலான கேரக்டரை பிடித்துப்போன ரசிகர்கள் இவருக்கு பாலோவர்ஸாக மாறிவிட்டனர். அதுவும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகத்தான் இருந்துவருகிறது.

அதுதான் உண்மையா

அதுதான் உண்மையா

கஷ்டமான சூழ்நிலையில் இருந்து இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்கும் இவர் பலருடைய ரோல்மாடல் ஆகவும் இருந்து வருகிறார். அதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் தன்னுடைய கேரக்டரை நன்றாகவே வெளிப்படுத்தி இருந்ததும் ஒரு காரணம் தான். இவருடைய காதலின் ஆழத்தை பார்த்து இந்த மாதிரி ஒரு பொண்ணு நமக்கும் கிடைக்காதா என பல ஆண்கள் காத்திருக்கின்றனர். தன்னுடைய காதல் கணவரின் மீது இவர் வைத்திருக்கும் அன்பை பார்த்து சிலர் பொறாமைப்பட்டும் வருகின்றனர்.

எதுக்கும் இல்ல

எதுக்கும் இல்ல

அனிதா செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே இவருடைய தமிழ் உச்சரிப்பையும் உடை அலங்காரத்தையும் பிடித்துப்போன ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரைப் பின் தொடர ஆரம்பித்துவிட்டனர். ஒரு சில நெகட்டிவ் ஆட்கள் இவருக்கு நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு வந்தாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகி வருகின்றனர். அதனால்தான் தற்போது இவர் தொடங்கியிருக்கும் யூடியூப் சேனலுக்கு நாளுக்குநாள் பாலோவர்ஸ்கள் அதிகரித்து வருகின்றனர்.

தொடரும் பாசம்

தொடரும் பாசம்

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில்லுன்னு காதல் சீரியலில் தற்போது இவர் நடித்திருக்கும் எபிசோடுகளை பார்ப்பதற்காகவே இவருடைய ரசிகர்கள் அந்த சீரியலை பார்த்து வருகிறார்களாம். அந்த அளவிற்கு இவர் மீது பாசத்தை வைத்திருக்கும் ரசிகர்கள் தற்போது இவர் போட்ட போஸ்ட் பார்த்து கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். அதிலும் பலர் எப்போது சினிமாவில் கதாநாயகியாக வர போறீங்க ன்னு தான் கேட்கிறார்கள்.

சுட்டெரிப்பது சூரியனா

சுட்டெரிப்பது சூரியனா

மொட்டைமாடி போட்டோ சூட் என்று சொன்னதும் மனசுல ஆயிரம் கனவோடு ஓபன் செய்து பார்த்த ரசிகர்களுக்கு தற்போது அடிக்கிற வெயிலில் கண் கூசுகிறது என கையை தூக்கி வெயிலைத் தடுத்த அனிதாவின் போட்டோவை பார்த்து கொஞ்சம் ஏமாற்றம்தான். இருந்தாலும் இதுவும் வேற லெவல் தான் என்று மனதை தேற்றி கமெண்ட் போட்டு வருகின்றனர். ரொம்ப நாளைக்கு பிறகு போஸ்ட் போட்ட அனிதாவிடம் இனியாவது அடிக்கடி போட்டோ அப்லோட் போடுங்க என்று ரசிகர்கள் அப்ளிகேஷன் போட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+