2 வரிதான் எழுதினார் அனிதா.. புலவர்கள் வந்து குவிஞ்சுட்டாங்க பாருங்களேன்!
சென்னை: பெரிய பெரிய சினிமா ஸ்டார்களுக்குத்தான் ரசிகர்கள் இருப்பாங்களா என்ன.. சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்துக்கும் நிறையப் பேர் ரசிகர்களாக உள்ளனர். அதிலும் ஜொள்ளு ரசிகர்கள் சற்றே கூடுதலாகத்தான் உள்ளனர்.
அனிதா சம்பத் சாதாரண செய்தி வாசிப்பாளர்தான். ஆனால் அவரது அழகு தமிழும், உச்சரிப்பும், வசீகரத் தோற்றமும், இன்ன பிறவும் சேர்ந்து அவருக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டது.
இதில் அனிதாவே வேறு ஏதாவது டிவீட் போட்டு அவ்வப்போது ரசிகர்களை உசுப்பி விட்டு விடுவார். பிறகென்ன கூட்டமாக வந்து கமெண்ட் போட்டுக் கொண்டிருப்பார்கள் ரசிகர்கள்.
அனிதா சம்பத்தின் டிவீட் பக்கம் எப்போதும் கூட்டம் மொய்த்தபடியே இருக்கும். ஏதாவது பேசி விட்டுச் செல்வதை கோவிலுக்குப் போவதைப் போல வழக்கமாக்கி வைத்துள்ளனர் நமது ரசிகர்கள். இப்போது கூட பாருங்கள். 2 வரியில் ஒரு கவிதை போட்டுள்ளார் அனிதா சம்பத். தனது புகைப்படத்துடன்.
|
அம்சமான அழகு
சும்மா சொல்லக் கூடாதுங்க.. அந்தப் படத்தில் அத்தனை அம்சமாக இருக்கிறார் அனிதா. நம்ம கண்ணே பட்டுடும் போல. அப்படி ஒரு அழகு.. அசர வைக்கும் அழகு.. இருக்காதா பின்னே.. ரசிகர்கள் கூட்டம் வராமல் போய்டுமா என்ன.
|
போதை கொண்டு
இதுதாங்க அந்தக் கவிதை.. மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்; குவளை பூவில் குழைத்த வண்ணம்.. ஆஹா. ஆஹா என்று தாளம் போட வைக்குது பாருங்க. இதனால்தான் பூவில் வண்டு மொய்ப்பது போல வந்து விட்டனர் ரசிகர்களும் பின்னாடியே.
இதைப் பாருங்க. காண்டிராக்டர் ப்ரதீபன் என்பவர் போட்டுள்ள எசப்பாட்டு. ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணமாம்.. இது கூட நல்லாருக்கே.. சூப்பர்.
|
அழகிய முரண்பாடடி
இதோ இன்னொரு கவிதை. இது கொஞ்சம் பெருசாவே இருக்குங்க.
எப்படியாவது என் கவிதையின்
வரிகளுக்குள் உன் அழகை
அடக்கிவிட முயலும் நானும்,
என் வரிகளுக்குள் அடங்காமல்
நித்தம் புதுமையாய்த் தோன்றும்
உன் அழகும்,
ஓர் அழகிய முரண்பாடடி
சகியே...
|
இன்னும் இருக்கு
எல்லோரும் எதைப் பார்த்தால்.. இவர் எதைப் பார்த்திருக்கிறார் பாருங்க.. வலது தோளின் மச்சம் இவரது கண்ணில் பட்டுத் தெறித்துள்ளது. நல்ல ரசிகனய்யா நீர்.
இதெல்லாம் கொஞ்சம் சாம்பிள்தான்.. நிறைய கவிதைகள் குவிஞ்சு கொண்டே இருக்குங்க.. நமக்கு வேற வேலை இருக்கில்லையா.. வாங்க வேற செய்திக்குப் போவோம்.. அனிதா இஞ்சினியரிங் படிச்சவர். என்றாலும் தாய் மொழி தமிழ் மீது பற்று அதிகம். அதனால், செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்கிற கனவுடன் படித்து பாலிமர் டிவியில் செய்தி வாசிப்பாளராக சில வருடங்கள் பணியாற்றினார். இப்போது சன் டிவி,சன் நியூஸ் செய்தி வாசிப்பாளர்...சன் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று கலக்கி வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications