டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே!
சென்னை: செய்தி வாசிப்பாளரும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றவருமான அனிதா சம்பத், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

அனிதா சம்பத்தின் வைரல் பதிவு
அவர் வெளியிட்ட அந்த பதிவில், தன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய சாதனையை அடைந்ததை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நான் என் பி.ஆப்டம் படிப்பை முடித்து, தற்போது அதிகாரப்பூர்வமாக ஒரு கண் டாக்டராக (ஒப்டோமேட்ரிஸ்ட்) ஆனதை பெருமையுடன் அறிவிக்கிறேன். என் படிப்பு காலத்தில் என்னை ஆதரித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி. எல்லாம் ஒரு கனவு போலவே இருக்கிறது.
என் பிஸியான வாழ்க்கையிலும் நான் நினைத்த மாதிரி என் கனவை அடைந்துவிட்டேன். இனி சமூகத்துக்கு சேவை செய்ய மிகவும் மகிழ்ச்சி. அனைவரும் முன்கூட்டியே கூறும் வாழ்த்துகளுக்கும் நன்றி." என்ற வகையில் அவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் வாழ்த்து மழை
இந்த பதிவு வெளியானதும், ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பலரும், "சூப்பர் அச்சீவ்மெண்ட்", நீங்க ரொம்ப இன்ஸ்பிரேஷன், பிஸியான வாழ்க்கையிலும் படிப்பு முடிச்சது பெரிய விஷயம் என்று பாராட்டி வருகின்றனர்.
ஒரு செய்தி வாசிப்பாளராகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும் இருந்த அனிதா, கல்வியிலும் இப்படியான சாதனை செய்திருப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் அந்த பதிவின் கடைசியில் அவர் சொல்ல வார்த்தைதான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
அனிதா சம்பத் யார்?
அனிதா சம்பத் முதலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். தெளிவான உச்சரிப்பு, தைரியமான பேச்சு ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானார்.
அதன்பிறகு, பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் ஆனார். அந்த நிகழ்ச்சியில் அவர் வெளிப்படையாக பேசிய விதம், எமோஷனல் மற்றும் கோபத்தை மறைக்காமல் காட்டிய தன்மை இவை அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது.
அதே நேரத்தில் அந்த நிகழ்ச்சியின் மூலமாக அதிகமான விமர்சனங்களையும் சந்தித்தார். தன்னுடைய கஷ்டத்தை மட்டுமே அனிதா சம்பத் சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று பலரும் அவரை ட்ரோல் செய்தனர். அவருடைய காதல் கணவர் பிரபாவை பற்றி அவர் உருக்கமாக பேசியதை கூட சிலர் ட்ரோல் செய்தனர். ஆனாலும் அனிதா சம்பத்தின் காதலை பலர் பாராட்டவும் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா மற்றும் தொலைக்காட்சி பயணம்
செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா, பின்னர் சினிமாவிலும் சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகவும், சீரியலில் நடிகையாகவும் கலந்து கொண்டு வந்துள்ளார்.
நேர்மையான பேட்டிகள்
அனிதா சம்பத் பல பேட்டிகளில் தனது வாழ்க்கை போராட்டங்களை திறம்பட பகிர்ந்துள்ளார். செய்தி வாசிப்பாளராக இருந்த போது சந்தித்த சவால்கள், குடும்ப பின்னணி, பிக் பாஸ் அனுபவம், சமூக வலைதள விமர்சனங்கள் இவற்றை எல்லாம் நேர்மையாக பேசியது, அவரை இன்னும் நெருக்கமாக ரசிகர்களுடன் இணைத்தது.
ஒரு பக்கம் மீடியா, சினிமா, தொலைக்காட்சி என இதில் பிஸியாக இருந்தும், மற்றொரு பக்கம் தனது கல்வியை தொடர்ந்த அனிதா சம்பத், "கனவு இருந்தால் அதை எப்போதாவது அடையலாம்" என்பதற்கான சிறந்த உதாரணம் என்று பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், கடைசியில் இந்த பதிவு ஏப்ரல் ஃபூல்க்கு அனிதா சம்பத் வெளியிட்ட பதிவு என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் கடைசியில் இவர் இப்படி பண்ணிட்டாரே என்று அலுத்து கொள்கின்றனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications