கர்ப்பம் குறித்து அனிதா வெளியிட்ட வீடியோ.. குவியும் வாழ்த்து.. ரசிகரின் ஆபாச அட்வைஸ்க்கு ரியாக்ஷன்
சென்னை: செய்தி வாசிப்பாளராகவும் நடிகையாகவும் இருக்கும் அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் கர்ப்பமாக இல்லை என்று இன்னொரு வீடியோவில் அனிதா சம்பத் கூறி இருக்கும் நிலையில் அதற்கு ஆபாசமாக ரசிகர் ஒருவர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சமூக வலைத்தளத்தின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்தான் அனிதா சம்பத். இதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தைரியமாக தன்னுடைய கருத்துக்களை எடுத்து வைத்து இருந்தார்.
அதனாலயே அடிக்கடி பிக் பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்களிடம் இவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைப்படாமல் அனிதா சம்பத் தன்னுடைய விளையாட்டில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். அதே நேரத்தில் தன்னுடைய காதல் கணவர் பிரபா பற்றியும் அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தார். இவருடைய காதல் கதையை கேட்டு பலர் கதை சொல்லும் டாஸ்க்கில் தூங்கி வழிந்ததும் கூட இணையத்தில் அந்த நேரத்தில் வைரல் ஆகி கொண்டிருந்தது.

அதுபோல பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் தாறுமாறாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அவர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அவ்வபோது வெடித்துக் கொண்டிருந்தாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் இவர்கள் இருவரும் வெறித்தனமாக டான்ஸ் ஆடியதும் பலராலும் பாராட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனிதா சம்பத் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சர்க்கார், காப்பான், தெய்வ மச்சான் போன்ற பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். அதே நேரத்தில் instagram பக்கத்திலுயும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ போட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே இருந்து வந்தார். அடிக்கடி இவர் மாடலிங் போட்டோ சூட் நடத்திக் கொண்டிருப்பதால் அந்த புகைப்படங்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் இவர் பொழுதுபோக்குக்காக தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று ஃபில்டர் வீடியோ ஒன்றை instagramல் ஸ்டோரியாக பதிவிட்டு இருந்தார். ஆனால் அதை உண்மை என்று நினைத்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதனால் உடனடியாக அதற்கு பதில் கொடுக்கும் விதமாக புதிய வீடியோ ஒன்றை instagram பக்கத்தில் அப்லோடு செய்திருந்தார்.
அதில் நான் கர்ப்பமாக இல்லை இது ஒரு விளையாட்டு மட்டுமே அதற்கே இவ்வளவு பேர் வாழ்த்து சொல்லி இருக்கிறார் என்று கேட்டிருந்தார். இந்த நிலையில் இந்த பதிவிற்கு ஒரு ரசிகர்,"இந்த விளையாட்டு விளையாடும் நேரத்தில் விளக்கு அணைத்துவிட்டு வேலையை பார்த்து இருந்தால் கர்ப்பமாக இருப்பீர்கள். ஐடியா இல்லாதவர்கள்" என்று கருத்து ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து அனிதா சம்பத் அந்த கமெண்ட்க்கு சிரிப்பு இமோஜிகளை ரிப்ளை செய்து இருக்கிறார். தற்போது இது இணையத்தில் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications