90ஸ் தம்பிகளா கொஞ்சம் வளருங்கள்.. குத்தி விட்டுப் போன அனிதா.. குபீரென குதூகலித்த ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவிகளில் செய்திவாசிப்பவர்களுக்கும் நடிகர்களைப் போலவே ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதில் முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் அனிதா சம்பத் .

இவர் நியூஸ் வாசிப்பாளராக மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் பல குறும் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

இவருடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில்களை அனுப்பி ரசிகர்களின் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவரை பார்த்து ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு இவர் அதிரடியாக திருப்பிக் கொடுத்து இருக்கும் பதில்தான் பரபரப்பாக இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.

மனம் கவர்ந்த அனிதா

மனம் கவர்ந்த அனிதா

அனிதா சம்பத் பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அவருடைய கணவர் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்திருக்கிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது கணவருடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அவர் மீது இருக்கும் காதல் கவிதைகளாக வெளிப்படுத்துவார்.

பாசக்காரராச்சே

பாசக்காரராச்சே

அதிலும் ஆரம்பத்திலிருந்து தன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்குமே இவர் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. தற்போது அனிதா நான்காவது ஃபர்ஸ்ட் மீட்டிங் டே கொண்டாடி இருக்கிறார். இவர்கள் காதலிக்க ஆரம்பித்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டாலும் திருமணம் முடிந்து ஒருவருடத்தில் முடித்து இருக்கிறார்கள் .ஆனால் இன்று வரைக்கும் நாளுக்கு நாள் அதிகமாக பாசத்தையும் காதலையும் பொழிந்து கொண்டிருக்கிறார் .

சுடச் சுட பதிலடி

சுடச் சுட பதிலடி

இந்த நிலையில்தான் அனிதாவை பார்த்து ஒரு ரசிகர் நீங்கள் திருமணம் ஆகி விட்டீர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் உங்கள் காலில் மெட்டி கூட போடவில்லை என்று ஒரு கேள்வியை தூக்கி போட்டு இருக்கிறார். அதற்கு அனிதாவும் கூலாகவே பதிலை கூறி ரசிகரின் வாயடைத்து இருக்கிறார். தாலி மெட்டி போடுவது என்னுடைய விருப்பம் அது போடலன்னா கலாச்சார கெடுதல் என்று யாரும் நினைக்கவேண்டாம்.

 தாலி ரொம்பப் பிடிக்கும்ப்பா

தாலி ரொம்பப் பிடிக்கும்ப்பா

என்னுடைய புரோபஷனுக்கு எது சரியோ அது மாதிரிதான் நான் நடந்து கொண்டேன் . நான் பள்ளி படிக்கும் பெண்ணாக நடிக்கும் போது தாலி எல்லாம் போட்டுக்கிட்டு இருந்தா நல்லா இருக்குமா. அந்த மாதிரிதான் நடிக்கும்போது அப்படித்தான் இருப்போம். ஆனால் அதைவிட பெரியது எல்லாமே போட்டுக்குவோம். நான் மெட்டி போடுவதும் போடாததும் என்னுடைய தனிப்பட்ட விருப்பம். அதற்கு முழு சுதந்திரத்தை தனது கணவர் எனக்கு தந்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

வேலைக்கு செட்டாகாது

வேலைக்கு செட்டாகாது

அதுமட்டுமல்லாமல் நான் தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கவில்லை. எனக்கும் தாலி மெட்டி போடுவது ரொம்பவும் பிடிக்கும். ஆனால் அது நமது ப்ரொபசனுக்கு எப்பவும் செட்டாகாது. ஆனால் போட வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக எல்லாம் போடுவோம் என்று அதிரடியாக பதிலளித்திருக்கிறார். அதுவும் 90ஸ் தம்பிகளா இன்னும் வளருங்கள் என்றும் குத்தி விட்டுப் போயிருக்கிறார்.

90ஸ் கிட்ஸ் வளருங்கப்பா

90ஸ் கிட்ஸ் வளருங்கப்பா

இதை அவருடைய ரசிகர்கள் எங்க தலைக்கு தில்ல பாத்தியா என்று அவரை உசுப்பேற்றி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் அவருடைய கணவர் கூட அனிதா பொங்கி எழுந்துவிட்டார் என்று கம்மண்ட் போட்டிருக்கிறார். ஆனால் இந்த மாதிரி பதிலுக்கு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் 90ஸ் கிட்ஸ் அம்மம்மா இது தப்பம்மா என்று கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+