நடிகர் விஜயகுமார் மகள் அனிதாவா இது! பிரபல ஸ்டண்ட் மாஸ்டரோடு திடீர் புகைப்படம்.. காரணம் இதுதானா?
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதா விஜயகுமார் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் அனிதா விஜயகுமார் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவுடன் சில புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்.
விஜயகுமார் வீட்டில் எல்லோரும் நடிகர்களாக இருக்கும் நிலையில் அவருடைய இரண்டாவது மகள் அனிதா மட்டும் மருத்துவராக இருக்கிறார். மருத்துவராக இருக்கும் அனிதா இப்பொழுது ஸ்டண்ட் மாஸ்டர் ரோடு எடுத்த புகைப்படம் இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

நடிகர் விஜயகுமார் ஆரம்பத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி பிறகு குணசித்திர வேடங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்கள். வெள்ளிதிரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதிகமாக இவர் நடிக்கும் கேரக்டர்கள் பெருமை வாழ்ந்த கேரக்டர்களாக தான் இருக்கிறது. அதிலும் நாட்டாமை, நட்புக்காக போன்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வேற லெவலில் இருக்கும்.
அதனாலேயே இவருக்கு நாட்டாமை என்ற செல்ல பெயரும் மக்கள் மத்தியில் உண்டு. அதை வைத்தே விஜயகுமார் சீரியல்களிலும் குணச்சித்திர வேடங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் விஜயகுமாருக்கு முத்து கண்ணு என்ற மனைவி இருக்கிறார். அவருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
ஆனால் முத்துக்கண்ணுவோடு ஆரம்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்திருந்தார். அந்த நேரத்தில் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். மஞ்சுளாவுக்கு வனிதா, பிரித்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இதில் நடிகை வனிதா மட்டும் குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறார். ஆனால் மீதமுள்ள எல்லோருமே ஒரே குடும்பமாக சந்தோஷமாக இருக்கின்றனர்.
அடிக்கடி புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா மட்டும் தனக்கு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தாலும் அதை விட்டுவிட்டு மருத்துவம் படித்து டாக்டராகி இருக்கிறார். அதுபோல அனிதாவின் கணவர் கோகுலும் டாக்டர்தான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களை தொடர்ந்து அனிதாவின் மகள் மற்றும் மகனும் டாக்டராக மாறி இருக்கின்றனர். இந்த நிலையில் அனிதாவின் மகள் தியாவிற்கு சமீபத்தில் திருமணம் முடிவடைந்தது. அந்த செய்தி இணையத்தில் அதிகமாக பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து நேற்று நடிகர் அருண் விஜய் 36 ஆவது திரைப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. அதில் எடுத்த புகைப்படங்களையும் அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதுபோல அருண் விஜய்க்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் அனிதா தெரிவித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து நடிகராகவும் ஸ்டாண்ட் மாஸ்டராகவும் இருக்கும் சில்வாவுடன் சில புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "என்னுடைய ஃபேவரைட் சில்வா மாஸ்டர். அருண் விஜய்யின் எல்லா ஸ்டண்டுக்கும் காரணம் இவர்தான்" என்று அவரை பாராட்டி அவரை டேக் செய்து இருக்கிறார். இந்த புகைப்படம் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications