Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்கிட்ட எல்லா விஷயமும் இல்ல! எல்லோரும் தப்பா நினைக்கிறீங்க! விஜயகுமார் மகள் வெளியிட்ட திடீர் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் எல்லோரும் என்கிட்ட எல்லா பொருட்களும் இருக்கிறது அதனால் சந்தோஷமாக இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள், ஆனால் உண்மை அதுவல்ல. உங்களுக்கு சந்தோஷம் வேண்டும் என்றால் இந்த இரண்டு விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

நடிகர் விஜயகுமார் பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தை சார்ந்த பலரும் சினிமாவில் நடித்திருக்கிறார்கள். விஜயகுமார் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து பிறகு கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இப்ப வரைக்கும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

television anitha

தமிழ் சினிமாவில் நாட்டாமை என்று செல்லமாக அழைக்கப்படும் விஜயகுமார் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜயகுமார் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர்.

அப்போது முதல் மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மஞ்சுளாவிற்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். ஆனால் மஞ்சுளா மறைவதற்கு முன்பே விஜயகுமாரின் இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகளும் ஒரே குடும்பமாக தான் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

television anitha

அதுபோல விஜயகுமார் குடும்பத்தில் அவருடைய இரண்டாவது மகள் அனிதாவை தவிர அனைவருமே திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். அனிதாவிற்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ஆனால் அனிதாவின் அம்மா அவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்று மறுத்துவிட்டார்.

அதனாலேயே அனிதா மருத்துவம் படித்து வெளிநாட்டில் இத்தனை நாட்களாக மருத்துவராக வேலைப்பார்த்து வந்தார். சமீபத்தில் வேலையில் இருந்து விலகி இருந்தார். அதற்குகாக காரணம் இத்தனை நாட்களாக நான் அவசர சிகிச்சை பிரிவில் வேலை பார்த்து வந்ததால் என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்களை என்னால் அனுபவிக்க முடியவில்லை.

television anitha

அதனால் இனி வேளையில் இருந்து ஓய்வு பெற்று குடும்பத்தோடும் என்னுடைய கனவுகளையும் நிறைவேற்றிக் கொள்ளப் போகிறேன் என்று கூறியிருந்தார். இது அதுபோல சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு வருவார்.

இவரை பார்க்கும் ரசிகர்கள் இவர் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறார் என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். இது குறித்து இன்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில் என்னிடம் அதிகமான ரசிகர்கள் நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். உங்களை நாங்கள் பல வருடங்களாக பாலோ பண்ணுகிறோம்.

பார்க்கும் போது உங்களுக்கு எந்த கவலையும் இருந்தது போல தெரியவில்லை. அதற்கு காரணம் உங்களிடம் எல்லா வசதிகளும் இருப்பதால் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னிடம் எல்லாமே இருக்கிறது என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருப்பதை வைத்து சந்தோஷமாகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற ஆள் நான் .

பொதுவாக பணம் என்பது எல்லோருக்கும் தேவை. அதற்காக நாம் கடுமையாக வேலை செய்ய வேண்டும். ஆனால் நம்முடைய விருப்பத்தையும் நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் அப்போதுதான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும். அதிலும் நம்மிடம் இருப்பதை வைத்து நாம் அதற்குள் சந்தோஷப்படுவது தனி சுகம்.

நம்மிடம் இல்லாததை அடுத்தவரிடம் இருக்கிறதே என்று அதை நினைத்து மனதிற்குள் நினைத்து கொண்டிருந்தால் நாம் இருப்பதையும் சந்தோஷமாக கொண்டாட முடியாது. எல்லோருக்கும் வாழ்க்கையில் அர்த்தம் புரிய வேண்டும் என்றால் இரண்டு இடத்திற்கு போக வேண்டும் என்று சொல்வேன்.

television anitha

முதலாவது மருத்துவமனைக்கு போக வேண்டும். மருத்துவமனையில் அங்கு இருக்கும் நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் படும் கஷ்டம் போன்றவற்றை பார்த்தாலே நாம் இந்த உலகத்தில் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறோம் என்று புரிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக சுடுகாட்டுக்கு போக வேண்டும். எவ்வளவு ஆடம்பரம் இருந்தாலும் சுடுகாட்டில் நொடிப்பொழுதில் சாம்பலாக மாறிவிடுகிறோம். இவ்வளவுதான் வாழ்க்கை எதற்காக அது இல்லையே? இது இல்லையே? என்று ஏங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பது புரியும் என்று அந்த வீடியோவில் வாழ்க்கையின் தத்துவத்தை அழகாக எடுத்துரைத்திருக்கிறார். இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+